கண்ணீர்
இரு கரமேந்தி
இறைவனிடம் இறைஞ்சிடும் போது
இயல்பாய் தோன்றிடும் நீர்.
துயர் கண்டு
துவண்டிடும் போது
துடிப்பில் தோன்றிடும் நீர்.
தவறினை உணர்ந்து
திருந்திடும் போது
தவறாது தோன்றிடும் நீர்.
கல் மனதினையும்
கரையச் செய்திடுமே
கன்னங்களில் வழிந்தோடும் நீர்.
- உம்மு ரய்யான்