Thursday, December 30, 2010

முதலில் மனதை குணப்படுத்த வேண்டும் !!!

ஆரோ‌க்‌‌கியமாக இரு‌க்கு‌ம் வரை நம‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம் தெ‌ரிவ‌தி‌ல்லை. ஏதேனு‌ம் நோ‌ய் தா‌க்‌கிய ‌பிறகுதா‌ன் நா‌ம் ஆரோ‌க்‌கியமாக இரு‌‌ப்பத‌ன் அவ‌சிய‌த்தை உண‌ர்‌‌கிறோ‌ம்.

வெறு‌ம் கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்தாலே, கை, கா‌ல் சோ‌ர்வு, வா‌ய் க‌ச‌ப்பது போ‌ன்றவை ஏ‌ற்படு‌கிறது. ஒரு வார‌ம் வரை ந‌ம் அ‌ன்றாட வேலைகளை செ‌ய்ய இயலாம‌ல் போ‌கிறோ‌ம். மனதள‌வி‌ல் தள‌ர்‌ச்‌சியை உண‌ர்‌கிறோ‌ம். இதே உ‌யிரையே மா‌ய்‌த்து‌விடு‌ம் நோ‌ய்க‌ள் ந‌ம்மை‌த் தா‌‌க்‌கினா‌ல், நோ‌ய் ந‌ம்மை‌க் கொ‌ள்வத‌ற்கு மு‌ன்பு, நாமே பய‌த்தா‌ல்‌ அ‌ல்லவா ‌தின‌ம் ‌தின‌்‌ம் செ‌த்து மடி‌கிறோ‌ம்.

நோ‌ய் தா‌க்‌கியதா‌ல் ஏ‌ற்படு‌ம் மன உளை‌ச்சலா‌ல்தா‌ன் நோயா‌ளிக‌ள் அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்க‌ள். எ‌ந்த நோயு‌ம் 50 ‌விழு‌க்காடுதா‌ன் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம். ஆனா‌ல் அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் மன உளை‌ச்சலா‌ல்தா‌ன் ஏராளமான நோயா‌ளிக‌‌ளி‌ன் நோ‌ய் ‌தீ‌விரமடை‌கிறது.
எனவே, நோயா‌ளிக‌ளி‌ன் மனதை முத‌லி‌ல் குண‌ப்படு‌த்த வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது. பொதுவாக நா‌ம் ஏதேனு‌ம் ஒரு ‌சி‌கி‌ச்சை பெற மரு‌த்துவரை அணு‌‌‌கினா‌ல், நோ‌ய்‌க்‌கான காரண‌த்தை‌க் கூ‌றி,இ‌ப்படி இ‌ப்படி இரு‌ங்க‌ள், இதனை சா‌ப்‌பிடு‌ங்க‌ள், நோ‌ய் ச‌ரியாக‌ி‌விடு‌ம் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

‌சில மரு‌த்துவ‌ர்க‌ள், உ‌ங்களு‌க்கு இ‌ப்படி ஒரு நோ‌ய் வ‌ந்து‌வி‌ட்டது, இ‌ப்படி எ‌ல்லா‌ம் செ‌ய்யு‌ம், குண‌ப்படு‌த்த இ‌த்தனை நா‌ட்க‌ள் ஆகு‌ம் எ‌ன்று முத‌‌லிலேயே நோயா‌ளிக‌ளை பயமுறு‌த்‌தி‌விடுவா‌ர்க‌ள். இவ‌ர்களு‌க்கு ‌உ‌ரிய கால‌ம் ஆன ‌பிறகு‌ம் கூட நோ‌ய் குறையாது. அத‌ற்கு‌க் காரண‌ம், அவ‌ர்களது மன‌தி‌ல் உ‌ள்ள பய‌ம்தா‌ன்.

அதே‌ப்போல, பு‌ற்றுநோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்‌களு‌க்கு, பு‌ற்று நோ‌யினாலு‌ம், அத‌ற்காக எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்படு‌ம் ‌சி‌கி‌ச்சை‌யினாலு‌ம், உட‌லி‌ல் ப‌ல்வேறு உபாதைக‌ள் ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் ‌மிகு‌ந்த மன உளை‌ச்சலு‌க்கு உ‌ள்ளாவா‌ர்க‌ள். அவ‌ர்களது உருவ‌த்‌தி‌ல் மா‌ற்ற‌ம், தனது வேலைகளை செ‌ய்து கொ‌ள்ள முடியாம‌ல் போவது, அ‌திகமான வ‌லியை உண‌ர்வது, மரு‌ந்துக‌ளினா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌க்க ‌விளைவுக‌ள் போ‌ன்றவை ஆரோ‌க்‌கியமான மனதை‌க் கூட கெடு‌‌த்து‌விடு‌ம்.

எனவே, மரு‌த்துவமனைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் ‌பி‌ஸியோதெர‌பி ‌நிபுண‌ர்க‌ள், இதுபோன‌ற் நோயா‌ளிகளு‌க்கு மன தை‌ரிய‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். எ‌ளிய உட‌ற்ப‌யி‌ற்‌சிகளை ‌க‌ற்று‌த் தர வே‌ண்டு‌ம். அ‌ல்லது நோயா‌ளிகளே ‌சி‌றிய ‌சி‌றிய உட‌ற்‌ப‌யி‌ற்‌சிகளை செ‌ய்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். இதனா‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் அசவுக‌ரிய‌ங்க‌ள் பல களைய‌ப்படு‌ம். இர‌த்த இழ‌ப்பு நோயாக இரு‌ப்‌பி‌ன், உட‌ற்ப‌யி‌ற்‌சி‌யினா‌ல் இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உருவாகு‌ம். கை கா‌ல்க‌ளி‌ல் இய‌‌ங்கு‌ம் த‌ன்மை அ‌திக‌ரி‌க்கு‌ம். நோயா‌ளிக‌ள் த‌ங்களது வேலைகளை தா‌ங்களே செ‌ய்து கொ‌ள்ள முடியு‌ம்.

நோயா‌ளிக‌ளி‌ன் நோயை குண‌ப்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு, அவ‌ர்களது உட‌ல் இய‌க்க‌த்தை ‌சீரா‌க்‌கி அத‌ன் மூல‌ம் அவ‌ர்களது மன ‌நிலையை ச‌ரி செ‌ய்ய வே‌ண்டு‌ம். ந‌ம்‌பி‌‌க்கையை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம். அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கையை த‌ட்டி எழு‌‌ப்ப வே‌ண்டு‌ம். இதனை மரு‌த்துவ‌ர்க‌ள் ம‌ட்டு‌‌ம்தா‌ன் செ‌ய்ய வே‌ண்டிய‌தி‌ல்லை. நோயா‌ளிக‌ளி‌ன் உற‌வின‌ர்க‌ள் கூட செ‌ய்யலா‌ம். எ‌ப்போது‌ம் நோயை‌ப் ப‌ற்‌றி‌ப் பே‌சி அழுகையை உ‌ண்டா‌க்காம‌ல், அவ‌ர்களு‌க்கு த‌ை‌ரிய‌ம் கூறலா‌ம்.

நோயா‌ளிகளு‌க்கு‌ப் ‌பிடி‌த்த வேலைகளை அவ‌ர்களாகவே‌ச் செ‌ய்ய‌ச் சொ‌ல்‌லி தூ‌ண்டலா‌ம். குழ‌ந்தைகளை அவ‌ர்களுட‌ன் ‌விளையாட ‌விடலா‌ம், தொ‌ற்று நோயாக இ‌ல்லா‌திரு‌ப்‌பி‌ன் அவ‌ர்களை பொது இட‌ங்களு‌க்கு‌ம், பொது ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்கு‌ம் அழை‌த்து‌ச் செ‌ன்று, அவரு‌ம் சராச‌ரியான வா‌ழ்‌க்கை வாழ‌த் தகு‌தியானவ‌ர்தா‌ன் எ‌ன்பதை ஞாபக‌ப்படு‌த்தலா‌ம்.

உற‌வின‌‌ர்க‌ளி‌ன் ‌வீடுகளு‌க்கு‌ச் செ‌ன்று உறவுபாரா‌ட்டலா‌ம், பழைய ந‌ண்ப‌ர்களை தேடி‌ப் ‌பிடி‌த்து ச‌ந்‌தி‌க்க‌ச் செ‌ய்யலா‌ம். எ‌ப்படியேனு‌ம், அவ‌ர்க‌ள் நோ‌யுட‌ன் போராட மன தை‌ரிய‌த்தை உ‌ருவா‌க்க வே‌ண்டியது அ‌வ‌சிய‌ம்.

ம‌னிதனு‌க்கு முத‌‌ல் எ‌தி‌ரியே பய‌ம்தா‌ன். இ‌ந்த பய‌த்தை மன‌தி‌ல் இரு‌ந்து அக‌ற்‌றி‌வி‌ட்டு, மன உளை‌ச்சலை குறை‌த்து‌வி‌ட்டு, நோயா‌ளிகளு‌க்கு மன தை‌ரிய‌த்தையு‌ம், த‌ன்ன‌ம்‌பி‌க்கையை ஏ‌ற்படு‌த்துவதே முத‌ல் கடமையாகு‌ம். இதுதா‌ன் அவ‌ர்களது நோயை ‌விர‌ட்டு‌ம் மு‌க்‌கிய ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.

நன்றி : வெப்துனியா

Tuesday, December 28, 2010

எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!

அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல்சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஷ் டேடைம் டாக் ஷோ  நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.

பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச்சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன்கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன்இருப்பைத உணர்ந்தார். வீல்சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினைமுடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.

ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல்வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம்நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்ரி ஆஃப் டைம்’ (A Brief History of Time) என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஒன்றை கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும்ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நர்ஸ்ஸை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.

‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், 
‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ 
என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்!

நன்றி : இமாம்

Saturday, December 18, 2010

ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

 நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
 அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ரு ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 லு மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

டிஸ்கி 3 : இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன், அதற்குபதில் உங்க கருத்துக்களையும், ஒட்டும் இட்டுச்செல்லவும்.
 
ஆக்கம்: பட்டிகாட்டான் ( பட்டணத்தில்)

அட வெங்காயம் ....

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

நன்றி : தினகரன் ஹெல்த்

Wednesday, December 15, 2010

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர்  செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நன்றி : வெப்துனியா

Tuesday, November 30, 2010

நிறைவாழ்வு என்பதெலாம் கல்வி யால்தான்!

காசிருக்கும் காரணத்தால் சிலபேர் இங்கே
கற்றவரைத் துச்சமென நினைக்கின்றார்கள்
காசிருக்கும் காரணத்தால் பலபேர் இங்கே
கல்வியினால் என்ன பயன்? என்கின்றார்கள்
தூசியிருக்கும் இடமெல்லாம் நோயி ருக்கும்
செல்வமது சேருமிடம் மாசும் சேரும்
மாசில்லாக் கல்வியொன்றே செல்வ மாகும்
மன்பதைக்கே அதனால்தான் பெருமையாகும்!

படிக்கின்ற காலத்தில் ஊரைச் சுற்றிப்
பொழுதுகுளைப் பொறுப்புகளைச் சிதைத்தோர் இன்று
படிக்கவில்லை தம்மக்கள் என்றால் ஏனோ
பதறுகின்றார்! புலம்புகின்றார்! என்ன நீதி?
தடித்தனங்கள் நம்நாட்டில் வளர்வதும் ஏன்?
தகுகல்வி இல்லாமை என்பதால்தான்!
குடித்தனங்கள் இருள்மூழ்கிக் கிடப்பதும்ஏன்?
கல்வியுனும் வெளிச்சமிலாக் காரணந்தான்!

முறையான கல்வியினால் சேர்க்கும் செல்வம்
முப்போதும் நிலைத்திருக்கும் பயன்கள் நல்கும்!
முறையற்ற நெறிகளிலே சேரும் செல்வம்
மின்னலென மின்னும்பின் மறையும்! மண்ணில்
நிறைவாழ்வு என்பதெலாம் கல்வி யால்தான்!
நம்மில்பலர் வாழ்வதெல்லாம் வாழ்வே அல்ல!

அரைகுடங்கள் ஆர்ப்பரிப்பு! அலட்டல்! ஆமாம்!
அறிவுலகம் அன்னவற்றை ஏற்பதில்லை!

வேலூர். ம.நாராயணன்

Wednesday, November 24, 2010

மருத்துவர்களின் இளவரசன் (Prince Of Physicians)

மருத்துவர்களின் இளவரசன் (Prince Of Physicians) என்று அடைமொழி சூட்டப்பட்ட அபூ அலி ஹுசைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு சீனா கி பி (980 - 1036) மருத்துவ துறையின் மாமேதையாக விளங்கினார். இப்னு சீனா 10 ம் வயதிலையே இஸ்லாமிய அடிப்படை அறிவை பெற்று திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். இவர் இளம் வயதிலையே பல்வேறு ஆசிரியர்களிடம் அல் ஜிப்ரா, வான சாஸ்திரம், தர்க்கவியல், தத்துவம், இறையியல் என்று பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டார்.

இவர் தனது 16 ம் வயதில் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். இவர் 18 ம் வயதில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். மன்னர் நூஹ் இப்னு மன்சூர் சாமாணி என்பவர் நோய்வாய் பட்டிருந்தபோது அவரது நோயை குணப்படுத்த முடியாமல் பல்வேறு மருத்துவர்கள் திரும்பிச் செல்லவே, இறுதியாக இப்னு சீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை குணப்படுத்தினார் இப்னு சீனா. குணமாகிவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால் மன்னர் யாருக்கும் அனுமதிக்காத தனது அரச நூலகத்தை பயன்படுத்தும் உரிமையை இப்னு சீனாவிற்கு வழங்கினார். தனது சிகிச்சைக்கு கைமாறாக இதனை கருதிய இப்னு சீனா, அந்நூலகத்தில் பொதிந்திருந்த அரும்பெரும் நூல்களை எல்லாம் கற்று பயன் அடைந்தார்.

இப்னு சீனா கிட்டத்தட்ட 200 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மருத்துவ நூல்கள் மட்டும் 16 ஆகும். இதில் 8 நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. அவர் எழுதிய நூல்களிலே உலகப் புகழ்ப்பெற்ற நூல்
அல் கானூன் பித்திப் ஆகும்.

இந்நூல் 1270 ல் ஹீப்ரு (யூதர்களின்) மொழியிலும் லத்தின் மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளது. இதன்
லத்தின் மொழியாக்கம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டதிலிருந்து 30 பதிப்புகளை கண்டுள்ளது.

15 ம் நூற்றாண்டில் இந்நூல் குறித்து பல்வேறு விளக்கவுரை நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர்.O . C Gruner என்பவரால் 1930 ல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் இந்த 21 ம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கை புரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இப்னு சீனா எழுதிய "அல் - கானூன் பித்திப்" என்ற மருத்துவ கலைக்களஞ்சியம் 15 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் அமைந்து இருக்கும் பாரிஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் இவரது பெயரில் ஆய்வகம் ஒன்று அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

- S.H.M. முஹையதீன் அவர்கள் எழுதிய உலகின் அறிவியல் முன்னோடிகள் முஸ்லிம்கள் எனும் நூலிலிருந்து...

Saturday, November 20, 2010

பெரிதாக குறிவை

'பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை  விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.

நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!

மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!

இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.
 
o வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
o ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
o டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள்.
 
நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.

தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.

வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.

வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.
 
தொகுப்பு: கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத் 

Monday, November 15, 2010

இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

இந்த இனிய திருநாளில்  நாம் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ  இறைவனை வேண்டுகிறேன்.
 

இம்தியாஸ் புஹாரி மற்றும் குடும்பத்தினர்

Tuesday, November 09, 2010

உனக்கென்ன மனக் கவலை ? - கவிதை

முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற
முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற
அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே
அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை ?

கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன்
கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு
சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க
சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை ?

பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும்
புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும்
கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும்
கருணை நபி ஹதீஸ்இருக்க  உனக்கென்ன மனக்கவலை ?

துன்பத்தில் துயரத்தில் இன்பத்தில் இலட்சியத்தில்
தொடராக விளைகின்ற சோதனையில் வேதனையில்
புண்பட்ட மனத்தவரும் பண்பட்டு நடை பயில
புகழ்ஸஹாபி வாழ்விருக்க உனக்கென்ன மனக்கவலை ?

உண்ணுகிற உணவுக்கும் உடுத்துகிற உடைகட்கும்
இன்னதுதான் ஆகுமென்றும் இதுவெல்லாம் ஆகாதென்றும்
கண்ணியமாய்ப் பிரித்தெடுத்து சட்டங்கள் சமைத்தெடுக்கும்
ஷரீஅத்தின் தெளிவிருக்க உனக்கென்ன மனக்கவலை ?

இருளுக்கு ஒளிவிளக்கு ! இல்லார்க்கு அருள்விளக்கு !
இம்மைக்குச் சுடர்விளக்கு ! மறுமைக்குத் தொடர்விளக்கு !
அருளுக்கு அருளான இஸ்லாமே  இருக்கையிலே
அல்லாஹ்வின் அடியானே ! உனக்கென்ன மனக்கவலை ?

நன்றி : குர்ஆனின் குரல்
”முதுவைக்கவிஞர் “
அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ

Monday, November 08, 2010

வெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம்

புதுடில்லி : இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகள் எதையும் உட்கொள்ளாமல் வெறும் காய்கறிகளை மட்டும் உட்கொள்ளும் சைவ பிரியர்களுக்கு விட்டமின் பி - 12 குறைவால் மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன், முட்டை, இறைச்சி, பால் மற்றும் அதன் துணை பொருட்களில் விட்டமின் பி - 12 சத்து அதிகமாக உள்ளது. விட்டமின் பி - 12 குறைபாடு மூளையின் செயல்பாட்டைப் பாதித்து நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறனை குறைத்து விடும். இது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குர்கானில் உள்ள அர்டீமீஸ் சுகாதார நிறுவனத்தின் நியூராலஜிஸ்ட் பிரவீன் குப்தா கூறுகிறார்.

மேலும் அவர் கூறும் போது "இந்திய மக்களில் பெரும்பாலோர் சைவ உணவு உண்பவர்களாகவும் தினந்தோறும் உட்கொள்ளும் பாலின் கொள்ளளவு குறைந்திருப்பதாலும் அவர்கள் டிமென்டியா நோய்க்கு விரைவிலேயே ஆட்படுவதாக" விளக்கினார். உலக சுகாதார நிறுவனம் 2000ம் ஆண்டிலேயே இந்தியாவில் 35 இலட்சம் அல்ஜீமீர் மற்றும் டிமென்டியா நோயாளிகள் உள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வகையான மூளை கோளாறின் அறிகுறிகளாக அன்றாட நடவடிக்கைகளை மறந்து போதல், தெரிந்தவர்களின் பெயர்களை மறத்தல், அடிக்கடி எரிச்சல்படுதல் மற்றும் மன உளைச்சல் போன்றவைகளைக் குறிப்பிடலாம். சாதாரண ரத்த பரிசோதனையிலேயே இந்நோயை கண்டுபிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் 1 கோடியே 80 இலட்சம் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 2025-ல் இது இருமடங்காகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி : இந்நேரம்

Sunday, November 07, 2010

சிறுவர்கள் வாழ்வோடு விளையாடும் "வீடியோ கேம்'

மதுரை :"வீடியோ கேம்' விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினால் கண், மனநல பாதிப்புகளுக்கு ஆளாவர், என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெருகி விட்ட நிலையில், சிறுவர்கள் வீடியோ கேம், கம்ப்யூட்டர், "டிவி'க்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் பெற்றோரை ஏமாற்றி, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். "பளிச்'சிடும் திரை முன்பு பலமணி நேரம் செலவிடுவதால் அவர்களின் கண்ணும், மனமும் பாதிப்படைகிறது. மதுரை அரவிந்த் கண்ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.முரளிதர் கூறியதாவது:"டிவி', வீடியோ கேம்களில் ஈடுபடுவோர் கண்களை சிமிட்ட மறந்து போவார்கள். இதனால், கண்களில் அதிகம் நீர்வற்றிய நிலையில், அதிக சிரத்தை ஏற்பட்டு, உளைச்சல் ஏற்படும்.

தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் சிவந்து போகும். கண்களுக்கு களைப்பு ஏற்படும். இதனால், நேரம் வீணாவதுடன் தேவையின்றி கண்களுக்கு பாதிப்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும். கண்களில் பார்வை குறைவாக உள்ளவர்களை "மானிட்டர்'களின் முன் நெருங்கி அமர்ந்து ரசிப்பதை வைத்து கண்டு பிடிக்கலாம். இப்படி நெருங்கி அமர்ந்து ரசிப்பதால், மானிட்டர்களில் இருந்து வரும் ஒளி அதிகபட்சமாக "பளிச்'சிடுவதால் மாணவர்களின் கவனம் போகும். அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் (எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்) மூளைவரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளை மேற்கொள்வோர் சந்தேகிக்கின்றனர்.

தரமான மொபைல்களில், வெளிப்படும் கதிர்வீச்சின் அளவை குறிப்பிட்டு இருப்பர். பல சீன தயாரிப்புகளில் அவற்றை குறிப்பிடுவதில்லை. வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே தெரியவரும். இதனால் சிறுவர்களிடம் மொபைல், "டிவி', வீடியோ போன்றவற்றை தரக்கூடாது. அவற்றை பயன்படுத்தும் அவசியம் இருந்தால், மானிட்டர்களில், ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இருட்டறையில் இருந்து அவற்றை பார்ப்பதை தவிர்த்து, வெளிச்சத்தில் இருந்தபடி பார்ப்பது கண்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மனநல பிரிவு தலைமை பேராசிரியர் வி.ராமானுஜம் கூறியதாவது: வீடியோ கேம் விளையாடுவது, எந்நேரமும் "டிவி' முன் செலவிடுவது, போதைப் பழக்கத்தை போன்று நம்மை ஆக்கிரமித்து விடும். சிறுவர்கள் அவற்றிற்கு அடிமையாகி விட்டதையே குறிக்கும். இதனால் உடல், உள்ளத்தின் நலம் கெடும். படிப்பின் மீதான ஆர்வமும், கவனமும் கெடும். மொத்தத்தில் வாழ்க்கையே தொலைந்து போகலாம்.வீடியோ பழக்கத்தில் மூழ்கும் சிறுவர்கள் அதற்காக பெற்றோரை ஏமாற்றி பணம் பெறும் சூழ்நிலை உருவாகும். பின்னாளில் அது திருட்டு, மோசடி போன்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். மனதளவில் அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். சுய கட்டுப்பாட்டை இழந்து போவர். பள்ளிக்கு போகாமல், போக்குக் காட்டிச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

Saturday, November 06, 2010

சாதிக்க வேண்டுமா ???

  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் தேவை
  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு தேவை
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் தேவை
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் தேவை
  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் தேவை
  • வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை தேவை
  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு தேவை
  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தைரியமான மனம் தேவை
  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் தேவை
  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் தேவை
  • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் தேவை
  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் தேவை
  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் தேவை
  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை தேவை
  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை தேவை
  • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்புணர்வு தேவை
  • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் பக்குவம் தேவை
  • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை தேவை
 நன்றி : நஸ்ருத்தீன் ஸாலிஹ் (அனுப்பித்தந்தவர்)

Monday, November 01, 2010

புலிவாலை பிடித்த வாழ்க்கை

பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!    
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?

வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!

ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!

மனைவி மக்களை பார்த்தால்
மன சந்தோஷம் ஆனால்
நம்முடைய கையிருப்பும்
எடுத்த விடுப்பும்
கரைய கரைய மனதில் பீதி!
வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!

எத்தனை கொடுத்தாலும்
போதுமென்ற மனம் இல்லை
இதுதான் கொண்டு வந்தாயா?
நம் உள்ளமோ வேதனையில்
கொடுத்த பொருள் நன்றாக
இருந்தது என்று சொல்லி விட்டால்
தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!
சொல்லத்தான் மனமில்லை!

கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!

சகோதரிகள் திருமணம் முடித்து
வீட்டையும் கட்டி விட்டு
தொழிலுக்கு பணத்தோடு
ஊரில் தங்கிவிட வேண்டும்!
எல்லாம் முடிந்து
நாமும் குடும்பத்தலைவன்
ஆன பிறகு மீண்டும்
அதே பழைய இடம்
வீடு பிள்ளைகள் திருமணம்
ஊரில் நிரந்தரம் என்பதும்
கனவாய் போனதே!

வழி அனுப்ப வாகனத்தில்
வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!
விமான நிலையத்தில் நாம்
உள் நுழைவதை பார்த்தவுடன்
அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!
இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு
ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்
திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை
என்ன சொல்லி சமாளிக்க!
நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!
குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி
இல்லையா என்று உள்ளம் கலங்க
என்ன செய்வோம் எத்தனை காலம்
இந்த அடிமை வாழ்க்கை!
நாம் பிடித்தது புலி வால் அல்லவா?

ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்
எல்லோரும் சொல்லும் வார்த்தை!
சென்றவர்கள் சில காலம் கழித்து
மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!
ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்
என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்
குலைந்துவிட என்ன செய்ய
மீண்டும் மனப்போராட்டம்!

ஊரில் சிறு தொழில் வைக்காதே
பெரிதாக தொழில் தொடங்கு
ஆலோசனை இலவசம்!
பணத்தை எந்த மரத்தில் பறிக்க
காலம் இப்படியேதான் போகுமா?
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்வது எப்பொழுது?

கல்வி இல்லாமல் வந்தவர்கள்
கஷ்டப்படும் நிலையை பார்த்து
கல்வியை கற்றுக்கொண்டு வா!
என்றார்கள், கல்வி கற்று வந்ததும்
நல்ல வேலை மனைவி மக்களுடன்
வாழ்க்கை சிலருக்கு!
கல்வி கற்ற பலர் தனிமரமாக!

ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து
ஏன் இங்கு வந்தாய் என்றால்
இங்கு உள்ள சுகாதாரம்
ஊரில் வருமா அதனால்தான் என்றான்?
இங்கு வந்து வாழும்
குடும்ப பெண்களிடம்
கேட்டால் ஊர் போல் வருமா
வளைகுடா என்றார்கள்!

நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!

பள்ளி விட்டு வந்ததும்
பள்ளியின் கதை சொல்ல
தந்தையை தேடும்
பிள்ளை செல்வங்களை!
தந்தையுடன் செல்லும்
பிள்ளைகளை பார்த்து
நம் தந்தை அருகில்
இல்லையே என்று வாடும்
நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!

வாகனத்தில் செல்லும்பொழுது
சாலைகளில் இருபுறமும்
பசுமை மரங்களோடு
சேர்ந்து வரும் தென்றலை!
இன்னும் நிறைய!
பணம் உண்டு இங்கு
நம் மனம் மட்டும் ஊரில்!
இயந்திரத்தனமாக தொடர்கிறது
புலிவாலை பிடித்த வாழ்க்கை

- வலையில் பூத்தது

Monday, October 18, 2010

விக்கல் ஏன்? எதனால்??

விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், இல்லை' என்பதுதான் பதில்.பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன.
ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.

ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை இந்த விக்கல் விட்டு விட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

விக்கல் ஏன் ஏற்படுகிறது?
வயிற்றையும், மார்புப் பகுதியையும், டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல். தன்னிச்சையாக என்றால்...?
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப் பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்
நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.
ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் மூளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.
உதாரணம்: வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று காற்று வேகமாக வீசு கிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப் போத லாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக் கையில் ஈடுபட்டு விடுகிறது.
பெண்களில் பலர், தங்களது மாராப்பை அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பார்கள். அது, ஏற்கனவே சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சரி செய்வார்கள். இதுவும் அனிச்சைசெயல்தான்.
விக்கல் எப்படி ஏற்படுகிறது?
விக்கல் என்றால் என்ன? எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது.
அதன் தசைநார்கள் திடீரெனவும் தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயற்படும்போதே விக்கல் ஏற்படுகிறது.
தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவையோ இன்றி உங்கள் கட்டுப்பாட்டை மீறி தானகவே இன்றி நடக்கும் செயற்பாடு எனலாம்.
விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம்.
பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன. சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது மிகக் குறைவே.
அவ்வாறு ஏற்படும் போது பொதுவாக நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் ஒருவர் விக்கக் கூடும்.
குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவமும் தேவைப்படாது.
குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் சாதாரண பிரச்னையாயினும் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்சலையும், மற்றவர்கள் மத்தியில் அவமான உணர்வையும் ஏற்படுத்தலாம்.
வீட்டுச் சிகிச்சை
அவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் நிவாரணம் அளிக்கக் கூடும்.
உதாரணமாக சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.
அதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.
சில தருணங்களில் மருத்துவரிடம் சென்று குறுகிய கால மருந்துகள் எடுக்கவும் நேரிடலாம். (Gaviscon)போன்ற மருந்துகளும் உதவலாம். Chlorpromazine, Haloperidol, Gabapentin, Metoclopramide
போன்ற பல மருந்துகள் உதவும். ஆயினும் இவை எவற்றையம் மருத்துவ ஆலோசனையின்றிதாங்களாகவே வாங்கி உபயோகிக்கக் கூடாது.
மேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.
குறுகிய நேர விக்கல்கள் பொதுவாக Phrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப்படுவதாலேயே ஏற்படுகின்றன.
நீண்ட நாட்களுக்கு தொடரும் விக்கல்
ஆனால் நீண்ட நாட்களுக்குத் தொடரும் விக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். சில வேளைகளில் சற்று பாரதூரமான நோய்களாலும் ஏற்படுவதுண்டு.
மண்டை ஓட்டுக்குள் அழுத்தம் (Intra cranial Pressure) அதிகரிப்பது, மற்றும் சிறுநீரக நோய்களால் குருதியில் யூறியா (Blood Urea) அதிகரிப்பது ஆகியன காரணமாகலாம்.
எனவே நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் விக்கல் தொடர்ந்தால் மருத்துவரிடம் காட்டி முழுமையான பரிசோதனை செய்வது அவசியமாகும். காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்குவார்.
விக்கல் ஆண் பெண் எனப் பேதம் பாரப்பதில்லை. நீண்ட காலம் தொடரும் விக்கல்கள் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறதாம்.
நீண்ட நேரம் விக்கல் எடுப்பது நோயாளியைக் களைப்படையச் செய்வதுடன், உணவு உண்பதையும்,நீராகாரம் உள் எடுப்பதையும் பாதிக்கக் கூடும். அவ்வாறாயின் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவது உதவலாம்.
எவ்வாறாயினும் விக்கல் என்பது மரணத்தின் வாசல்படி அல்ல.
 
நன்றி: தினக்குரல்நன்றி -நீடூர் .இன்போ 

Sunday, October 17, 2010

BOSS ஆகலாம் அப்புறம்.... PASS சும் ஆகலாம்

ஒரு கதை. அதன் லாஜிக் மேஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதன் நீதியை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.
மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் அது. அங்கு மனிதர்களைப் பிடித்துத் தின்னும் பழக்கம் உள்ள கூட்டம் ஒன்றை நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்காக வேலைக்கு அமர்த்தினார்கள். நிறுவனத்தின் மனித வளத் துறை தலைவர் முதல் நாள் அந்தக் கூட்டத்தினரிடம், 'உங்களுக்கு இங்கே சகல வசதிகளும் செய்து தரப்படும். நீங்கள் இங்கு எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். எல்லாமே இலவசம். ஆனால், மனிதரை நீங்கள் பிடித்துத் தின்றுவிடக் கூடாது!" என்றார். அவர்களும் ஒப்புக்கொண்டு கடினமாக உழைத்து வந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, அவசர மீட்டிங் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே மனித வளத் துறைத் தலைவர் அந்தக் கூட்டத்தினர் முன் கோபமாக இருந்தார்... 'எங்களுக்கெல்லாம் தலைவராக இருந்தவரை உங்களில் யாரோ ஒருவர் கொன்று தின்றுவிட்டார்!' என்று துவங்கி, வசவு மழை பொழிந்துவிட்டுச் சென்றார். அவர் தலை மறைந்ததும், அந்தக் கூட்டத்தின் தலைவன் மெல்லிய குரலில் சொன்னான், 'பாருங்கள் முட்டாள்களே... இதுவரை இந்த நிறுவனத்தில் எத்தனையோ மேனேஜர்களைப் பிடித்துத் தின்றிருப்போம். ஆனால், யாருக்கும் தெரியவில்லை. இப்போது மிக முக்கியமானவர் ஒருவரைத் தின்றுவிட்டீர்கள். மாட்டிக்கொண்டோம்!'
ஆம்... ஒரு நிறுவனத்தில் மேலாளர் என்பவரைவிட C.E.O (Chief Executive Officier) எனப்படும் முதன்மைச் செயல் அலுவலரின் பணி எத்தனை இன்றியமையாதது என்பதைக் குறிப்பிடவே இந்தக் கதை!
மேனேஜர்கள் சொன்னதைச் செய்பவர்கள். இப்படிச் செய்யலாம் என்று ஆலோசனை கூறுபவர்கள். ஆனால், அதை ஏன், எதற்கு, எப்படிச் செய்ய வேண்டும் என்பது அந்த நிறுவனத்தின் C.E.O-வுக்கு மட்டுமே தெரியும். நிறுவனத்தில் மட்டுமல்ல; தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்கிற விதத்தில் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத் தாங்களே C.E.O ஆக இருக்கிறார்கள். அவசியம் இருக்க வேண்டும்!
C.E.O முதல் சிறந்த C.E.O வரை அனைவருக்கும் தேவையான மிக அடிப்படையான தகுதிகள் எவை? அவற்றை எப்படி இனம் காண்பது? எப்படி அவற்றைக் கூர்மைப்படுத்துவது? அனுபவசாலிகள் பகிர்ந்துகொள்கிறார்கள்...
"ஊழியர்கள்தான் ஒரு நிறுவனத்தின் சொத்து. ஒரு தொழிலில், ஏகப்பட்ட பணம் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், மனித முதலீடு இல்லாமல் போனால் அந்த நிறுவனம் முன்னேற முடியாது. இதனால்தான், பல நிறுவனங்கள் மனித வளத் துறை என்ற சொல்லைக் கொஞ்சம் மாற்றி, மனித மேம்பாட்டுத் துறை என்று வைத்திருக்கின்றன. முன்னது, நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கும். பின்னது, நிறுவனத்தோடு வளரும் ஊழியர்களின் மேம்பாட்டையும் குறிக்கும். வளர்ச்சி அல்லது மேம்பாடு என்றால், ஊதிய உயர்வு மட்டுமே அல்ல; அதையும் 'நான் மானிட்டரி' எனப்படும் பணம் சாராத பயன்களையும் தங்களின் ஊழியர்களுக்குத் தர வேண்டும்.
ஒரு நிறுவனத்தில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே உழைக்கும் 'வொர்க் ஹார்ஸ்', தங்களின் பணித் திறனையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் உயர்த்திக்கொண்டு, தன் நிறுவனத்தின் உயர்வுக்காகவும் திட்டமிட்டு உழைக்கும் 'ஸ்டார் பெர்ஃபாமர்ஸ்', வேலையே செய்யாதவர்கள், புதியவர்கள் என்று ஊழியர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். C.E.O என்பவர் இந்த நான்கு குதிரைகளையும் ஒரே சீராக இயக்க வேண்டும்!" என்கிறார் விஷன் அன்லிமிட்டெட் நிறுவனத்தின்C.E.O முனைவர் பாலசுப்பிரமணியன். கல்லூரி முடித்து பெரும் நிறுவனங்களுக்குள் எதிர்காலக் கனவுகளுடன் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு சில அடிப்படை மேலாண்மை நுணுக்கங்களைப் பட்டியலிடுகிறார் இவர்.
கவுன்சிலிங் திறன்கள்:
பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் நாள் ஒன்றுக்கு 50 பீட்ஸாக்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. புதிதாக வேலைக்கு ஒருவர் வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் 3 பீட்ஸாக்கள் காணாமல்போயின. எல்லாப் பணியாளர்களையும் விசாரித்தார்கள். குறிப்பாக, புதிதாக வேலைக்குச் சேர்ந்தவரை மிகக் கடுமையாக விசாரித்தார்கள். அவரோ, தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று கெஞ்சிக் கதறினார். நிறுவனத்தின் பார்வை இந்தப் பணியாளர் பீட்ஸாவை எடுத்துச் சாப்பிட்டு இருக்கலாம் என்ற கண்ணோட்டத்திலேயே இருந்தது. விசாரணைகளுக்குப் பிறகும் பீட்ஸா காணாமல் போவது வாடிக்கையானது. வேறு எந்தப் பணியாளரும் அந்த செக்ஷனுக்கு வர வாய்ப்பு இல்லாத நிலை. ஒருநாள் அந்தப் புதிய பணியாளருக்கு கவுன்சிலிங் செய்தபோதுதான் அவர் 'க்ளெப்டோமேனியா' என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. 'சும்மா, ஜாலிக்காகவும் த்ரில்லுக்காகவும்தான் பீட்ஸாக்களைத் திருடினேன்' என்று ஒப்புக்கொண்டார். அது ஒரு குறைபாடு என்பதுகூட அதுவரையில் அவருக்குத் தெரியாது. பின்பு, பலகட்ட கவுன்சிலிங் சிகிச்சைகளுக்குப் பிறகு, அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டார்.
ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்னைகள் இருக்கும். 'வீட்டுப் பிரச்னையை வீட்டோடு விட்டுவிட்டு வா!' என்று சொல்கிற கதை எல்லாம் அரதப் பழசு. மனிதனை மனிதனாக நடத்துவதுதான் மேலாண்மையின் முதல் அரிச்சுவடி. அவன் ரோபோ கிடையாது. ஆபீஸ் வாசலை மிதித்தவுடன், தன் வீட்டுப் பிரச்னைகளை தனியே கழட்டிவைத்துவிடுவதற்கு. அவன் சந்திக்கிற பிரச்னை அவன் செய்கிற வேலையிலும் பிரதிபலிக்கும். அந்தப் பிரதிபலிப்புதான் வேலையில் தவறாக எதிரொலிக்கும். மற்றபடி, ஒரு பணியாளன் வேண்டுமென்றே தவறுகள் செய்ய மாட்டான். அந்தத் தவறு, மற்றவர்களின் வேலைகளையும் பாதிக்கிறபோது, அது நிறுவனத்தின் பிரச்னையாக உருவெடுக்கும். ஆக, அந்தப் பிரதிபலிப்பு ஏற்படுகிறபோதே அந்தப் பணியாளரைத் தனியாக அழைத்துப் பேச வேண்டும். அவரின் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். 'என்னப்பா... என்ன பிரச்னை?' என்று எடுத்தவுடனே கேட்டால், பதில் வராது. ஒரு பிரச்னையின் வேர் எங்கு இருக்கிறது என்பதை அறிய, அவரைச் சுதந்திரமாக இருக்கும்படியான உணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்குத்தான் இந்த கவுன்சிலிங் திறன்கள் தேவைப்படுகின்றன. இதில் முக்கியமான அம்சம், நீங்கள் அவருக்குத் தர வேண்டியது ஆலோசனைதானே தவிர, அறிவுரை அல்ல!
பாராட்டும் குணம்:
அந்த நிறுவனத்தில் அனைவருக்குமே சந்தோஷை ரொம்பப் பிடிக்கும். சந்தோஷ் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், அவன் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தார் அந்த மேலாளர். முன்பு இருந்த நிறுவனத்தில் மிகவும் முசுடு என்று பெயர் எடுத்தவர் அந்த மேலாளர். அவர் அறைக்குச் சென்றதும் அவரை வாழ்த்தி வரவேற்க ஊழியர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்றார்கள். போன வேகத்திலேயே எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு வந்தார்கள். காரணம், அவர்கள் எப்படிப் பாராட்டினாலும், அவர் ஒரு புன்னகைகூடச் செய்யவில்லையாம். ஏன் என்று கேட்டால், அவர் எந்த ஒரு புகழ்ச்சிக்கும் மயங்காதவராம். கடைசியாக, சந்தோஷ் சென்றான். அரை மணி நேரம் கழித்து முகத்தில் சிரிப்புடன் வந்தான். எல்லோரும் என்னவென்று விசாரிக்க, அவன் மேனேஜர் தன்னைப் பாராட்டியதாகச் சொன்னான். அனைவருக்கும் ஆச்சர்யம். '30 ஆண்டு காலமாக வேலை செய்பவர்களையே ஒரு வார்த்தை விசாரிக்காமல், வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன உன்னை மட்டும் எப்படிப் பாராட்டினார்?' என்று கேட்டனர். அதற்கு அவன் சொன்ன பதில், 'எந்த ஒரு புகழ்ச்சிக்கும் மயங்காத ஒரு மாமனிதரை இன்றுதான் பார்க்கிறேன் என்று பாராட்டினேன்!' என்றான்.
'பணத்தால் வாங்க முடியாத மனிதர்களைக்கூட பாராட்டுகளால் வாங்கி விட முடியும்!' என்றான் சீஸர். மனம் திறந்த பாராட்டு என்பது ஒரு கிரியா ஊக்கி. இன்று பல நிறுவன மனித வளத் தலைவர்களுக்குத் தங்களின் பணியாளர்களைப் பாராட்டத் தெரியவில்லை. ஒரு கைகுலுக்கல், ஒரு முதுகு தட்டல், தோளில் கைபோட்டுக்கொண்டு ஒரு சிறு நடை, பதவி மறந்து ஒன்றாக கேன்டீனில் டீ சாப்பிடுவது... இவைபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றை முயன்று பாருங்களேன். அப்புறம் உங்களை எந்தப் பணியாளருக்குத்தான் பிடிக்காது. யார் பாராட்டுகிறாரோ அவரை உலகமும் பாராட்டும்!
பகிர்ந்து பணி செய்...
ஆடு மேய்ப்பவனிடத்தில் ஒரு புலியும் நரியும் வேலை கேட்டு வந்தன. அந்த முட்டாள் மேய்ப்பனோ, புலியிடத்தில் 'நீ என் ஆடுகளைப் பாதுகாக்கும் வேலை செய்' என்றான். நாயிடத்தில் 'நீ என் ஆடுகளுக்கு உணவு தேடிக் கொண்டு வா' என்றான். நாய் வெறும் பிஸ்கட்டையும் மற்ற உணவு வகைகளையும் கொண்டுவந்தது. புலிக்கு அலுப்புத் தட்ட, ஒருநாள் ஒரு ஆட்டைப் பிடித்துத் தின்றது. அப்படியே தினமும் எல்லா ஆடுகளையும்... அப்புறம் நாயையும்... இறுதியில் ஆடு மேய்ப்பவனையும். யாரிடம் எந்த வேலை கொடுக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால் இது நடந்திருக்குமா?
'சீஸர் ஆணையிட்டால், அது செய்து முடிக்கப்பட்டது என்று அர்த்தம்' என ஒரு சொற்றொடர் இருக்கிறது. எவரிடம் சொன்னால் ஒரு காரியம் செய்ய முடியுமோ, அவரிடம் கொடுப்பது முக்கியம். 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு', 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பவைபோலத்தான் இதுவும். 'இந்தச் செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க இவரால் முடியும் என்று நினைத்தால், அவரிடம் அந்தச் செயலைக் கொடுப்பதுதான் சிறந்தது' என்று திருவள்ளுவர் சொல்வார். அதிகாரத்தை ஒரே மையத்தில்வைத்து இருக்காமல் சிறிது தளர்த்திப் பரவலாக்க வேண்டும். அப்போது, வேலைப் பகிர்வு மிகவும் சுலபமாகவும் சிறப்பாகவும் முடியும். வேலையில் அலுப்பு தட்டும் என்பதால்தான், இன்று பல நிறுவனங்களில் 'பணிச் சுழற்சி' முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது!
கலந்தாய்வு:
மியாமி கடற்கரைக்கு வருபவர்களால் நிறையக் குப்பைகள் ஏற்படுகின்றன. அதனைக் குறைக்க என்ன செய்வது என்று ஆலோசித்தார்கள் நிர்வாகிகள். அப்போது ஐஸ்க்ரீம் குப்பைகள்தான் மிக அதிகமாக இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்துவிட்டாலே, கடற்கரையை ஓரளவு சுத்தமாக வைத்திருக்கலாம் என்று முடிவு செய்தார்கள். 'சரி, அந்தக் குப்பையை எப்படிக் குறைப்பது' என்று அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் கலந்தாய்வு நடத்தி கருத்துக் கேட்டார்கள். 'காலி ஐஸ்க்ரீம் கோப்பையைக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு பரிசு தரலாம்', 'உள்ளே அனுமதிக்கும்போதே அவர்களிடம் ஒரு டாலர் வசூலித்துவிட்டு, காலி ஐஸ்க்ரீம் கோப்பையைக் கொண்டுவந்தால் அந்த ஒரு டாலர் திருப்பித் தரப்படும்' - இப்படி நிறைய கருத்துக்கள் வந்தன. அப்போது, ஒரு கடைநிலை ஊழியர் ஒரு கேள்வி கேட்டார். 'காலி ஐஸ்க்ரீம் கோப்பையைத் தின்னவைத்தால் என்ன?' அப்போதைக்குச் சிரித்தாலும் அந்த ஐடியாவையும் குறித்துக்கொண்டார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு, அந்த ஊழியர் சொன்ன ஐடியாவில்தான் 'கோன் ஐஸ்' கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் நீதி, எவர் ஒருவரின் கருத்தையும் நிராகரிக்க வேண்டாம். முடிவுகள் எடுக்கப்படும்போது அனைவரையும் கலந்து ஆலோசித்துவிட்டு, அதன் பிறகு சிறந்த முடிவு எடுப்பதே சிறந்த மேலாண்மைத் தத்துவம். அப்படி எடுக்கப்படும் முடிவுகள்கூடச் சில சமயங்களில் தவறாகலாம். ஆனால், மேலாண்மையில் 'ட்ரையல் அண்ட் எரர்'தான் வளர்ச்சிகளுக்கு உதவுகின்றன என்பதை மறக்கக் கூடாது.
நாம் செய்கின்ற வேலைகளில் பிரச்னைகள் இல்லாமல் இருந்தால், ஏதோ பிரச்னை இருக்கிறது என்றுதான் அர்த்தம். நாம் பார்க்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும்... அதற்கு யார் முன்வந்து பொறுப்பேற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் ஒரு நிறுவனத்தில் C.E.O. ஆக வர முடியும். நல்லது நடந்தால்... அதைக் குழுவாகக் கொண்டாடியும், கெட்டது நடந்தால்... 'அதற்கு தான் மட்டுமே' என்று முன்வந்து எதிர்கொள்வதும் ஒரு சிறந்த C.E.O ஆக உங்களை அடையாளம் காட்டும்!
சில அடிப்படைத் தகுதிகள்!
"எந்த ஒரு C.E.O-வுமே கீழே களத்தில் இறங்கி சுற்றிச் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும்னு கட்டாயம் கிடையாது. ஒரு நல்ல C.E.O-வுக்கான முழுமுதல் தகுதி தன் ஊழியர்களை மனம் கோணாமல் பார்த்துக்கொள்வது மட்டும்தான்!"- முதல் வரியிலேயே விஷயத்துக்குள் வந்தார் பிரவீன். சாஃப்ரான் இன்ஃபோ மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் C.E.O. முதன்மைச் செயல் அலுவலர் பொறுப்புக்கான அடிப்படைத் தகுதிகளாக இவர் பரிந்துரைப்பது பின் வருவன!
எந்தக் காரணம்கொண்டும் உறவினர்களுக்கு தொழிலில் முக்கியத்துவம் தராதீர்கள். இயல்பிலேயே திறமையான பிற தொழிலாளர்களுக்குள் அது ஊமைக் காயத்தை உண்டாக்கும்!
எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் தொழிலாளர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்!
பாண்ட் பத்திரங்களில் வாங்கும் கையெழுத்தைவிட, பரஸ்பரப் புரிதல் மட்டுமே கம்பெனியின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும்!
படிப்பு இருக்கிறது, முதலீடு செய்யப் பணம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில் கண்மூடித்தனமாகத் தொழிலில் இறங்காதீர்கள். படிப்படியாகத் தொழில் கற்று, போதிய அனுபவத்துடன் ஒரு கம்பெனியின் C.E.O ஆன பின் உங்கள் வெற்றி உறுதியாகிறது!
தலை சிறந்த C.E.O ஆக நீங்கள் பிரகாசிக்க பட்டங்கள் எல்லாம் தேவை இல்லை. சூழ்நிலைகளையும், மனிதர்களையும், பிரச்னைகளின் காரணத்தையும் புரிந்துகொண்டால் போதும்!

நன்றி: யூத்புல் விகடன்.

Saturday, October 16, 2010

ஈன்ற பொழுதினும் - சிறுகதை

நன்றி : சமரசம்

பொய்யராக மாறிவிடுவது எளிது !!!

தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?

நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோ
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )

சகோதரர்களே இன்று இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதாவது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்களை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை காண்போமா?

பழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்
பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்! ஆதாரம் இதோ

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த பழங்களில்  அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா?

மிருகங்களின் வாயிலாக பொய்யை பரப்புதல்
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள்! ஆதாரம் இதோ

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா? இவைகள் பேசிவிடுமா? பறக்குமா? சிரிக்குமா?

இப்படிப்பட்ட செய்திகள் உங்கள் மெயில் இன்பாக்ஸில் கண்டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்கள். இந்த செயல் யுத, கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும்! ஆதாரம் வேண்டுமா? இதோ

 சிந்திக்க சில வழிகள்
அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வி்ன் பெயர் தக்காளியில் வந்துவிட்டால் உடனே அதில் சிறப்பு என்கிறீர்களே அல்லாஹ்வின் பெயர் மட்டும்தான் தக்காளியில் தென்படுமா? இதோ இவைகளும் தென்படுகின்றன
கிராஃபிக்ஸ், எடிட்டிங் துணையுடன் பொய்களை பரப்புவது!
இன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது அதன் மூலம் மக்களை மூடர்களாக வழிதவற விடப்படுகிறார்கள்.

கிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்துவிட்டது!

ஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டு வீடியோ படமான மசூதியின் பறக்கும் மேற்கூறை ஆகியனவாகும்.
இவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே! இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா? இதோ

கப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்
கப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.”
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)

மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா? இதை உணர வேண்டாமா?

இதோ முஸ்லிம்களில் பலவீனர்கள் பரப்பும் கப்ரு வேதனை பற்றிய புகைப்படங்கள்
இந்த புகைப்படம் கப்ரு வேதனைக்கு காட்டப்படும் போது கூறும் புழுகு மூட்டைகள் இதுதான்.

    * இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம்தோண்டி எடுக்கப்பட்டது.
    * உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

    * சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது. உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.

மேற்கண்ட இந்த கருத்துக்கள் புழுகு மூட்டைகளாக தென்படுகின்றன இதுபற்றி இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்!

தமிழகத்தில் தினமும் செய்திகளில் இடம்பெறும் மிக முக்கியமான தகவல்களில் ஒன்று கீழ்கண்ட செய்திதான்!

கள்ளக்காதல் தொடர்பால் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். காவல்துறையினரின் புலன்விசாரனையில் உண்மை வெளிவந்தது பிணத்தை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது”

இப்படிப்பட்ட பிணங்களை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கும் போதுகூட அந்த பிணங்கள் மேலே கப்ரு வேதனைக்கு காட்டப்படும் அளவுக்கு சின்னாபின்னமாக இருக்காது அப்படியானல் கள்ளக்காதலால் கொலையுண்டவர்களுக்க அதாபு இல்லையா? என்ற கேள்வி எழவில்லையா?

பிர்அவ்னுடைய உடல் படிப்பினையில்லையா?
மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான் அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது! எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா?

கப்ரு வேதனைக்கான ஞானம் மனிதனுக்கு உள்ளதா?
கப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை ஏனெனில் கடலில் தள்ளப்பட்ட பிணங்கள், நெருப்பில் எறிக்கப்படும் பிணங்கள் வேதனைகளை எப்படியாவது எங்கேயாவது அனுபவித்துக்கொண்டு இருக்கலாம் அதற்கான ஞானம் மனிதனுக்கு வந்துவிடுமா?

அல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கை வைக்காதீர்
தக்காளியில், ஆட்டு ரோமத்தில், தர்புசனியில், சுட்ட சப்பாத்தியில் அல்லாஹ்வின் பெயர் போன்ற அரபு எழுத்துக்களை கண்டவுடன் அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்தீரா என்று ஆஹா ஓஹோ என்று பேசுகிறீர்கள் இது பலவீனமான நம்பிக்கை மட்டுமல்லாமல் அல்லாஹ்வை கிண்டலடிக்கும் செயலுமாகும்!

சிந்தித்துப்பாருங்கள்
மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா? உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா?

அல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா?

எது அதிசயம்
அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா? இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்!

இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்!

தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்!

துபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்!

வானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்!

எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்!

அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
தக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை  முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்!
ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” ௲ நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

என் இறைவன் அழகானவன்! தூய்மையானவன்! ஆற்றல்மிக்கவன்!
அல்ஹம்துலில்லாஹ்
 
நன்றி- இஸ்லாம் இனிய சுவனப்பாதை

Thursday, October 14, 2010

கிட்னி கல் என்றால் என்ன?

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்

கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக்  கூறமுடியவில்லை.

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.

யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது
அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.

கிட்னி கற்கள் யாருக்கு வரும்-

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கிட்னி கல் - அறிகுறிகள்

சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.

நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட்,ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

ஆராய்ச்சியின் முடிவுகள்

Eric taylor MD மற்றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் :

மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒன்று :-Health professionals follow up study 45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு

இரண்டு :- Nurses Health study I 94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.

மூன்று :- Nurses Health study II 1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு

Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH
(Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர்.

இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில்,

1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.
4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.
5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.

இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension) , நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது :--

மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது, *நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.

*முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
*பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
*மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
*பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
* புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
* சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.

சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம்.

கடுமையான வ‌லி, ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் போ‌ன்றவ‌ற்றை இது ஏ‌ற்படு‌த்த‌க் கூடு‌ம்.

இத‌ற்கு, ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌ல் இவை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி,
அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.

மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது.

‌வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற்ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள். உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

-நன்றி ஏ சி எம் இப்ராஹீம் அவர்கள்

Wednesday, October 13, 2010

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!

தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ தனிப்பட்ட செய்தியல்ல! ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை பரவலாக காணமுடிகிறது. நம்மவர்கள், குறிப்பாக இளம் வயதினர்கள் இதுபோன்ற குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதற்கு முதல் குற்றவாளியாக அவர்களுடைய பெற்றோர்களை நிறுத்தலாம். சிறுவயது முதல் தாய்பாசத்தோடு சேர்த்து நற்போதனைகளையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தைகள் தான் பிற்காலங்களில் அவர்கள் பெரியவர்களான பிறகு இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய வீடு, கல்வி, தொழில் சூழல்களில் மருந்துக்குக்கூட மார்க்கத்தை நாம் காணமுடியாது! கண்ணியமாக மார்க்க அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் தான் ஒரு சமுதாயத்தைச் சிறப்புறச் செய்யமுடியும்.

பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளை மேல்நிலைப்பள்ளி / கல்லூரிகளில் சேர்த்துவிட்டு நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்றில்லாமல் அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அப்படி கவனிக்கத்தவறிய

குழந்தைகள் தான் கூடாநட்பு, காதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட்டு சமுதாயச் சீரழிவை உண்டாக்குகின்றனர். கூடாநட்பு, காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிப்பதற்கு இஸ்லாம் எந்த அளவிற்கு இவற்றைத் தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு பெற்றோர்களிடத்தில் இல்லாததே காரணமாகும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதிஉள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்! நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்! மனம் ஏங்குகின்றது; இச்சைக் கொள்கின்றது; பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது அல்லது பொய்யாக்குகின்றது’ (புகாரி)

‘சிந்தனையும், தவறான பார்வையையும், அசிங்கமான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்துவரும் அசிங்கங்களுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை!

மேற்கூறிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரையை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கூறி கூடாநட்பு என்ற சீர்கேட்டில் தம் பிள்ளைகள் விழுந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் எப்படி காதலிப்பது என்ற கேடுகெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றபோது, அதைத் தடுக்க வேண்டிய பெற்றோர்களும் சேர்ந்துக்கொண்டு தான் அதைப் பார்க்கின்றனர். விளைவு, குழந்தைகள் பரீட்சையில் தேர்வு ஆகாமல் இருப்பது ஒருபுறமிருக்க, தம் பிள்ளைகள் யாருடனேனும் ஓடிப்போகும் போது அவமானம் தாங்காமல் தற்கொலைச் செய்து கொள்கின்ற அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.

மேலும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்”  (அல்-குர்ஆன் 66:6)

நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களான பெற்றோர்களைப் பேணுதல், நேர்மை, உறவினர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை, அமானிதங்களைக் கடைப்பிடிப்பது, தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதுடன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் குடித்தல், உண்ணுதல், பேசுதல், போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களான பிறகு அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைவதோடல்லாமல் இறைவன் தன் திருமறையில் கூறியிருப்பது போல நம்மையும் நம்முடைய குழந்தைகளையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டவர்களாக மாறிவிடலாம்.

கல்வி கற்பதன் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்திய அளவிற்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை! இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்:

‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’  (அல்-குர்ஆன் 39:9)

ஆனால் நாம் நம் குழந்தைகளுக்கு உலகக்கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சியில் 100 -ல் ஒரு பங்கு கூட இஸ்லாமியக் கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதில்லை என்றால் அது மிகையாகாது! நபி (ஸல்) அவர்கள் போதித்த அடிப்படை இஸ்லாமியக் கல்வியோடு சேர்ந்த உலகக் கல்வி தான் இரு உலகிலும் பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது.

நம்மில் எத்தனை பேர் நம்முடைய குழந்தைகளை குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதக் கூடியவர்களாக உருவாக்கி இருக்கிறோம்? இறைவன் திருமறையில், ‘இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்’ என்று ஒரே சூராவில் திரும்ப திரும்ப நான்கு முறை கூறுகின்றான். (பார்க்கவும் : 54:17; 54:22; 54:32 மற்றும் 54:40)

ஓதுவதற்கு எளிதான குர்ஆனின் மேல் குழந்தைகளுக்கு ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக கற்றுக் கொள்வதற்கு கடினமான உலகக்கல்வியில் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். உலகக் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை! மார்க்க கல்வியை விட்டுவிட்டு உலகக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம் என்றுதான் கூறுகின்றோம்! ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்,

‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகின்றான்’ என்று கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர் : முஆவியா (ரலி); ஆதாரம் : புகாரி)

மார்க்கக் கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது. நம் குழந்தைகளுக்கு அல்லாஹ் நன்மையை நாடிவிட்டால் அதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்?

நம்முடைய குழந்தைகளிடம் ‘TOP TEN’ (சுவர்க்கவாசிகள் என நபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட) சஹாபாக்களின் பெயர்கள் கேட்கப்பட்டால், பதில் கூறக்கூடியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் ‘TOP TEN’ சினமாவோ அல்லது பாடலோ கேட்கப்பட்டால் பதில் கூறாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! இதற்காக பெருமைப் படக்கூடிய பெற்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர் என்பதுதான் இதிலே வேதனையான விஷயம்! இதுபோன்ற தவறான செயல்களில் ஆர்வமூட்டுவதன் மூலம், நம்முடைய குழந்தைகளை நாமே படுகுழியில் தள்ளியவர்களாக ஆகிவிடுகிறோம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தம் குழந்தைகளை நல்ல தரம்வாய்ந்த கல்விக் கூடங்களில் சேர்ந்து பயிற்றுவிக்க அனைவரும் ஆசைப்படுவது இயல்புதான்! அப்படி குழந்தைகளை பயிற்றுவிப்பதற்கு, நம் சமுதாய கல்விக்கூடங்களில் சேர்க்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், வேறு கல்விக் கூடங்களில் சேர்ப்பதற்கு முன்பே, இந்த பள்ளியில் / கல்லூரியில் படித்தால் நம் குழந்தைகள் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளான தொழுகை, புர்கா போன்றவைகளை பேணி நடக்க பள்ளி நிர்வாகம் அனுமதிக்குமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர்களின் பங்கு மிக மிக முக்கியமானது என்பதை உணர வேண்டும். ஏனெனில் குழந்தைகள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் என்பதை மறந்துவிடாதீர்கள். அமானித மோசடி செய்து மறுமையிலே இறைவனின் முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடவேண்டாம்.

நம்முடைய குழந்தைகளுக்கு ஜமாஅத்தோடு தொழுவதற்கு கற்றுத்தரவேண்டும். நாம் பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம் நம்முடைய குழந்தைகளை நம்முடன் அழைத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அம்மார் பின் ஸூஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவுத் 495).


குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கை நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக தெளிவுபடுத்துகிறார்கள். சிறுவயது முதலே பழக்கப்படுத்தாத குழந்தைகள் 15 வயது ஆனவுடன் திடீரென்று எவ்வாறு தொழ ஆரம்பிக்கும்? தம்மை மிகப்பெரிய அறிவாளிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் தொழுகையில் கவனக்குறைவாக இருப்பதற்கு, சிறுவயது முதலே அவர்களை தொழுகைக்குப் பழக்கப்படுத்தாதது தான் காரணம் என்றால் அது மிகையாகாது! குழந்தை பெரியவனாக வளர்ந்து இஸ்லாமிய ஒழுக்க மாண்புடன் திகழ்வதற்கு பெற்றோரின் பங்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேலும் நம்முடைய குழந்தைகள் பெரியவர்களான பிறகு தீய, மற்றும் மானக்கேடான செயல்களில் ஈடுபடாமல் நல்லொழுக்கமுடையவர்களாக திகழவேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் விருப்பமாகும். இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் குழந்தைகளை சிறுவயது முதலே தொழச் சொல்லி ஏவி அதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக! இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்! அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்” (அல்-குர்ஆன்  29:45)


ஒருவர் ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்தோடு தொடர்ந்து தொழுவாரானால், நிச்சயமாக அல்லாஹ் அவரை மானக்கேடான மற்றும் தீய செயல்களில் இருந்தும் பாதுகாக்க வாக்குறுதி அளிக்கின்றான்.

நாம் சொர்க்கம் செல்வதற்கு, நம்முடைய நல்ல அமல்கள் மறுமை நாளில் நமக்கு உதவிசெய்யும். நம்முடைய நற்செயல்களைத் தவிர மற்றவர்களுடைய நற்செயல்களின் மூலமாகவும் சொர்க்கம் செல்ல முடியுமா? நிச்சயமாக முடியும்! அதற்கான வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் எத்தனை அழகான ஒரு அறிவுரை! நாம் நம்முடைய குழந்தைகளை மார்க்க போதனைகளுடன் வளர்த்து இருந்தால், நாம் இறந்தபிறகு, நமக்காக நம் குழந்தைகள் கேட்கக்கூடிய துஆக்கள் மூலம், மறுமை நாள்வரை நமக்கு நன்மைகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஏதாவது மாற்றுக் கருத்து உண்டா?

எனவே, குழந்தைகளை நல்ல முறையில், இஸ்லாமிய வழிமுறைகளில், வளர்க்க வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்றது என்பதை மறந்து விடவேண்டாம். அவ்வாறு வளர்த்து விட்டால், நாம் நம்முடைய பொறுப்பு மற்றும் அமானிதத்தை நிறைவேற்றி விட்டதோடு அல்லாமல், நம்முடைய குழந்தைகள் நமக்கும் மற்றும் நம் சமுதாயத்திற்கும்  ஈருலகில் பயன்களை ஏற்படுத்தித் தரவல்லவர்களாக மாறக் கூடும்!

வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நல்லவர்களுடைய கூட்டத்தில் ஆக்கி அருள்வானாகவும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

சுவனத்தென்றல் . காம்

குளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாக ரத்து !!!

திருமணமாகி சில வாரங்களே ஆன கணவனிடமிருந்து விவாக ரத்து கோரி வழக்கு தொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக எகிப்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக தனது கணவன் குளிக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைப் பதிவு செய்தார் பெட்ரோலியம் இன்சினியரிங் படித்த பெண்.

குளிப்பதால் சிலவகையான ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறி ஒரு மாதமாக குளிக்க மறுப்பது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக எகிப்து அரபு நாளிதழ் 'எகிப்து டுடே' தெரிவித்துள்ளது.

மருத்துவரிடம் பரிசோதித்ததில் கணவருக்கு தண்ணீரில் அலர்ஜி இருப்பது உறுதியானது. எனினும் தன்னை சுத்தப்படுத்திக்கொள்வதற்கு அந்த ஒவ்வாமை தடையல்ல என்பதால் குளிக்கும்படி கோரிய மனைவிமீது கணவனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

குளிக்காமல் இருப்பது தனது பழக்கம் என்பதால் அதைக் கைவிட முடியாது என்றும் அதற்காக விவாக ரத்து செய்யவும் முடியாது என்று மறுத்துள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அப்பெண் அணுகியுள்ளார். இஸ்லாமிய ஷரிஆ சட்டஅடிப்படையில் நியாயமான காரணங்களால் பிடிக்காத கணவனை மணப் பெண் தானாக முன்வந்து விவாகரத்து செய்யலாம் என்பதால் குளிக்காத கணவனை விவாகரத்து செய்து அப்பெண் தலை முழுகியுள்ளார்!

இந்நேரம் . காம்