Monday, January 18, 2010

இன்றைய தமிழகம் - இலவசம் முற்றிலும்


ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார்-எதற்கு இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன்-கஷ்டப் படாமல் எப்படி வாழ்க்ககையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார்- என்னைப் பார்.
1ருபாய் அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்.
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!


உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?முதலாமர் சிரித்தபடி கேட்டார்-நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டுக் குடிமகன்
என் நாடடின் உணவுக்கு அரிசி 1 ரூபாய்.
சுமைப்பதற்கு கேஸ_ம் அடுப்பும் இலவசம்.
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்.
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன்-உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்த படி உரைத்தார்.
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்.
குழந்தைக்குச் சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன் மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்லபஸ் பாஸம் இலவசம்,


தேவையென்றால் சைக்கிளும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்.
1பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்.
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்


நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!
வியந்து போனேன் நான்!!!
என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு.
ஓன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!
இதில் நீ எந்த வகை? ஏதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பெறியாகிறாய்-இலவசம் நின்று போனால் உன் நிலை!!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால்-இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை.
தமிழா விழித்தெழு-உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு-அழித்திடு
 தமிழகத்தைத் தரணியில் உயர்த்திடு!!!
நாளைய தமிழகம் நம் கையில்.
உடன்பிறப்பே சிந்திப்பாயா!!!


மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!!!

No comments: