துபாயில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் சேர்ந்த இளைஞர் எம்.கே.அக்பர் அலிக்கு சமுதாய செய்திக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவர் அஸ்கான் ரோடு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அமீரகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் ஒன்று கல்ஃப் நியூஸ். இந்நாளிதழ்களில் சில மாதங்களுக்கு முன்னர் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வண்ணம் சமுதாய செய்திகள் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் பல்வேறு நாட்டவரும் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வண்ணம் பல்வேறு தகவல்கள், புகார்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி அரசுத்துறையின் கவனத்திற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த மாதம் அனுப்பப்பட்ட சமுதாயச் செய்திகளில் அக்பர் அலி அனுப்பிய செய்தியில் துபாயில் உள்ள அல் மம்சார் பூங்காவில் உள்ள வழிகாட்டும் வரைபடம் சேதமடைந்து இருப்பதனை சுட்டிக்காட்டினார். இச்செய்தி சமுதாயச் செய்திகளில் சிறப்பிடம் பெற்று அவருக்கு சிறப்பு விருதினை பெற்றுத்தந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் தான் மம்சார் பூங்காவிற்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்ற போது இந்த வழிகாட்டி வரைபடம் சரியான முறையில் இல்லாததை அந்நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களுக்குப் பயன் ஏற்படவேண்டும் என்ற முறையில் யோசித்து கல்ஃப் நியூஸ் நாளிதழுக்கு அனுப்பினேன். முதல் முயற்சியிலேயே தனக்கு இவ்விருது கிடைத்திருப்பது மகிழ்வளிக்கிறது என்றார் அக்பர் அலி. இதன் மூலம் சமுதாயப் பணியினை மேலும் செய்வதற்கு உற்சாகமளிக்கும் என்றார். விருது பெற்ற அக்பர் அலி அலுவலக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

No comments:
Post a Comment