இஸ்லாம் நரக நெருப்பையும் - அதன் வேதனையையும் பற்றி கடினமாக எச்சரிக்கை செய்கின்றது. நரகத்தின் அகோரமும் அதன் தீப்பிழம்புகளும் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணங்கள் சிறிய அளவில் பூமியி்ன் சிற்சில பகுதிகளில் அவ்வப்போது தெரியத்தான் செய்கின்றன.
66:6. முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
நல்லுணர்வு பெறும் உள்ளங்களுக்கு இந்த அடையாளங்கள் மகத்தானதாகும். மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:24)
(ஓரிரைக் கொள்கையில் நம்பிக்கையற்று வாழும்) அவர்களுக்கு நரகத்தில் விரிப்புகளும்இ அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.(அல்குர்ஆன் 7:41)
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும்இ பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
(அல்குர்ஆன் 25:12)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களுக்காக நாங்கள் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம். இந்த பயங்கர வேதனையிலிருந்து எங்களை தூரமாக்கி வைப்பாயாக !!! .
No comments:
Post a Comment