- வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் தேவை
- வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு தேவை
- அடைவதற்கு என்று ஒரு லட்சியம் தேவை
- அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் தேவை
- வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் தேவை
- வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை தேவை
- உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு தேவை
- தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தைரியமான மனம் தேவை
- அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் தேவை
- தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் தேவை
- தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் தேவை
- சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் தேவை
- விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் தேவை
- அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை தேவை
- குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை தேவை
- கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்புணர்வு தேவை
- நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் பக்குவம் தேவை
- அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை தேவை
Saturday, November 06, 2010
சாதிக்க வேண்டுமா ???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment