Saturday, January 30, 2010

பிரெசிடென்ட் அபுபக்கர் ஹஜ் குழுத் தலைவர்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ப்ரெசிடென்ட் விடுதியின் உரிமையாளர்களில் ஒருவரான அபுபக்கர், தமிழ்நாடு ஹஜ் குழுவுக்குத் தலைவர் ஆகியுள்ளார்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 12 உறுப்பினர்கள், இவரைத் தேர்வு செய்ததாக அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கலவை உறுப்பினர் ஆரூண், கீழக்கரை நகரமன்றத் தலைவர் அக்கீம், பழனி நகரமன்றத்தின் சுலைமான் பாட்சா, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் அஸ்கர் அலி தலா, வக்ஃப் வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் ஹஜ் குழுவில் இடம்பெற்றுள்லவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ப்ரெசிடென்ட் அபுபக்கர், வடமாநில காங்கிரஸ் தலைவர்களுடன் மிகவும் இணக்கமாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: