Tuesday, March 30, 2010

Eggs Are A Superfood

Scientists have found that eggs are one of the most nutrient-dense foods available, and they should be considered a superfood, due to their ability to boost health and even help tackle obesity, according to researchers behind a new study.

Eggs are rich in just about every nutrient, especially fat-soluble vitamins A and D. Eggs also provide sulfur-containing proteins, necessary for healthy cell membranes. They are an excellent source of special long-chain fatty acids called EPA and DHA, which make them a valuable brain food.

One of the most important substances in egg yolks is lecithin, which is vital for many of the body's metabolic processes, including the dispersal of fat deposits, as well as preventing the formation of gallstones and encouraging the speedy conversion of body fats into energy. Egg yolk is also the most concentrated known source of choline, a B vitamin found in lecithin that is necessary for keeping cholesterol moving in the blood stream.

Study Details

In the study, researchers discovered that eggs can play an important role in maintaining health as well as helping with weight-loss and dieting.

The nutrition scientists analyzed data from 71 previously published research papers and reference documents that examined egg nutritional composition and the role of eggs in the diet.

They discovered that, despite being low in calories, eggs are a rich source of protein and are packed with essential nutrients thought vital to good health, particularly vitamin D, vitamin B12, selenium and choline.

The report also confirms that among protein foods, eggs contain the richest mix of essential amino acids - crucial for both children and young adults since a balance of amino acids is required for proper growth and repair.

Also, the high levels of antioxidants found in eggs means they could even help prevent age-related macular degeneration - an eye condition that is the leading cause of blindness.

The research team highlighted data from previous research in the US which found that people who ate eggs had higher intakes of all nearly all nutrients compared with non-egg eaters.

The lead author of the report said:

"The health benefits of eggs would appear to be so great that it's perhaps no exaggeration to call them a superfood - they are one of the most nutrient-dense foods available.

One of the key findings of the report - entitled The Nutritional Properties and health Benefits of Eggs - is that eggs are an important dietary source of vitamin D and could significantly help to boost daily intake.

Low vitamin D levels have been linked with a host of health conditions including poor bone health, cancer, heart disease, multiple sclerosis, immune disorders and mental health problems.

Tips for Using Eggs

When buying eggs, always choose organic, free range eggs. They are superior in both taste and nutrients. They contain more omega-3 fatty acids than that of battery-farmed eggs, and much higher levels of vitamin D and E. Also, the yolks of free-range eggs are usually a deep orange color, unlike the pale yellow yolks of battery eggs, showing that they have a much higher beta carotene content.

"Eggs are not only low in calories but are packed with nutrients that are essential to healthy living. They are an ideal food at every stage of life, as well as being easy to cook and enjoyable to eat.

"There are clear nutritional benefits to eating eggs on a regular basis. Emerging evidence suggests that eggs may be beneficial for satiety, weight control and eye health."

Courtesy : http://www.healthymuslim.com/

அன்புள்ள தங்கைக்கு...

நன்றியுடன் நடப்போம்...


அன்புள்ள தங்கைக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

நான் உன் வீட்டில் இருந்த நேரத்தில் நீ சிலசமயம் நம் மச்சானுடன் பேசும் விதத்தில் மிகப்பெரும் குறையைக் கண்டேன். அடிக்கடி நீ அவரிடம் “என்ன செய்து விட்டீர்கள்? என்று பேசினாய். இது சரியான வார்த்தை அல்ல.

கணவன்-மனைவியிடையே சண்டை ஏற்படுவது சகஜம்தான். சண்டைபோடும் போதுகூட இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது எனும்போது, நீ சாதரணமாக பேசும் போதுகூட இந்த வார்த்தையை பயன்படுத்தியது சரியல்ல!.

தம்பதியரிடையே கருத்துப் பிணக்கும், வாய் தகராறும் ஏற்படுவது சில சமயம் ஆரோக்கியமாகவே இருக்கும். இது ஆரோக்கியமாக இருக்கும்வரை எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தாது.

சில வீடுகளின் கணவன் நல்லவிதமாக தன் மனைவியிடம் நடந்து கொண்டாலும் கூட, சில சமயங்களில் கணவனை புண்படுத்தும் வகையில் மனைவி பேசிவிடுகிறாள்.

சிறுசிறு பிரச்சினைகளில் ஏற்படும் பிணக்கு, காலப்போக்கில் பெரியதாக வெடிக்கும் போது கணவனை தரக்குறைவாக பேசும் நிலைக்கு சில மனைவியர் வந்து விடுகின்றனர்.

கணவனிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள துவங்கும் சில மனைவியர் அவனை ஆட்டிப்படைக்கும் ஆணவப் போக்குடையவர்களாக மாறுகின்றனர்.

சில வீடுகளில் கணவன் மூலமே பிரச்சினை ஏற்படுவதும் உண்டு. “மோகம் முப்பதுநாள், ஆசை அறுபது நாள்” என்று கூறுவர் இதை உண்மைபடுத்தும் வகையில் தன் கணவன் நடந்து கொண்டதும், அவன் மீது எரிச்சல் படத்துவங்கும் மனைவி, கணவனை கீழ்தரமாக பேச ஆரம்பித்து விடுகிறாள்.

இதுபோல் கூட்டுக்குடும்பம் என்ற பெயரில் வாழும்போது தம்பதியரின் நலனை திருமணமான புதிதில் சுற்றிஇருப்போர் ஆர்வம் காட்டினாலும், காலம் சிறிது சென்றதும் தம்பதியர் தனித்து இருந்தால் கூட எரிச்சலுடன் பார்க்கத் துவங்குவர். உடலுறவில் ஈடுபட்டால் குளிக்க வேண்டியது வருமே இதனால் மாமியார், நாத்தனார் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்களே என்ற காரணத்தைக்காட்டியே உடலுறவுக்கு மறுக்கத்துவங்கும் மனைவி இறுதியில் கணவனிடமிருந்தும் படுக்கையிலிருந்தும் பிரிந்து, கணவனை எரிச்சலுடன் பார்க்கத் துவங்கிவிடுகிறாள்.

சில தம்பதியர் திருமணமான புதிதில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதுபோல் இருந்தாலும் காலப்போக்கில் தொய்வுவிழுகிறது. உதாரணமாக, குழந்தை பிறந்ததும் குழந்தை வளர்ப்பில் உள்ள ஆர்வம் காரணமாக தன் கணவனை ஒதுக்கிவைக்க முயலும் மனைவியர், காலப்போக்கில் கணவனை புறக்கணிக்க துவங்கி விடுகின்றனர்.

கணவனை எரிச்சலுடன் பார்க்கத் துவங்கி, சண்டை தான் வாழ்க்கை என்றாகிவிடுவர் பெண்கள். நாகரீகம் கருதி, மானம்மரியாதையைக் கருதி மனைவியின் ஏச்சையும், பேச்சையும் பொறுத்துக்கொள்கிறான் கணவன்.

நரகத்தில் உள்ளோரில் பலரை பெண்களாகத் தான் கண்டேன் அவர்கள் தங்களின் கணவனுக்கு (விசுவாசமின்றி நன்றி மறந்து) மாறு செய்வதே (இதற்குக் காரணமாகும்) அப்பெண்கள் காலம் முழுவதும் உன்னிடம் நன்மையை அடந்தாலும், உம்மிடம் குறையைக் கண்டு விட்டால் “ உம்மிடம் அறவே (இதுவரை) நான் நல்லதையே கண்டதில்லை” என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி)

கணவனிடம் ஒரு மாதிரி பேசத்துவங்கி, பிறகு மனதை நோகடித்துப் பேசி, இறுதியில் விசுவாசமின்றி, நன்றி மறந்து நடந்தால் நரகம் உறுதி என்பதை கவனத்தில் கொள். கணவரை தரம்தாழ்த்தி பேசும் முறையை மேற்கொள்ளாதே!.

அன்புடன். உன் அண்ணன்.

நன்றி : மக்கள் உரிமை

Sunday, March 28, 2010

வயது கல்விக்குத் தடையா? 53 வயதில் 10 ஆம் வகுப்புத் தேர்வு!

கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதைத் தன்னம்பிக்கையுடன் தன் 53வது வயதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பெண் ஒருவர் நிரூபிக்கிறார்.
கேரளா மாநிலம், கொழிஞ்சம்பாறையைச் சேர்ந்தவர் செண்பகாதேவி; வயது 53. இவர், தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எழுதி வருகிறார். பேரக்குழந்தைகளுடன் தொலைக்காட்சி மெகா தொடர்களிலும் மூழ்கிப் போகும் வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வந்திருக்கும் திருமதி செண்பகாதேவியிடம் செய்தியாளர்கள் ஆச்சரியமாக கேள்வி எழுப்பிய போது, "தொடர்ந்து படிக்கும் ஆர்வம் இருந்தது; இளம் பருவத்தில் அதற்கு இயலாமல் போய் விட்டது. இப்போது சந்தர்ப்பம் கிடைத்ததால் படிக்கிறேன்" என்றுள்ளார்.
அவர் மேலும் கூறும் போது, "பொள்ளாச்சியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின், வீட்டில் படிக்க அனுமதிக்கவில்லை. எனது 17ம் வயதில் திருமணம் நடந்தது. கணவரின் சொந்த ஊர் கொழிஞ்சம்பாறை என்பதால் அங்கு சென்று விட்டேன். அதன்பின், படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தியும், மலையாளமும் டியூஷன் மூலம் கற்றேன்.

எனது கணவர் ஜெகதீசன், 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்கிறார். மகள் பி.எட்., படித்து தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். மகன் எம்.பி.ஏ., படித்து, சொந்தமாக வியாபாரம் செய்கிறார். எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது; குடும்பத்தார், என்னை ஊக்கப்படுத்தினர். மூன்றாண்டுகளாக பத்தாம் வகுப்புக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிப் படித்து வந்தேன்.

கணக்கு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்காக, கேரளாவிலுள்ள தனியார் டியூஷன் சென்டரில் வகுப்புகளுக்குச் சென்றேன். தினமும் மூன்று மணி நேரம் படிப்பதற்காக ஒதுக்குகிறேன். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பும், கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளது" என்று படிப்பின் மீதான தன் ஆர்வத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகின்றார்.
நன்றி : இந்நேரம்

Moral Story - The Turtles

A turtle family decided to go on a picnic. the turtles, being naturally slow about things, took seven years to prepare for their outing. Finally the turtle family left home looking for a suitable place. During the second year of their journey they found a place ideal for them at last!

For about six months they cleaned the area, unpacked the picnic basket, and completed the arrangements. Then they discovered they had forgotten the salt. A picnic without salt would be a disaster, they all agreed. After a lengthy discussion, the youngest turtle was chosen to retrieve the salt from home. Although he was the fastest of the slow moving turtles, the little turtle whined, cried, and wobbled in his shell. He agreed to go on one condition: that no one would eat until he returned. The family consented and the little turtle left.

Three years passed and the little turtle had not returned.. Five years...six years... then on the seventh year of his absence, the oldest turtle could no longer contain his hunger. He announced that he was going to eat and begun to unwrap a sandwich.

At that point the little turtle suddenly popped out from behind a tree shouting, 'See! I knew you wouldn't wait. Now I am not going to go get the salt.'

[Some of us waste our time waiting for people to live up to our expectations. We are so concerned about what others are doing that we don't do anything ourselves.]

மனிதர்களின் மூன்று பிரிவினர்கள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் தவிர்க்க இயலாத மறுமையில் அல்லாஹ்வுத்தஆலா மனிதர்களை மூன்று வகைப்படுத்துவதாகவும், அந்த மூவருக்கும் கிடைக்க கூடிய கூலிகள் மற்றும் தண்டனைகளைப் பற்றி விரிவாக தனது இறுதி வேதமாகிய அல்குர்ஆனில் ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி) என்ற அத்தியாயத்தில் (அ.எண்: 56) விரிவாக கூறுகிறான்.

மூன்று வகைப்படுத்தப்படும் மனிதர்கள்!

“மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் – அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை. அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்¢ (நல்லோரை) உயர்த்தி விடும். பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது. இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள். (அல்குர்ஆன் 56:1-7)

யார் அந்த மூன்று பிரிவனர்கள்?

(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் – வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)

(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் – இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)

(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள். (அல்குர்ஆன் 56:8-10)


முதலாமவர் மற்றும் மூன்றாமவர்களுக்கும் கிடைக்கும் நற்பாக்கியங்கள்: -

(மூன்றாமவர்) இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள். இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர். முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் – (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது – ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.

இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). (அல்குர்ஆன் 56:11-26)

வலப்புறத்தார்களுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்கள்!

இன்னும் வலப்புறத்தார்கள் – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?) (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்; இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் – அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை – மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). (அல்குர்ஆன் 56:27-40)

இடது புறத்தார்களின் நிலை!

இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?) (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் – அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள். (அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை. (அல்குர்ஆன் 56:41-44)

இடது புறத்தார்களுக்கு ஏன் இந்த இழிநிலை?

நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர். ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர். மேலும், அவர்கள்: ‘நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?’ என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். ‘அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?’ என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 56:45-48)

இடது புறத்தார்களுக்கு கிடைக்கும் உணவு மற்றும் பானம் மகா கொடியது:

(நபியே!) நீர் கூறும்: ‘(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும். ‘குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள். அதற்குப் பின்னர்: ‘பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள், ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள். ஆகவே, ‘அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள். அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள். ‘பின்னும் ஹீம் – தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.’ இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும். (அல்குர்ஆன் 56:49-56)

மரணத்தருவாயில்…

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது – அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் – நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே! (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின். அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு. அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால், ‘வலப்புறத்தோரே! உங்களுக்கு ‘ஸலாம்’ உண்டாவதாக’ (என்று கூறப்படும்). ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால் கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும். நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்). நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும். எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. (அல்குர்ஆன் 56:83-96)

நன்றி : சுவனதேன்றல்

Saturday, March 27, 2010

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே! - by Dr. Paul Craig Roberts

முஸ்லிம்களோ சனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன ‘இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்’ மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் ‘பாரசீக வளைகுடா’ என்கிறார்கள், அரேபியர் ‘அராபிய வளைகுடா’ என்கிறார்கள். இதுதான் பிரச்சினை!

இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற முடியாதிருப்பதற்குக் காரணமும் முஸ்லிம்களுக்கிடையே காணப்படும் பிரிவினைதான். மேலும், அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதும், அனேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கைப் பாவைகளை ஆட்சியில் அமர்த்தி அடக்கியாண்டுகொண்டு வருவதும் இதே பிரிவினையின் விளைவுதான்.

அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்ட எகிப்து, இஸ்ரவேலர்களின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்குத் துணைபோகிறது. இதைத் தட்டிக் கேட்கக்கூடாது என்பதற்காக எகிப்திய எதிர்க்கட்சியினரின் வாய்களை அமெரிக்க டாலர் கொண்டு அடைத்துவிட்டிருக்கிறார் ஹோஸ்னி முபாரக். இதற்கென்று இவர் பெறும் கைக்கூலி வருடத்திற்கு 150 கோடி டாலர்!

முஸ்லிம்கள் தம் சகோதரர்களையே காட்டிக்கொடுப்பதாக நாம் சொல்வதை நம்பாதவர்கள், ஈரானில்; ‘ஜனநாயகத்துக்கான நிறுவனம்’ என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்பின் தலைவர் கென்னத் டிம்பர்மேன் என்ற யூதர் சொல்வதைக் கேளுங்கள். ‘இந்த அமைப்பைத் ‘தன்னார்வுத் தொண்டு (நடுநிலை) நிறுவனம்’ என்று காட்டிக்கொண்டாலும், இதற்குச் செலவு செய்த பணம் 1995 இல் அமெரிக்க அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதுதான்’. (கூலி கொடுப்பவனுக்கு விசுவாசமாகத்தானே வேலை செய்வார்கள்!)

இப்போது நாம் சொல்வது என்ன என்பதை உணர்ந்திருப்பீர்கள். அமெரிக்காதான் மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் தமது கைப் பாவைகளைத் தலைவர்களாக நிறுத்திக்கொண்டு வருகிறது என்பது உண்மை.

அமெரிக்கா, கடந்த 10 வருடங்களாக, உக்ரைன், செர்பியா போன்ற நாடுகளிலெல்லாம் தமது அடியாட்களை நிறுவி, கிளர்ச்சி செய்வதற்குத் தயாராக்கி வருகிறது. இதற்குச் செலவான பெருந்தொகையில் ஒருபகுதி, ஈரானின் மூசாவிக் குழுவின் கைக்கும் எட்டியிருக்க வேண்டும். ஏனெனில், ஈரானுக்கு வெளியேயுள்ள தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களுடன் மூசாவிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், அவற்றின் மூலம்தான் இந்த டாலர்கள் கைமாறியிருக்க வேண்டும். “அஹமதின்னஜாத்” புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறிக் கலவரம் செய்வதற்கு மூசாவி செலவு செய்ததும் இதே அமெரிக்க டாலர்கள்தான்.

முன்பும், 40 கோடி டாலர்கள் செலவு செய்து ஈரானியர்களையே கிளர்ச்சி செய்யத் தூண்டிவிட்டதும் ஜோர்ஜ் புஸ்ஸின் அமெரிக்க அரசாங்கம்தான். யூதர்களின் பத்திரிகையான ‘வாஸிங்டன் போஸ்ட்’ 2007 இல் இச்செய்தியை வெளியிட்டதைப் பலரும் படித்திருப்பீர்கள். இதிலிருந்தும் அமெரிக்கா ஒரு பயங்கரவாதி என்பது உறுதியாகிறது.

மேலும், அண்மையில், பலூச் பிரிவினைவாதக் கும்பலின் தலைவன் அப்துல் மாலிக் ரிகி என்பவனை ஈரானியர்கள் கைது செய்திருந்தார்கள். ஈரானிய இஸ்லாயக் குடியரசுக் கெதிராக கிளர்ச்சி செய்வதற்காக கணக்கற்ற ஆயுதங்களும் பணமும் தருவதாக அமெரிக்க அரசாங்கம் உறுதி அளித்திருந்ததை அவன் ஏற்றுக்கொண்டான்.

அவனைத் துன்புறுத்தி உண்மைகளை வரவழைத்திருக்க வேண்டும். இதுதான் அமெரிக்கப் பாணி! ‘முதன்மை நாடு’, ‘மலையில் ஒளிரும் நகரம்’ , ‘உலகின் ஓளி’ என்றெல்லாம் தம்மைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவுக்கே முடியுமென்றால், ‘அற்பமான’ ஈரான் ஏன் துன்புறுத்தி உண்மையை வரவழைத்திருக்க முடியாது? ஈரானிய சிறையில் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறான் அந்த றிகியின் தம்பி ஒருவன். கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா நேரடியாகப் பணம் கொடுத்ததாகவும், எங்கெல்லாம் குண்டு வைக்கவேண்டுமென்று குறிப்பிட்டுக் கட்டளை பிறப்பித்திருந்ததாகவும் அவன் ஒப்புக்கொண்டான்.

தன்னலம் மட்டுமே ஒரே நோக்கம் என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தத்திற்கு ‘நிலையான சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்று பெயரிட்டிருப்பது ‘பொருத்த’மாய் இருக்கிறதில்லையா? 2001 அக்.7 இலிருந்து அமெரிக்காவினதும் ‘நேட்டோ’வினதும் கைப்பாவைகள், பெண்கள்-பிள்ளைகள்-கிராமத்திலுள்ள முதியோர்கள் போன்ற பெருந் திரளான மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். அதற்கு வசதியாக, ஹமித் கர்சாயியை ஆப்கானின் தலைவனாக நிறுவியிருக்கிறது அமெரிக்கா.

தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கர்சாயி செய்யும் ஊழல்களுக்குத் தேவையான பணத்தை வாஸிங்டன் வாரியிறைக்கிறது. கர்சாயி செய்யும் ஊழல்களும் நாட்டு மக்களுக்கு அவன் செய்யும் துரோகமும்தான், வாஸிங்டனின் அடக்கு முறையிலிருந்து தம் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் தாலிபான்களுக்கு பெரும் உந்துதலாயிருக்கிறது. கர்சாயி என்ற அடியாள் இல்லாதிருந்தால் அமெரிக்கர் எப்போதோ துரத்தியடிக்கப்பட்டிருப்பார்கள். சுயநலவாத அமெரிக்கா கொடுக்கும் பணத்தை ஆப்கானின் மற்றுமொரு பகுதியினருக்குக் கொடுத்து, ஆப்கானிகளைக்கொண்டே ஆப்கானிகளைக் கொல்ல வைப்பதினால்தான் இந்தக் கொடிய யுத்தம் 9 ஆண்டுகளாகத் தொடந்து கொண்டிக்கிறது.

‘பெண்ணுரிமை’, ‘சுதந்திரம்’ என்றெல்லாம் பீற்றிக்கொண்டு, அமெரிக்காவிற்குக் கொடி பிடித்துத்திரியும் கோழைகள், நாம் இங்கு குறிப்பிடும் கருத்துக்களை அர்த்தமற்ற குப்பை என்று வர்ணிக்கக் கூடும். மேலும், பெண்ணுரிமையைப் பாதுகாக்க வென்றும், குடும்பக்கட்டுப்பாட்டை அனுமதித்துப் பெண்களின் நலத்தையும் வாழ்வையும் முன்னேற்றுவதற்கென்றும், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கென்றும்தான் அமெரிக்கா பாடுபடுகிறதென்று இவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்யவும் கூடும். ஓவ்வொரு கிராமமாக, நகரமாக அழித்தேனும் இதைச் செய்து முடிப்பார்களாம். ‘நாங்கள் எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுபவர்கள். இங்கு வந்திருப்பதே ஆப்கான் மக்களுக்கு உதவி செய்வதற்காகத்தான். உலகப்படத்திலே ஆப்கானிஸ்தான் எங்கிருக்கிறதென்பதுகூட அநேகமான எமது அமெரிக்க மக்களுக்குத்தெரியாது. இருந்தும், நாங்கள் ஆப்கானியர்மீது அதீத அன்பு செலுத்துகிறோம்’- என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்!

இந்தக் கோழைகள் எதிலிருந்தோ ஆப்கானிஸ்தானைக் காப்பாற்றப்போவதாக மார்தட்டிக் கொள்ளும் அதே வேளை, வெள்ளை மாளிகையும் காங்கிரசும் சேர்ந்துகொண்டு அமெரிக்கரின் வயிற்றிலடித்து, அவர்களின் ‘மெடிகெயார்’ இலிருந்து 500 பில்லியன் டாலர்களைத் ‘திருடி’த் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. பணம் படைத்தவர்கள் மேலும் செல்வம் குவிக்கு முகமாக அமெரிக்காவுக்கு வெளியே வேலை வாய்ப்புக்களை வழங்கிவிட்டதினால், வேலையற்ற அமெரிக்கர்களுக்கான கொடுப்பனவுகள் வற்றிப்போயின. கடந்த பெப். 26 அன்று அமெரிக்க செனட்டினால் கொடுப்பனவுத் தொகையை ஒதுக்க முடியாது போய்விட்டது. வரவுசெலவுத்திட்டத்தில் 10 பில்லியன் துண்டு விழும் என்பதைக் காட்டி, இந்தக் கொடுப்பனவுத் தொகையை வெட்டிவிட்டார் ஜிம் பன்னிங் என்ற செனட்டர்.

பெருந்தொகையினரான அமெரிக்கர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அபகரிக்கும் முதலீட்டு வங்கிகளுக்கு வழங்கும் தொகையையும் முஸ்லிம் நாடுகளில் யுத்தம் செய்வதற்கென்று செலவிடப்படும் கோடானு கோடி டாலர்களுக்கு தொகையிடப்படாத, வெற்றுக் காசோலைகள் செல்வதை மட்டும் இந்த, அரச வருமானத்துறைக்குப் பொறுப்பான பன்னிங் என்பவர் கண்டுகொள்வதில்லை!

ஏற்கனவே ‘வால் ஸ்ட்ரீட்’ முதலீட்டு வங்கிகளிடம் தமது ஓய்வூதியத்தை இழந்தும் அமெரிக்காவுக்கு வெளியே வழங்கப்பட்டுவிட்டதனால் வேலை வாய்ப்புக்களை இழந்தும் தனித்தனியாக, ஒருங்கிணையாமல் வாழும் அமெரிக்கர்களின் பெயர்களில் இந்தப்பாரிய தொகைகளை எழுதிவிடுகிறார் பன்னிங்.

தமது மக்களையே ஏமாற்றும் அமெரிக்காவை யார்தான் நம்புவார்கள்? ஆப்கானிஸ்தானுக்கு முன்னேற்றமாம்! அங்குள்ள பெண்களுக்கு விடுதலையாம்! தமது செல்வத்தைச் செலவு செய்து, இரத்தம் சிந்திப் பாடுபட்டு அரைவாசி உலகிற்கு அப்பால் வாழும் ஆப்கானியர்களுக்கு உதவுவார்களாம்! எந்த மடையன் நம்புவான்?

பாகிஸ்தான் தனது மக்கள் மீதே போர் தொடுத்து, பலரைக்கொன்றும் இன்னும் பலரை, உடைமைகளை விட்டுவிட்டு ஓடச்செய்தும் விடுவது அமெரிக்காவின் கட்டளையினால்தான். இதனால் அதிகரிக்கும் இராணுவச் செலவினால் வரவுசெலவுத்திட்டத்தில் துண்டு விழுவதை ஈடு செய்ய முடியாதிருக்கிறது. மக்களின்மீது மேலும் வரிகளை விதிக்கும்படி அமெரிக்க கருவூலத்தின் (Treasury) துணைச்செயலர் நீல் வாலின், பாகிஸ்தான் அரசை வற்புறுத்துகிறார். அமெரிக்காவின் கைப்பாவை ஆசிப் அலி சர்தாரி அதனை நிறைவேற்றியும் வருகிறார். எல்லா நுகர் பொருட்கள்மீதும் சேவைகளின்மீதும் கடுமையான வரி விதித்துவிட்டிருக்கிறார். இவ்வாறு, தம்மீதான போருக்குத் தாமே பணம் செலவு செய்யும் துர்ப்பாக்கியம் பாகிஸ்தானிய மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

6 வாரங்களில் முடிந்துவிடும் என்று கூறப்பட்ட ஈராக்கிய ‘குறுகியகால’ யுத்தம், 7 வருடங்களைக் கடந்தும் ஓய்ந்தபாடில்லை. மேலும், ஈராக்கிய மக்கள் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாக ஆக்கப்படுவதும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டுமிருக்கிறது. ஈராக்கியர் அமெரிக்காவை வெறுப்பதை விட தமக்குள்ளேயுள்ள ஏனைய குழுக்களை வெறுப்பதையே பெரிதாகக் கருதுகிறார்கள். இதனால்தான் போர் ஒரு முடிவுக்கு வராமலிருக்கிறது. ஈராக்கில் நடக்கும் அதிகமான வன்முறை (யுத்தம்) ஸியா, சுன்னாக்களுக்கிடையேதான் நடக்கிறது. ஓரு சாரார் மறுசாராரை அழிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

தாம் சிறுபான்மையினராயிருந்தும், சதாமின் தலைமையின்கீழ் முழு ஈராக்கையும் ஆண்டுவந்தவர்கள் சுன்னா மக்கள். எனவே, சுன்னா மக்களைப் பழிவாங்க நல்லதொரு சந்தர்ப்பமாகவே அமெரிக்க ஆக்கிரமிப்பை கருதுகிறார்கள் பெரும் பகுதி ஸியாக்கள். முழுச்சனத்தொகையில் 20 வீதமான சுன்னா மக்கள், தமது பலத்தின் பெரும் பகுதியை ஸியாக்களுக்கு ஈடு கொடுப்பதிலேயே செலவு செய்கிறார்கள். இருப்பினும் இடைக்கிடை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அமெரிக்கர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தவும் தவறவில்லை.

இருப்பினும், கைக்ககூலியின் சக்தியை அறிந்த அமெரிக்கர், சுமார் 80,000 சுன்னா மக்களை வளைத்துத் தமது படையில் சேர்த்துக் கொண்டு தமக்கு ஏற்படும் அழிவைக்கட்டுப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா ஈராக் யுத்தத்தை வென்ற விதம் இதுதான். ஈராக்கியர், தமது சுதந்திரத்தை அமெரிக்க டாலருக்கு விற்று விட்டிருக்கிறார்கள்!

மிகச்சில ஆயிரங்களேயான சுன்னா மக்கள், அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை வெற்றி கரமாகத் தடுத்திருந்ததைப் பார்க்கும்போது, ஸியாக்களும் இவர்களுடன் சேர்ந்து இருந்திருந்தால், அமெரிக்காவை எப்போதோ அடித்து விரட்டியிருக்கலாம் என்பது புலனாகிறது. ஆனால், ஸியாக்களோ, சதாம் ஆட்சியில் தம்மை அடக்கியாண்ட சுன்னாக்கள்மீது வஞ்சம் தீர்க்கவே கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதால், இது ஒருபோதும் நடக்காது.

10 இலட்சம் பேர் மடிந்துவிட்டிருப்பதும் 40 இலட்சம்பேர் உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்திருப்பதும், ஏராளமான புத்தி ஜீவிகள் நாட்டை விட்டு ஓடிவிட்டிருப்பதும், இவற்றினால் ஈராக் முற்றிலும் அழிந்து போயிருப்பதும், முஸ்லிம்கள் தமக்குள்ளேயே வஞ்சம் தீர்க்த்துக்கொண்டிருக்கும் கெட்ட கொள்கையினால்தான். தம்மை அடிமைப்படுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை வெறுப்பதைவிட, தம்மைத்தாமே வெறுத்துக்கொண்டும் தம்மைக்கண்டு தாமே பயந்துகொண்டும் இருக்கும்வரை முஸ்லிம்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்!

English source: http://www.foreignpolicyjournal.com/
தமிழாக்கம்: அபூ ரிஃப்அத் for http://www.islamkalvi.com/

Friday, March 26, 2010

மூளை ஷார்ப்பாக பல மொழி படியுங்கள்!

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பவர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதாக புதிய ஆய்வுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உளவியல் மற்றும் அறிவியல் கூட்டமைப்பு இதழில் சமீபத்தில் ஓர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. "இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கும் குழந்தைகள் மிக எளிதாகப் பிரச்னைகளுக்கு முடிவு கண்டுவிடுகின்றனர்" என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

மேலும், "குறிப்பாக வளரும் இளம் பருவத்தில் இரண்டாவது மொழி தெரிந்திருந்தால் அது தாய்மொழி நடையில் பாதிப்பை ஏற்படுத்தும். பல்வேறு வார்த்தைகள் தெரிந்திருப்பதால் சொன்ன வார்த்தைகள் திரும்பவும் வராது. தாய்மொழியில் வார்த்தையைத் தேடும் போது இருக்கும் வேகத்தை விட, இரண்டாவது மொழி தெரிந்திருப்பவரின் மூளை இன்னும் வேகமாக வார்த்தைகளைத் தேடும். தாய்மொழியில் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது மொழியின் வார்த்தைகளும் நினைவில் ஊடாடும்.

ஒன்று அல்லது இரண்டு மொழிகள் பேசுபவரிடமிருந்து பல மொழிகள் பேசுபவரை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். மேலும் இவர்களின் மூளைச் செயல்பாடுகளிலும் வித்தியாசம் காணப்படும். குறிப்பாக இந்தியாவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வகையில் கல்வி முறை அமைந்துள்ளது.

சிறுவயதிலேயே இரண்டு மொழிகளில் பேசவும் எழுதவும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பதால், சிறுவயதிலிருந்து முதுமை வரை பல நலன்கள் கிடைக்கின்றன.

ஏழு அல்லது எட்டு வயதில் வேறு மொழியைப் பயில ஆரம்பித்தால் அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் போலவே குழந்தைகள் பேசி எழுத முடியும். அதேபோல் வயதான காலத்தில் ஏற்படும் புத்தி தடுமாற்றம் போன்ற நோய்களும் தாக்காது" என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, "உங்கள் குழந்தைக்கு ஒன்றுக்கு மேலான மொழிகள் தெரிந்திருக்கிறதா? நிச்சயம் அதன் மூளை படு சுறுசுறுப்பாக இருக்கிறது" என்று அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி : இந்நேரம்

Tuesday, March 23, 2010

ஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது?



..எஸ் தேர்வுக்கு முக்கியமாக இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது பிரிலிம்ஸ். மற்றொன்று மெயின்ஸ். இதில் பிரில்ம்ஸ் என்பது ஸ்கிரீனிங் டெஸ்ட் மாதிரிதான். இதற்கு புவியியல், வரலாறு.. இப்படிப்பட்ட 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
'ஜெனரல் ஸ்டடிஸ்' என்றும் ஒரு பேப்பர் இருக்கிறது. இதில் நம் நாட்டின் இப்போதைய நடப்புகள், இந்திய அரசியல், வரலாறு இப்படி பல துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மதிப்பெண்ணைக் கொண்டுதான் மெயின்ஸ்க்கு தேர்ந்தெடுப்பார்கள்.
 
மெயின்ஸில் இரண்டு தேர்வுகள் உண்டு. முதலாவது எழுத்துத் தேர்வு. இதற்கென முதலில் சொன்ன 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஏதாவது இரண்டைத் தேர்வு செய்ய வேண்டும். பிரிலிம்ஸில் எடுத்த சப்ஜெக்டையே மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
 
 அதையே தேர்வு செய்தாலும் பரவாயில்லை. இந்தத் தேர்வோடு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மாநில மொழியில் தேர்வு எழுத வேண்டும். அதில் போதுமான மதிப்பெண் வாங்கினால்தான், மெயின்ஸில் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்துவார்கள்.
 
எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் அடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி வரும். இதில் பர்சனாலிட்டி, பேசும் திறன் எல்லாமே உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
 
டிகிரி எந்த சப்ஜெக்டில் படித்தாலும், பிரிலிம்ஸ் தேர்வுக்கு அதே சப்ஜெக்டைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
 
 எதில் விருப்பம் இருக்கிறதோ, எந்த சப்ஜெக்டுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதை எடுத்துப் படிக்கலாம். U.P.S.C. கேள்விகளைத் தேர்வு செய்யும் குழு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு முறை கேள்வி எளிதாக இருந்தால் மறுமுறையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த சப்ஜெக்டில் நீங்கள் ஸ்டிராங்கோ, அதைத் தேர்வு செய்வது நல்லது.
 
(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்)
Rajaghiri Gazzal
__,_._,___

Wednesday, March 17, 2010

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு… (மக்கள் உரிமைக்கு பெரியார் தாசன் அளித்த பேட்டி)

மக்கள் உரிமை : ஆரம்ப காலத்தில் இந்துவாக, நாத்தீகராக, பௌத்தராக பல்வேறு கோணங்களில் முன்னிறுத்தப்பட்ட தாங்கள் இஸ்லாத்தை தழுவியதற்கான காரணம் என்ன?

டாக்டர் அப்துல்லாஹ் : நாத்தீகராவதற்கு முன்னர் (16 வயதுக்கு முன்பு) ஒரு சைவக் குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டேன். தினமும் 3 மணி நேரம் பிள்ளையார் பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்தவன். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றை பொருள் புரியாமலேயே சிறுவயதிலேயே மனனம் செய்து வைத்திருந்தேன். இவை எல்லாமே உடைந்தது எப்போது என்றால் நான் புது முக வகுப்பில் கல்லூரியில் சேர்ந்த போது தந்தை பெரியார் நான் பயின்ற கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதி அதனை என் ஆசிரியர் குமரவேலன் அவர்களிடம் காட்டினேன். அவரும் அதனைப் படித்து விட்டு இந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் சேசாஷலம் என்ற உனது பெயரை போட்டுள்ளாயே இது ஐயர் பெயர் போன்று அல்லவா உள்ளது. ஏதாவது புனைப் பெயர் வைக்கலாமே என்றார். நான் உடனே எதுவும் யோசிக்காமல் பெரியார் தாசன் என்று எழுதினேன். அன்று பெரியார் தாசன் என்று பெயரிட்ட போது என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப்போட்டு என்று பக்திப் பழம் போன்று காட்சி தந்தேன்.

பின்னர் பெரியாருடன் பழகி, நூற்களைப் படித்து, நாத்திகத்தில் படிப்பும் பயிற்சியும் மேற்கொண்டு பின்னர் தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் விளங்குகின்ற கடவுள் மறுப்பாளனாக எல்லா மதங்களையும் விமர்சிப்பவனாக அறியப்பட்டது எல்லாம் தாங்கள் அறிந்ததே.

அதன் பிறகு அம்பேத்கரின் எழுத்துக்களை படித்தபின் புத்தரும் அவரது தர;மமும் என்ற பெயரில் அவர் கடைசியாக எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டேன். செட்யு+ல்ட் இன மக்களுடன் பழகினேன். பவுத்தம் தான் சரியான வழி என்றெண்ணி புத்த மதத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். சித்தார்த்தன் என்று பெயர் மாற்றத்தை கெஜட்டிலும் பதிவு செய்து கொண்டேன்.

2000 ஆவது ஆண்டில் எனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது இந்த நிலையில் நாம் எல்லாம் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு அந்த திருப்புமுனை பெரிதும் காரணமாக இருந்தது. நண்பர் ராஜகிரி தாவூத் பாட்சா அழைப்பின் பெயரில் அபுதாபி வந்தேன். அப்போது எனது வகுப்பு தோழர் என்னுடன் ஆரம்ப பள்ளி முதல் 11 வரை படித்த நண்பர் சிராஜ்தீனை சந்தித்தேன். எங்கள் பள்ளித்தோழர்களான தெய்வசீகாமணி (தமிழருவி மணியன்) கல்கி பகவன் மற்றும் எங்கள் இருவரைப் பற்றியும் எங்கள் ஆசிரியர் ஜனார்த்தனம் விசாரித்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 2000ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நடந்த அந்த இரவுத் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த இரவு தொடங்கி  விடியல் வரை  நானும் சிராஜுத்தீனும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு இஸ்லாமியப் போதகராகவும் இருக்கும் சிராஜுத்தீன் நட்பு ரீதியாக என்னிடம் சில கேள்விகளை கேட்டார். அந்த கேள்விகளை நினைத்துக் கொண்டே விடிந்த பிறகு தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. வெறுமனே படுத்துக் கிடந்தனே தவிர சீராஜுதீன் எழுப்பிய கேள்விகள் என்னை யோசிக்க வைத்தன. இது வரை நாம் செய்து வருவது சரிதானா என்று எண்ணத் தொடங்கினேன். சிராஜுத்தீன் என்னிடம் அதிகமாக பேசவில்லை. சில கேள்விகளை மட்டுமே எழுப்பினார். மற்றபடி எங்கள் இளமை காலம் பற்றி தான் நாங்கள் அதிகம் பேசினோம்.

இறைவன் இல்லவே இல்லை என்று பிரச்சாரம் செய்து வருபவன் நான். இறைவன் இல்லவே இல்லை என்றால் இதுவரை நான் செய்தது சரி. ஏனென்றால் ஒரு ஆயிரம் நபர்களையாவது நான் நாத்தீகராக மாற்றியிருக்கிறேன். இறைவன் இருக்கிறான் என்றால் அப்போது என்னுள் பயம் ஏற்பட்டு விட்டது. இறைவன் இருக்கிறான் என்பது எவ்வாறு எனக்கு உறுதியாகவில்லையோ அது போலவே இறைவன் இல்லை என்பதும் எனக்கு உறுதியாக வில்லை. எனவே நான் எவ்வாறு ஒரு பக்கம் நிற்பது என்று பயம் வந்து விட்டது. உண்மையாகவே இதனை சொல்கிறேன். உலகம் நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. சிலர் பேர் பெரும் எதிர்ப்பு வரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இறைவன் என் பக்கம் இருந்தால் எதிர்ப்பையெல்லாம் சமாளிக்கலாம் என்ற உறுதியுடன் தான் நான் இருக்கிறேன்.

இந்து மதத்தில் தேடினேன், இறைவன் அவ்விடத்தில் இல்லை. பைபிள் படித்திருக்கிறேன். கடவுளுக்கு குழந்தைகள் உண்டு என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. பவுதத்தில் உங்களுக்கு தெரியும் இறைவனைப் பற்றி பேசாதீர்கள் என்று பவுத்தர் சொல்லி விட்டார். இப்படியே நகர்ந்து நகர்ந்து வந்தேன். இந்த நிலையில் தான் ஐ.எப்.டி. (இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்) பெரியவர் தன்னன் மூஸாவை சந்திக்க நேரிட்டது.

பெரியவர் தன்னன் மூஸா (தொண்டியைச் சேர்ந்த கவிஞர் மூஸா) தான் எழுதிய சௌந்தர்ய முத்திரை என்ற புத்தகத்தை என்னிடம் தந்து அதற்காக அணிந்துரை எழுதி தருமாறு என்னிடம் கேட்டார். இது என்னுள் திருப்பம் ஏற்பட்ட இடமாகும். நானும் அந்த நுhலுக்கு அணிந்துரை எழுதித் தந்தேன். பின்னர் அவர் ஏன் அணிந்துரையை எழுதுவதற்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று பலமுறை யோசித்தேன். பின்னர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் ஐ.எப்.டி.யை சேர்ந்த சிக்கந்தர் என்ற சகோதரை அறிமுகப்படுத்தினார். அவருடன் சில சகோதரர்கள் வந்து என்னை என் இல்லத்தில் சந்தித்து இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள். பின்னர் நான் பல புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை வாசித்தேன். தினமும் 5 மணி நேரம் திருக்குர்ஆனை படிப்பதற்காக நான் நேரம் ஒதுக்கினேன். அப்போது இறைவன் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகி விட்டது. 2004 ஆம் ஆண்டில் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தை முற்றாக நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீத்   நூற்களை ரஹ்மத் பதிப்பகம் முத்துப்பேட்டை முஸ்தபா அவர்கள் வெளியிட்ட போது ஏழு பாகங்களின் வெளியிட்டு விழாவிற்கும்; என்னை அழைத்தார்கள். என்னை ஏன் இவர்கள் அழைக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. நாத்தீகப் பிரச்சாரத்தை கைவிட்டது அவர்களுக்கு தெரியும். ஆனால் நான் இந்த தேடலில் இருப்பது அவர்களுக்கு தெரியாது. ரோடு டூ மக்கா என்ற ஆங்கில நுhலையும் படித்து அதனை மக்காவை நோக்கி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டேன். இப்படியே எனது ஆய்வு தொடர்ந்தது. அப்துஸ் ஸமது, லத்தீப் (கவிக்கோ) அப்துல் ரஹ்மான், ஜவாஹிருல்லாஹ் முதலியவர்களெல்லாம் எனது நண்பர்கள் தான். அவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறேன். ஆனால் இனங்காட்டிக் கொள்ளாமல் எனது ஆய்வுகளை செய்து வந்தேன். சில பேருக்கு எனக்கு இந்த நாட்டம் உள்ளது என்பது தெரியும்.

நான் கடந்த முறை சவூதி வந்த போது முகம்மது நபி (ஸல்) வாழ்ந்த மக்கா மதீனா நகரங்களை காண ஆசைப்பட்டு நண்பர்களிடம் கூறினேன். ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை. அப்போது நினைத்தேன். இறைவன் இப்போது எனக்கு நாடவில்லை போலும், அடுத்த முறை எனது சொந்த செலவிலேயே காண வேண்டும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

இப்போது நான் ரியாத் வந்துள்ள தருணத்தில் நண்பர்கள் சிக்கந்தர், சாதிக் ஆகியோருடன் கலிமா மொழிந்த பிறகு மக்கா செல்லவுள்ளேன். நான் இந்த முறை எனது சொந்த செலவில் வந்துள்ளேன். இந்த முறை நான் அவர்களிடம் மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று சொன்னேன். கலீமா சொன்னால் தான் போக முடியும் என்று சொன்னார்கள். சென்ற முறை நான் இதை சொன்ன போது அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் வழிகாட்டினார்கள். ரப்பாவிற்குச் சென்று நான் கலீமா சொல்லி முஸ்லிம் ஆனேன்.  நான் இஸ்லாத்தில் இணைந்துள்ளதை என் துணைவியாரிடம் தொலைப்பேசியில் கூறினேன். முதலில் அதிர்ச்சி அடைந்தார்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஆனால் எனது விருப்பம் நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொன்னேன். நான்  மேலும் அவர்களிடம் கியாமத் (இறுதி தீர்ப்பு) நாளில் நீயே என் மனைவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் யோசி என்று கூறினேன். பிறகு பத்து நிமிடம் கழித்து அவரே என்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நான் மகனிடம் பேசி விட்டு உங்களது மார்க்கத்திற்கு வர யோசிக்கிறேன் என்று கூறினார்.

மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று நான் விரும்பியது அங்கு சென்று பேரீச்சை பழம் வியாபாரம் செய்வதற்காக அல்ல. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டால் தான் அங்கே போக முடியும் என்பது எனக்கு தெரியும். அதை சென்ற முறை நான் கேட்ட போது நண்பர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள்.

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். பெரியாhpன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். கடந்த மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில்  தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு…

சேசாசலம் (பெரியார் தாசன்) இஸ்லாத்தில் இணைந்தது எப்படி?

இஸ்லாத்தை தழுவிய உடன் ரியாதில் எமது செய்தியாளர்களுக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பேராசிரியர் பெரியார்தாசன்) மக்கள் உரிமைக்கு அளித்த பிரத்யோக பேட்டியின் முக்கிய பகுதிகளை இங்கே அளிக்கிறோம். முழு பேட்டியை வீடியோ வடிவத்தில் எமது இணையத்தளத்தில் http://www.tmmk.in/ பார்க்கலாம்

சந்திப்பு: எம். ஹூஸைன் கனி, மீமிசல் நூர் முஹம்மது, ஆசிக் இக்பால்

---------------------------------------------

மக்கள் உரிமை : ஆரம்ப காலத்தில் இந்துவாக, நாத்தீகராக, பௌத்தராக பல்வேறு கோணங்களில் முன்னிறுத்தப்பட்ட தாங்கள் இஸ்லாத்தை தழுவியதற்கான காரணம் என்ன?

டாக்டர் அப்துல்லாஹ் : நாத்தீகராவதற்கு முன்னர் (16 வயதுக்கு முன்பு) ஒரு சைவக் குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டேன். தினமும் 3 மணி நேரம் பிள்ளையார் பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்தவன். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றை பொருள் புரியாமலேயே சிறுவயதிலேயே மனனம் செய்து வைத்திருந்தேன். இவை எல்லாமே உடைந்தது எப்போது என்றால் நான் புது முக வகுப்பில் கல்லூரியில் சேர்ந்த போது தந்தை பெரியார் நான் பயின்ற கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதி அதனை என் ஆசிரியர் குமரவேலன் அவர்களிடம் காட்டினேன். அவரும் அதனைப் படித்து விட்டு இந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் சேசாஷலம் என்ற உனது பெயரை போட்டுள்ளாயே இது ஐயர் பெயர் போன்று அல்லவா உள்ளது. ஏதாவது புனைப் பெயர் வைக்கலாமே என்றார். நான் உடனே எதுவும் யோசிக்காமல் பெரியார் தாசன் என்று எழுதினேன். அன்று பெரியார் தாசன் என்று பெயரிட்ட போது என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப்போட்டு என்று பக்திப் பழம் போன்று காட்சி தந்தேன்.

பின்னர் பெரியாருடன் பழகி, நூற்களைப் படித்து, நாத்திகத்தில் படிப்பும் பயிற்சியும் மேற்கொண்டு பின்னர் தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் விளங்குகின்ற கடவுள் மறுப்பாளனாக எல்லா மதங்களையும் விமர்சிப்பவனாக அறியப்பட்டது எல்லாம் தாங்கள் அறிந்ததே.

அதன் பிறகு அம்பேத்கரின் எழுத்துக்களை படித்தபின் புத்தரும் அவரது தர;மமும் என்ற பெயரில் அவர் கடைசியாக எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டேன். செட்யு+ல்ட் இன மக்களுடன் பழகினேன். பவுத்தம் தான் சரியான வழி என்றெண்ணி புத்த மதத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். சித்தார்த்தன் என்று பெயர் மாற்றத்தை கெஜட்டிலும் பதிவு செய்து கொண்டேன்.

2000 ஆவது ஆண்டில் எனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது இந்த நிலையில் நாம் எல்லாம் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு அந்த திருப்புமுனை பெரிதும் காரணமாக இருந்தது. நண்பர் ராஜகிரி தாவூத் பாட்சா அழைப்பின் பெயரில் அபுதாபி வந்தேன். அப்போது எனது வகுப்பு தோழர் என்னுடன் ஆரம்ப பள்ளி முதல் 11 வரை படித்த நண்பர் சிராஜ்தீனை சந்தித்தேன். எங்கள் பள்ளித்தோழர்களான தெய்வசீகாமணி (தமிழருவி மணியன்) கல்கி பகவன் மற்றும் எங்கள் இருவரைப் பற்றியும் எங்கள் ஆசிரியர் ஜனார்த்தனம் விசாரித்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 2000ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நடந்த அந்த இரவுத் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த இரவு தொடங்கி  விடியல் வரை  நானும் சிராஜுத்தீனும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு இஸ்லாமியப் போதகராகவும் இருக்கும் சிராஜுத்தீன் நட்பு ரீதியாக என்னிடம் சில கேள்விகளை கேட்டார். அந்த கேள்விகளை நினைத்துக் கொண்டே விடிந்த பிறகு தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. வெறுமனே படுத்துக் கிடந்தனே தவிர சீராஜுதீன் எழுப்பிய கேள்விகள் என்னை யோசிக்க வைத்தன. இது வரை நாம் செய்து வருவது சரிதானா என்று எண்ணத் தொடங்கினேன். சிராஜுத்தீன் என்னிடம் அதிகமாக பேசவில்லை. சில கேள்விகளை மட்டுமே எழுப்பினார். மற்றபடி எங்கள் இளமை காலம் பற்றி தான் நாங்கள் அதிகம் பேசினோம்.

இறைவன் இல்லவே இல்லை என்று பிரச்சாரம் செய்து வருபவன் நான். இறைவன் இல்லவே இல்லை என்றால் இதுவரை நான் செய்தது சரி. ஏனென்றால் ஒரு ஆயிரம் நபர்களையாவது நான் நாத்தீகராக மாற்றியிருக்கிறேன். இறைவன் இருக்கிறான் என்றால் அப்போது என்னுள் பயம் ஏற்பட்டு விட்டது. இறைவன் இருக்கிறான் என்பது எவ்வாறு எனக்கு உறுதியாகவில்லையோ அது போலவே இறைவன் இல்லை என்பதும் எனக்கு உறுதியாக வில்லை. எனவே நான் எவ்வாறு ஒரு பக்கம் நிற்பது என்று பயம் வந்து விட்டது. உண்மையாகவே இதனை சொல்கிறேன். உலகம் நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. சிலர் பேர் பெரும் எதிர்ப்பு வரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இறைவன் என் பக்கம் இருந்தால் எதிர்ப்பையெல்லாம் சமாளிக்கலாம் என்ற உறுதியுடன் தான் நான் இருக்கிறேன்.

இந்து மதத்தில் தேடினேன், இறைவன் அவ்விடத்தில் இல்லை. பைபிள் படித்திருக்கிறேன். கடவுளுக்கு குழந்தைகள் உண்டு என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. பவுதத்தில் உங்களுக்கு தெரியும் இறைவனைப் பற்றி பேசாதீர்கள் என்று பவுத்தர் சொல்லி விட்டார். இப்படியே நகர்ந்து நகர்ந்து வந்தேன். இந்த நிலையில் தான் ஐ.எப்.டி. (இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்) பெரியவர் தன்னன் மூஸாவை சந்திக்க நேரிட்டது.

பெரியவர் தன்னன் மூஸா (தொண்டியைச் சேர்ந்த கவிஞர் மூஸா) தான் எழுதிய சௌந்தர்ய முத்திரை என்ற புத்தகத்தை என்னிடம் தந்து அதற்காக அணிந்துரை எழுதி தருமாறு என்னிடம் கேட்டார். இது என்னுள் திருப்பம் ஏற்பட்ட இடமாகும். நானும் அந்த நுhலுக்கு அணிந்துரை எழுதித் தந்தேன். பின்னர் அவர் ஏன் அணிந்துரையை எழுதுவதற்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று பலமுறை யோசித்தேன். பின்னர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் ஐ.எப்.டி.யை சேர்ந்த சிக்கந்தர் என்ற சகோதரை அறிமுகப்படுத்தினார். அவருடன் சில சகோதரர்கள் வந்து என்னை என் இல்லத்தில் சந்தித்து இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள். பின்னர் நான் பல புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை வாசித்தேன். தினமும் 5 மணி நேரம் திருக்குர்ஆனை படிப்பதற்காக நான் நேரம் ஒதுக்கினேன். அப்போது இறைவன் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகி விட்டது. 2004 ஆம் ஆண்டில் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தை முற்றாக நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீத்   நூற்களை ரஹ்மத் பதிப்பகம் முத்துப்பேட்டை முஸ்தபா அவர்கள் வெளியிட்ட போது ஏழு பாகங்களின் வெளியிட்டு விழாவிற்கும்; என்னை அழைத்தார்கள். என்னை ஏன் இவர்கள் அழைக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. நாத்தீகப் பிரச்சாரத்தை கைவிட்டது அவர்களுக்கு தெரியும். ஆனால் நான் இந்த தேடலில் இருப்பது அவர்களுக்கு தெரியாது. ரோடு டூ மக்கா என்ற ஆங்கில நுhலையும் படித்து அதனை மக்காவை நோக்கி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டேன். இப்படியே எனது ஆய்வு தொடர்ந்தது. அப்துஸ் ஸமது, லத்தீப் (கவிக்கோ) அப்துல் ரஹ்மான், ஜவாஹிருல்லாஹ் முதலியவர்களெல்லாம் எனது நண்பர்கள் தான். அவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறேன். ஆனால் இனங்காட்டிக் கொள்ளாமல் எனது ஆய்வுகளை செய்து வந்தேன். சில பேருக்கு எனக்கு இந்த நாட்டம் உள்ளது என்பது தெரியும்.

நான் கடந்த முறை சவூதி வந்த போது முகம்மது நபி (ஸல்) வாழ்ந்த மக்கா மதீனா நகரங்களை காண ஆசைப்பட்டு நண்பர்களிடம் கூறினேன். ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை. அப்போது நினைத்தேன். இறைவன் இப்போது எனக்கு நாடவில்லை போலும், அடுத்த முறை எனது சொந்த செலவிலேயே காண வேண்டும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

இப்போது நான் ரியாத் வந்துள்ள தருணத்தில் நண்பர்கள் சிக்கந்தர், சாதிக் ஆகியோருடன் கலிமா மொழிந்த பிறகு மக்கா செல்லவுள்ளேன். நான் இந்த முறை எனது சொந்த செலவில் வந்துள்ளேன். இந்த முறை நான் அவர்களிடம் மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று சொன்னேன். கலீமா சொன்னால் தான் போக முடியும் என்று சொன்னார்கள். சென்ற முறை நான் இதை சொன்ன போது அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் வழிகாட்டினார்கள். ரப்பாவிற்குச் சென்று நான் கலீமா சொல்லி முஸ்லிம் ஆனேன்.  நான் இஸ்லாத்தில் இணைந்துள்ளதை என் துணைவியாரிடம் தொலைப்பேசியில் கூறினேன். முதலில் அதிர்ச்சி அடைந்தார்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஆனால் எனது விருப்பம் நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொன்னேன். நான்  மேலும் அவர்களிடம் கியாமத் (இறுதி தீர்ப்பு) நாளில் நீயே என் மனைவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் யோசி என்று கூறினேன். பிறகு பத்து நிமிடம் கழித்து அவரே என்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நான் மகனிடம் பேசி விட்டு உங்களது மார்க்கத்திற்கு வர யோசிக்கிறேன் என்று கூறினார்.

மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று நான் விரும்பியது அங்கு சென்று பேரீச்சை பழம் வியாபாரம் செய்வதற்காக அல்ல. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டால் தான் அங்கே போக முடியும் என்பது எனக்கு தெரியும். அதை சென்ற முறை நான் கேட்ட போது நண்பர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள்.


மக்கள் உரிமை : தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள பத்து ஆண்டு காலங்கள் ஆனது ஏன்?
கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாத்தை அறிவதற்கும், ஆழமாக கற்பதற்கும், அரபி மொழியை கற்பதற்கும் எனது நேரத்தை செலவழித்தேன். இன்னும் மார்க்கத்தை அறிய ஆவலுடன் இருந்தேன். எதை செய்தாலும், முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்பது என் குணம். ஆகவே இதற்கு பத்து ஆண்டுகள்  ஆகியது.

டாக்டர் அப்துல்லாஹ் :

மக்கள் உரிமை : இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்தியாவில் அறிவிக்காமல் ஏன் சவூதியை தேர்ந்தெடுத்தீர்கள்?

டாக்டர் அப்துல்லாஹ் : புனித மண்ணில் இஸ்லாத்தில் ஏற்க வேண்டும் என்பதே  காரணம். மாறாக சவூதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்ற காரணத்திற்காக அல்ல. இங்கே இருக்கிறவர்கள் இஸ்லாமியர்களாக அறியப்பட்டவர்களே தவிர இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் வெகுதூரம் என்பதை நான்  அறிவேன். உம்ரா முடிந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு இதனை அறிவிக்க போகிறேன்.

மக்கள் உரிமை : வெகுஜன மக்களும், அறிவு ஜீவிகளும் இஸ்லாத்தை சரியான கொள்கை என்று ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள பின்னடைவிற்கான காரணங்கள் என்ன?

டாக்டர் அப்துல்லாஹ் : இஸ்லாமியர்கள் பெண்களை பூட்டி வைப்பார்கள். பர்தாவை போட்டு மூடி வைப்பார்கள். அடுத்தவர்களுடன் பழக விட மாட்டார்கள். தானும் பழக மாட்டார்கள். மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள். புகை போடுபவர்கள். இவர்களுடன் சேர்ந்தால் நம் வாழ்வை கெடுத்து விடுவார்கள் என்றெல்லாம் பரப்பப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்தவன் நான். எனது 16வயது வரை நான் சென்ற ஒரே முஸ்லிம் வீடு சிராஜுத்தீன் வீடு மட்டும் தான். அந்த வீட்டில் உள்ள எல்லோரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.

இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர்களே அறியாமல் இருப்பதும், பிறர் தவறான கோட்பாட்டை சொல்லும் போது உடனே அதனை எதிர்கொண்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்க முன்வராததும் வருத்தத்திற்குரியது. இஸ்லாம் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்த மார;க்கம் என்று நான் விளங்கவில்லை. உங்களுக்கே தெரியும் இஸ்லாம் அனைத்து மக்களுக்காவும் இறைவனால் தனது இறுதி நபி மூலம் இறுதி வேதத்துடன் அருளப்பட்டதாகும்.

இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது. அதில் மற்றவர்களை அழைக்காமல் இஸ்லாத்தை மூடி மறைத்த இஸ்லாமியர்களும் உண்டு. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்ப்பவர்களும் உண்டு. முஸ்லிம்கள் என்றால் முட்டாள்கள், கடத்தல்காரர்கள், மோடிமஸ்தான் வேலைப் பார்ப்பவர்கள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து (மன்னிக்க வேண்டும்) எச்சில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் என்று எண்ணுபவர்கள் உண்டு. இந்த தவறான சித்தரிப்புகளை நீக்க் எத்தனை இஸ்லாமியர்கள் தகுந்த பதில் தந்தார்கள். பதில் சொல்வது நமது கடமையில்லையா? எல்லோருக்குமான அழைப்பு திருக்குர்ஆனில் உள்ளது. அதனை சரியான முறையில் மக்களிடம் நம்மவர்கள் சொல்வதில்லை.

ஜமாத்தில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டும். ஜமாத்தில் மொத்தமே மூன்று பேர்கள் என்றால் அதிலும் நான்கு கட்சி. உலகளவில் சதி செய்து முஸ்லிம்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

முருகன் கொலை செய்தால் முருகன் கொலை செய்தான் என்றும் நெல்சன் கொள்ளை அடித்தால் நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும்
இதையே முகம்மது செய்தால் இஸ்லாமிய தீவிரவாதி செய்து விட்டான் என்று சித்தரிக்கிறார்கள். நான் இப்போது களத்தில் இறங்கியதற்கும் இதுவே காரணம். இன்ஷா அல்லாஹ் என்னுடைய பிரச்சாரம் இதற்கு பயன்பெறும்.

மக்கள் உரிமை : இஸ்லாத்தை தெரிந்து கொள்ள கூடியவர்கள், பிற மதத்தை சேர்ந்த அறிவு ஜீவிகள், ஆராய்பவர்களுக்கு தாங்கள் கூறும் சுருக்கமான செய்தி?

டாக்டர் அப்துல்லாஹ் : மிக சுருக்கமான சேதி இது தான். உலகத்தில் இருக்கும் எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். இந்து மதம் பின்பற்றும் வேதங்கள், யூதர்கள் பின்பற்றும் தவ்ரா வேதம், கிறித்தவர்களின் பைபிள் வேதம் இவற்றையெல்லாம் அறிவு பூர்வமாக ஆராய்ச்சி செய்து பார;த்தால் இவற்றில் இறைவன் நேரடியாக சொன்னதாக ஏதாவது வேதம் உள்ளதா? கிருஷ்ணசாமி சொன்னதாக முனுசாமி சொன்னதாக சின்னசாமி சொன்னதாக தான் உள்ளது.

1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் தான். இப்போது அறிவு ஜீவிகள் எந்தப் பக்கம் வரவேண்டும் என்பதை புரிய வேண்டும்.


மக்கள் உரிமை : உங்கள் எதிர்கால செயல்திட்டம் எவ்வாறு இருக்கும்?
: இறைவன் நாடுகின்ற வழியில் எல்லாம் இருக்கம்; என்பதே எனது சுருக்கமான பதில்.

டாக்டர் அப்துல்லாஹ்

எனக்காகவும், இறைவனுக்காகவும் இஸ்லாத்தில் விதித்துள்ள ஐந்து கடமைகளை செய்யப் போகிறேன்.

சமுதாயத்திற்காக என்றால் வழி தவறி சென்று கொண்டிருப்பவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்ப்பதற்கு எனது வாக்கு வண்மையை பயன்படுத்துவேன்.

மக்கள் உரிமை : இஸ்லாத்திற்கு எதிராக பரப்பி வரும் வெகுஜன ஊடகங்கள் விஷயத்தில் முஸ்லிம்களின்; நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்----?
டாக்டர் அப்துல்லாஹ் : அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நாங்களும் ஜிஹாத் செய்ய வேண்டாமா-? என்று கேட்டதற்கு சண்டை இல்லாத போர் ஒன்று உள்ளது. அதனை நீங்கள் செய்யுங்கள் என்றார்கள். முதலில் சண்டை இல்லாத ஜிஹாத் செய்வோம். இறைவன் நாடினால் என்னை எதற்காகவும் தயார;படுத்திக் கொள்வேன்.

http://www.tmmk.in/

ஐ ஏ எஸ், ஐ ப்பீ எஸ் இலவசமாகப் படிக்கலாம்!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை http://www.saidaiduraisamysmanidhaneyam.com/  என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்" என்று அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கூறினார்.
மனிதநேய அறக்கட்டளை, சென்னை லியோ கிளப் ஆகியவற்றின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் கடந்த 10.03.2010 புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கலந்து கொண்டு பேசும் போது, "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளை எழுத ஆர்வம் இருந்து, அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்களை, போட்டித் தேர்வுகளை எழுத ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

மனிதநேய அறக்கட்டளை ஆண்டுதோறும் 10ஆம் வகுப்புத் தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 50 பேரை தத்தெடுத்து, அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2, வகுப்புகளில் இலவசமாகப் படிப்பளித்து, அவர்களை ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளுக்குத் தயார்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 100 பேர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்றனர்.

இணையதளத்தில் முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தேவையான புவியியல், அரசியல், அறிவியல், சமூகவியல், பொதுநிர்வாகம் ஆகிய பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெனரல் ஸ்டடிஸுக்குத் தேவையான புத்தகங்கள், தற்கால நிகழ்வுகள், பயிற்சி மையங்களின் வகுப்பறைகளில் ஆசிரியர் எடுக்கும் பாடங்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் பாடக்குறிப்புகள், வினா வங்கிகள் போன்றவையும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம்" என்று கூறினார்.
இணையத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் இப்பயிற்சி வகுப்புகளின் பாடங்கள், இலவசப் பயிற்சி வகுப்புகளில் நேரடியாகக் கலந்து கொண்டு பயன்பெற இயலாத கிராமீய மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

பத்தாம் வகுப்பில் 450 மார்க் எடுத்தும் பொருளாதாரப் பற்றாக் குறையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் கல்வி மறுக்கப் படுவது அநீதியாகும். ப்ளஸ்-1 ப்ளஸ்-2 முதல் பள்ளிக் கல்வியையும் ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் பட்டங்களுக்கான பயிற்சிகளையும் இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளையினரும் அதன் தலைவர் சைதை துரைசாமி அவர்களும் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.


நன்றி : இந்நேரம்.காம்

Saturday, March 13, 2010

இஸ்லாத்திற்கு வந்தார் ஒருவர் , விட்டு சென்றார் மற்றொருவர்...

வந்தவர்
Indian atheist embraces Islam

RIYADH: A well-known Indian psychotherapist embraced Islam on Thursday. 

Dr. Periyadarshan, who has changed his name to Abdullah, told Arab News Friday that Islam is the only religion in the world that follows a book directly revealed from God.
He said that as a student of comparative religions he believes books of other faiths have not been directly revealed to mankind from God. He said the Holy Qur'an is still in the same format and style as it was revealed to the Prophet Muhammad (pbuh) from Almighty Allah. Dr. Abdullah is a visiting professor at the University of California in Los Angeles. He also acted in the famous Tamil film "Karuthamma" about the killing of newborn baby girls in some remote villages in India. The production received national award from the Indian government. 
"I was well known in India for my atheist theology and later I became to realize that religion is the only way out for human beings both in this world as well as in the hereafter," he said.
Dr. Abdullah will be performing Umrah on Saturday on his first visit to the holy cities of Makkah and Madinah.

சென்றவர்
சனீஸ்வர பகவானை வணங்கும் முஸ்லிம் (?) 

புதுவை பதிப்பில் 8-3-2010 அன்று வெளியான செய்தி இது!

பாருக் மரைக்காயர் என்கிற இவர் தற்போது ஜார்ண்ட் மாநில கவர்னராக உள்ளார். இவரின் மகன் புதுவையில் கல்வி அமைச்சராக தற்போது உள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள இவர்கள் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காங்கிரஸில் சவூதி அரபு நாட்டு தூதர் உட்பட பல பதவிகளை வகித்த வந்துள்ளனர். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கே விரோதியாகி விட்ட இவருக்கு முஸ்லிம் பெயர் வைத்துள்ளதால் காங்கிரஸில் முஸ்லிம் என்கின்ற காரணத்தினால் கொடுக்கப்பட்ட பதவிகள். இவைகளை திரும்ப பெற்றால், பெயர் தாங்கி முஸ்லிம்களாக உள்ள அரசியல் வாதிகளுக்கு அது ஒரு பாடமாக இருக்கும்.


Saturday, March 06, 2010

குழந்தை சாப்பிட அடம் பிடித்தால்...!!!

தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் இது. "என் குழந்தையும் முதல் மதிப்பெண் வாங்கிடுமா' என ஒவ்வொரு பெற்றோரும் ஏக்கப் பெருமூச்சுடன் தத்தம் குழந்தையை தொடர்ந்து தயார்படுத்தும் உத்வேகம் இயல்பானது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! அறிவுத் திறன் கொண்ட குழந்தைக்கு ஆரோக்கியமான உடல் நலம் அவசியம். ஆனால், ஆரோக்கியத்தை அருகில் உள்ள கடையிலோ அல்லது பெரிய "ஷாப்பிங் மால்'களில் வாங்க முடியாது. கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்.
ஆரோக்கியத்தின் அடையாளம்: "பால்குடி' மறக்கும் நிலையிலேயே "ப்ரீ கே.ஜி.', "எல்.கே.ஜி.' என படிக்க அனுப்பும் காலச் சூழலில் உள்ள நாம், குழந்தைகளை சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதுதான் முதல் சவால். நல்ல பசியுள்ள, சுறுசுறுப்பான சேட்டை செய்யும் குழந்தை ஆரோக்கியத்தின் அடையாளம்.

"சேட்டையெல்லாம் இருக்கிறது; குழந்தை சாப்பிடத்தான் மறுக்கிறது' என்று சொன்னால், நோய் எதிர்ப்பாற்றல் நாளடைவில் குறையத் தொடங்கி விடும். பசியை எப்படி உண்டு பண்ணுவது ௲ அந்த மந்திரம் தெரியுமா எனப் பல தாய்மார்கள் பதறிக் கேட்பது உண்டு. சித்த மருத்துவத்தில் "பசித் தீ தூண்டிகள்' என்று நம் முன்னோர் பல மூலிகைகளை அடையாளம் காண்பித்துள்ளனர்.

உரை மருந்து & அஸ்திவாரம்: குழந்தை பிறந்து 3 மாதம் ஆன உடனே, அதற்கு பசியைத் தூண்டுவதற்கான முயற்சி தொடங்கி விடுகிறது. "கடுக்காய், மாசிக்காய், அதிமதுரம், வசம்பு, அக்கரகாரம்' என மூலிகைகள் அடங்கிய உரை மருந்தை 3 மாத குழந்தையாயிருக்கும் போதே கொடுக்க ஆரம்பித்தால் "ரெடிமேட் போஷாக்கு' உணவுகள் பக்கம் போக வேண்டியிருக்காது.

குழந்தை வளர வளர நவ தானியங்களான திணை, ராகி, கம்பு, சோளம், பயறு வகைகள் அடங்கிய சத்துமாவு கஞ்சி, பனைவெல்லம் சேர்த்து தினம் ஒரு வேளை கொடுக்க வேண்டும்.

2 - 3 வயதில் ஓடி விளையாட ஆரம்பித்ததும் "சாப்பிட மாட்டேன்' என குழந்தை அடம் பிடிப்பதும், காற்றடித்தால் பறந்துவிடும் அளவுக்கு தகடாக இருப்பதும் பல பெற்றோருக்குப் பெருத்த கவலை. பஞ்சதீபாக்னி (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய ஐந்தும் சேர்ந்த தூள்.), தேற்றான் முதலிய சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுத்து வந்தால், பசி அதிகரித்து உடல் எடை கண்டிப்பாகக் கூடும்.
மருத்துவர் ஆலோசனை எதற்கெனில், உடல் எடை குறைவு எதனால் என்பதைத் தெளிவாகக் கணிப்பது மிக அவசியம், சாதாரண வயிற்றுப் புழுக்கள், ரத்த சோகை, மாந்தம், கணை ("பிரைமரி காம்ப்ளக்ஸ்') எனப் பல காரணங்கள் ""ஒல்லிக்குச்சி உடலுக்கு" உண்டு.

இது தவிர அக்கறையின்மை எனும் பழக்கவழக்க நோயும் காரணமாக இருக்கலாம். "வருமுன் காப்போம்' என்ற மூதுரைப்படி பின்னாளில் நல்ல உடல் நலத்துடன் சாதிக்க வேண்டுமெனில் இந் நாளிலேயே உடல் வலுவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
கண் கூர்மையைப் பெருக்கும் பொன்னாங்கண்ணி, புத்தி கூர்மையைப் பெருக்கும் பிரமி, வல்லாரை, நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் நெல்லிக்காய், சீந்தில் என சித்த மருத்துவம் சொல்லும் எளிய மூலிகைகளை முறையாக ஆலோசித்து பெற்றுச் சாப்பிட வைத்தால் நாளைய தலைமுறை நிச்சயம் வெல்லும் என்பதில் சந்தேகமில்லை

Tuesday, March 02, 2010

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சைமட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNSHOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:


1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரணடெஸ்டில் தெரிய வராது, அவைசில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்சிகிச்சைக்குப் பின், டாக்டர்நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையானஅர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்றுமட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கானசெல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாகஇருக்கும்போது கேன்சருக்கான செல்அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கானவாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்துகுறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவுமற்றும் வாழ்க்கை முறைகாரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்துகுறைப்பாட்டை நீக்கலாம். தேவையானசத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களைமட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பைபோன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்குடல், கிட்னி, இதயம்,மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமானசெல்கள், உறுப்புகள்,திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின்(tumor) அளவைக் குறைக்கசெய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சைகேன்சர் கட்டியினை அழிக்கபெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சுமூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லதுஅழிக்கப் பட்துவிடும். இதனால்மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்மற்ற இடங்களில் பரவ ஒருகாரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளைநாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிகநேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது.ஜீரணமாகாத இறைச்சியானதுகுடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவேஇறைச்சி சாப்பிடுவதைதவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனதுசக்தியை கேன்சர் செல்லின்கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killercells) கேன்சர் செல்லைஅழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAsetc, போன்றவைநோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body'sown killer cells) மூலம்கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ளபாதிக்கப்பட்ட, தேவையற்றசெல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements likevitamin E are known tocause apoptosis, or programmed cell death, the body's normal method of disposingof damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit)நோயே! நேர்மறையான,ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையைஅளிக்கிறது. கோபம், மன்னிக்கும்மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்அமிலத்தன்மையையும்அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்தசுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.மூச்சுப் பயிற்சியானது(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையைதவிர்ப்பது கேன்சர் செல்லுக்குதவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றைஎடுத்துக் கொள்ளலாம். TableSalt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea saltபோன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல்(gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாகஇனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமானஉணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவுசிக்கன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள்,ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழுதானியங்கள், விதைகள்,பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாகஇருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ளநொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளரஉதவுகிறது. ஆரோக்கியமானசெல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes)104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளைதவிர்த்து விடவும். இதற்குமாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர்செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல்உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோககலவை அதிகமுள்ள குழாய் நீரைதவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

நன்றி : முஹம்மது ரியாஸ் -  http://www.govindakudi.blogspot.com/

Monday, March 01, 2010

சிகரெட் பிடிப்பவர்களுக்கு அறிவு திறன் குறையும்

சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்பதுஅனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் மட்டுமின்றி அறிவுத்திறனும் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.


இந்த ஆய்வு இஸ்ரேலில் உள்ள டெல் ஹஸ்கோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் டாக்டர் மார்க் வெய்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 20, 211 பேர் பயன்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சிகரெட் பிடித்தவர்களுக்கு மற்றவர்களைவிட 7.5 புள்ளிகள் அறிவுத்திறன் குறைந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

இந்த பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

- http://www.maalaimalar.com/