Monday, December 31, 2012

எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

எங்களுக்கும்
சொந்தமாய் கண்கள் உண்டு..
இருப்பினும் காமிரா மனிதர்களே
எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.!

கண்முன் நடந்தாலும் எதையும்
கண்டு கொள்ள மாட்டோம்.
ஆனால் ஊர் பற்றி எரியும் போது
கூடவே நாங்களும் அழுவோம்.!

நீதிக்கான
எங்கள் கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும்
காலக்கெடு உண்டு.!
அவை புஸ்வாணமாகிப் போகும்
ஊர் அடங்கிய பின்னே!

சினிமாக்கள் எங்களின் சிறைச்சாலைகள்.
தொலைக்காட்சிகள் எங்கள் சவப்பெட்டிகள்.

சுகம் காண்கிறோம் - நாம்
அடிமைகளாக வாழ்வதிலே..
விலை போகிறோம் என்பதை
பெரும்பாலும் அறியாமலே..!

நம் கோபங்களைக் கூட
யாரோதான் தீர்மானிக்கிறார்கள்.!
நம் தாபங்களை எல்லாம்
அவர் தம் செல்வம் கொழிக்க உபயோக்கிறார்கள்..

பொழுதுபோக்குகளில் தான்
எங்கள் பொழுதெல்லாம் போகிறது.
அழுது முடிக்கையில் தான் எம்
அவலங்கள் தெரிகிறது.

அரட்டை அரங்கத்தில் அழுகின்ற
மனிதர் நிலைகண்டு கண் கலங்குவோம்,
நித்தமும் கண்முன் கலங்கும்
மனிதர் நிலை கண்டு சிறு கவலையும் கொள்ளோம்.!

சொந்த மனசாட்சி எங்களுக்கென்று தனியே இல்லை.
புரட்சிகள் பேசும் எங்கள் இதயங்கள்,
தனியாளாய் மாறுகையில்
தறுதலைகளாக மாறும்.

தள்ளுவண்டி காய்கறி கடையாளிடம்
கிராம் குறையாமல் மிச்சம் பிடிப்போம்.
பளபளவென ஜொலிக்கும் வணிக வளாகத்திலே
மொத்தமாய் இழப்போம்..

ஊரெல்லாம் இலஞ்சமின்றி
இருக்க கனாக் காணுவோம்.!
கையூட்டை கச்சிதமாய்
எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் திணிப்போம்.

எல்லோரும் நல்லவராக இருக்கும்படியாய்
கனா காணுவோம்
எல்லோரும் என்பதில் நம் பெயரும் அடங்கியதே
என்பதை வசதியாய் மறப்போம்

தேனீர்க்கடையின் கூட்டு விவாதங்களில்
காந்தியின் அகிம்சைகளில் இம்சைகளை காண்போம்.
பகத்சிங்கின் போராட்டங்களில் பயத்தை படிப்போம்.
திப்புவின் வீரத்தில் ஓட்டைகள் வெடிப்போம்.
நேதாஜியின் முயற்சிகளில் குறைகளைக் காண்போம்.

இறுதியாய் பேசிப்பேசி கலையுகையில்
மொத்தமாய் தொலைவோம்
ஒரு துரும்பும் அசைக்க துப்பில்லா
வெட்டிப் பொம்மைகளாய்..

கண் முன் நடக்கும்
அவலம் கண்டு கலங்காதவரை...
முடிந்தும் தடுக்க முயலா
கொடுமைகள் தொடரும் வரை..
என்னவன் என்பதற்காய் தீயதையும்
ஆதரிக்கும் மனநிலை மாறாதவரை,
கொடுமைகள் கொடுமைகள் கொடுமைகள் என
எல்லாம் இப்படித்தான் வந்து செல்லும் -
இறுதியில் ஒரு நாள் எம்மையும் கொல்லும்.!

-Abbas Al Azadi

Saturday, December 29, 2012

Safety tips for Women

Here are some safety tips for sisters:

1. Always be aware of your surroundings

This applies whether you are traveling alone or in groups. Don’t just focus inwardly on your thoughts if you are alone, or your friends if you are together. Keep one eye out for your environment, looking out for suspicious characters, possible danger, etc.

Also, don’t assume that because your area has been "safe" thus far, that it will continue to be so.

2. Travel in groups

"There is safety in numbers" is not just a cliche. It’s true. Make a point of traveling together with other sisters, whether it’s on public transportation, on campus, in cars, etc.

3. Change the route you normally travel by

If you’ve taken the same bus, train or highway to get to work or school, change your route. Even if it takes you a little longer, your safety is more important. By changing your route, you can avert possible attacks or harassment from those who know your schedule, method and route of travel well. Please note though that you should avoid short cuts that take you through unfamiliar or unsafe areas.

4. Look confident

Walk with a straight posture and your arms swinging by your sides. Avoid slouching or walking like a victim. This makes you an easy target for attackers.

5. When riding by public transportation choose the right seat

If you are riding by bus or train, do not sit on the window seat as you may be "blocked in" by a potential assailant. Always select the seat next to the aisle so that you can quickly leave if necessary.

If you are taking public transportation alone after peak hours, sit as close to the driver as possible and/or choose the section of the bus/train that is most crowded. Try to get a seat near the exit as well.

6. If you are driving alone

Don’t think that if you are in a car, you’re safe. Windows should be up and doors locked even when driving to avoid unwanted passengers at intersections. When you are walking to your car, always have your keys ready, so that you can quickly get into your car.

But don’t just get in right away. Always check your car before entering, especially the back, for any intruders.

7. Never leave your car door unlocked

Even if it means for one minute to drop something off in the mailbox that’s a few feet away. Attackers have been known to lie in wait for such an opportunity.

8. Be careful in parking lots

Always be alert in parking lots, especially when it's dark. Ask someone to escort you to your car. Between cars and inside cars, it's easy for someone to hide and wait until an unalert person comes along.

9. If you are traveling by taxi

Always check the identification of the driver (usually located near the visor) and ensure that it matches the driver. Once inside, don't sit behind the driver as it may be easy for the driver to lock the rear passenger door. Always choose the adjacent seat .

In addition, avoid flagging taxis. Always order taxis so the driver can be traced if something happens.

10. Don’t use the walkman

If you’re used to listening to your walkman while outside, drop this habit, especially in isolated areas. With your walkman on, you cannot hear the approach of a possible attacker.

11. Note "safe houses" along your route

Mentally note houses at intervals on each route you take that can be used as "safe houses" if you are attacked, such as shops or houses that you know to be occupied by a friend or acquaintance.

12. When you make a call from a phone booth

After dialing the number you wish to call always turn around so that you have your back to the phone and may see who or what is coming your way. You will then be able to tell the person to whom you are speaking that you may be in trouble and you may be able to use the weight of the phone as a weapon. The door of a telephone box could be used to wedge in the limbs of the attacker.

13. Do not open the door of your home without checking

DO NOT open the door to your home without first checking from a window, peephole or by asking and verifying who it is. Instruct children to do the same.

14. Report any suspicious activity around your home

If you see people loitering on the streets near your house, call the police on a non emergency number and report it.

15. Invest in a cell phone

This is an invaluable safety device. Keep it with you at all times and keep emergency numbers on it. Also, keep it next to your bed before you go to bed at night. Cell phones were first popularized by women as a security device, business people came later.

16. Parking tips

Avoid parking in areas that are not well lit. Where possible, park close to a school or work entrance or in a parking garage that has an attendant.

If you see a suspicious person approaching or hanging around near your parked car, turn around and go back to an area where there are other people. Try to get an escort to your car through the campus or job security or local police.

17. Tell others about your whereabouts

Parents, spouses and friends should know where you are going and when you will be back, so that your absence will be noticed. Arrange a call in system with a friend if you live alone, whereby you call when you arrive home.

18. Trust your instincts

If you are walking somewhere and feel strange or scared, don’t ignore this feeling. Take extra precautions by walking a little faster to get to a more populated or well-lit area or change the route you’ve been driving on.

19. If you think you are being followed, change your route and activity.

You can cross the street, change directions, or enter a populated building or store. Do whatever is necessary to avoid being alone with the person who is following you. Inform a police officer or security official about the

follower.

20. Attract attention if you are in a dangerous situation.

Get others’ to pay attention to what's happening to you if you are under attack or being harassed. You can alert others by honking a car horn or loudly describing what is happening.

21. NEVER admit that you are alone

If someone calls your home and asks if you are alone, NEVER admit it. Ask who the caller is. If they refuse to identify themselves, calmly hangup. Keep the radio on in the house so that callers will get the impression that others are in the home too. Instruct children to do the same when they pick up the phone.

22. Obscene phone calls

If you receive an obscene call or a crank call, do not talk to the caller. Hang up if the caller doesn’t say anything, or as soon as s/he shouts obscenities. Hang up the phone calmly and do not slam it down. Note down the date and time of the calls. If they are persistent, inform local police.

23. If you are a student

Avoid studying in isolated classrooms in parts of the college campus that are not regularly patrolled by the school’s security officers.

24. In large buildings take the elevator, not the stairwell

Stairwells are usually quiet and dark. Most people take the elevator. But if someone creepy gets on, don’t hesitate to get off at the same time. Or, if someone is already on the elevator who you feel strange about, do not get on and wait for the next elevator.

By Samana Siddiqui

Wednesday, December 26, 2012

இறையச்சத்தை அதிகரிப்பது எப்படி?


இறையச்சத்தை அதிகரிப்பது எப்படி? - 

உரையாற்றுபவர் மௌலவி அப்துல் வதூத் ஜிப்ரி அவர்கள் 


சுவர்க்கத்தில் வீடு- அலாவுதீன் பாகவி

சுவர்க்கத்தில் வீடு – அலாவுதீன் பாக்கவி, நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம், வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம்


Monday, October 22, 2012

ஹஜ் செயல்முறை விளக்கம்



தலைப்பு: ஹஜ் செயல்முறை விளக்கம், 
உரை: மவ்லவி முபாரக் மஸ்ஊத் மதனி, 
இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம், 
வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம், 
நாள்: 18.10.2012

Wednesday, October 10, 2012

அண்ணலாருக்கு எதிராக அவதூறா?

அண்ணலாருக்கு எதிராக அவதூறா? - பொறியாளர் ஜக்கரிய்யா

பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.

டென்மார்க்கின் கார்ட்டூன், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, பிரான்சு நாட்டில் வெளி வந்த கார்ட்டூன் -- போன்றவைகள் நபிகளாரைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பரப்புகின்றன. நற்பண்புகளுக்கும், நேர்மைக்கும், புகழுக்கும், உயர்ந்த மரியாதைக்கும் சொந்தக்காரரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி இப்படியும் குறை சொல்லக்கூடியவர்கள் இருக்க முடியுமா ??? என்று நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதர் என்று பிரகடனம் செய்தார்கள். நாற்பதாவது வயதுவரை அந்த சமுதாய மக்கள் அவர்களை ஒரு சிறந்த மனிதராகவும், தங்களுக்கு மத்தியில் மிகவும் உண்மையாளராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் மதித்து வந்தார்கள்.

அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு உரியவர்களில்லை என்ற கொள்கையை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தபின் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் நபிகளாருக்கு எதிராக இணைவைப்பாளர்கள் தீட்டிய திட்டத்தைப் பின் வருமாறு நபிகளாரைப் பற்றிய ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல் “ரஹீக்” குறிப்பிடுகிறது:

நபிகளாரின் வாழ்வில் நடந்த சதி:

“”...இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவலையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் 'இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்" என்று கூறினான். அம்மக்கள் 'நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்" என்றனர். அவன் 'இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்" என்றான்.

குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: 'இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை."

குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.

குறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?

வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.

குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஓதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.

குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?

வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)”.

மேற்கூறப்பட்ட சம்பவத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ...

முஹம்மது நபியின் பிரச்சாரத்தை ஆதாரங்களைக் கொண்டோ, கருத்து பரிமாற்றங்களைக் கொண்டோ, தர்க்க ரீதியான வாதங்களைக் கொண்டோ எதிர்க்க முடியாது என்பதையும், முஹம்மது நபியின் வார்த்தைகளைச் செவியேற்கக்கூடிய நடுநிலையாளர்கள் முஹம்மது நபியை உண்மையான தூதர் என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் விளங்கிக்கொண்ட முஷ்ரிகீன்கள் முஹம்மது நபிக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக அவதூறுகளையும், இழிவுகளையும், பொய்களையும் பரப்புவதை இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்குறிய முக்கியமான யுக்தியாக பயன்படுத்தினார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த குறைஷிகள் இஸ்லாமிய அழைப்புக்கு எதிராக கையாண்ட வழிமுறைகளின் சுருக்கத்தை “ரஹீக்” பின்வருமாறு குறிப்பிடுகிறது:


1. இஸ்லாத்தைப் பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்.

2. இஸ்லாத்தைப் பற்றி சந்தேகத்தைக் கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கி விடுவதும்.

3. முன்னோர்களின் கட்டுக் கதை என்று கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது போன்றவைகளாகும்.

இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம்:

நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குறைஷிகள் நபிகள் நாயகத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள், நம்மைவிடவும் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளையும், உண்மைத்தன்மையையும் அறிந்திருந்தார்கள். இது எதுவும் நபிகள் நாயகத்தைப் பற்றி மனமுரண்டாக அவதூறு பரப்புவதை விட்டும் அவர்களைத் தடுக்கவில்லை.

இதை வலீதின் கூற்று தெளிவுபடுத்துவதை கவனியுங்கள்:

“நீங்கள் நபியைப் பற்றி எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு அதன் மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுகிறார் என்றே கூறுங்கள்”

நவீன காலத்தில் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நபிகளாரைப் பற்றிய உண்மைகளை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே இன்று இஸ்லாத்தின் வளர்ச்சியை வெறுக்கும் இவர்கள் நவீன ஊடகங்கள் மூலமாக நபிக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தைச் செய்வது, இஸ்லாத்திற்கு எதிராக பீதியைப் பரப்புவது போன்ற அதே பழைய யுக்திகளைத்தான்; இன்றும் கையாண்டு வருகிறார்கள்.

இஸ்லாத்திற்கும், நபிக்கும் எதிராக அவதூறுப் பிரச்சாரத்தைச் செய்வதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை எவ்வித மாறுபாடும் இல்லாமல் தனித்துவத்தோடு பின்பற்றி வருவதையும், மற்றவர்களைப் போல் தங்களது அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதையும் இஸ்லாத்தை மறுப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுமாகும்.

இவர்களின் ஆதங்கத்தை அல்லாஹ் இவ்வாறாக கூறுகின்றான்:

فَلا تُطِعِ ٱلمُكَذِّبِينَ (٨) وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ

எனவே (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால் (விட்டுக் கொடுத்தால்), தாங்களும் தளர்ந்து (விட்டுக்கொடுத்துப்) போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். (அல்குர்ஆன் 68:8,9)

அவதூறு பிரச்சாரம் பற்றி திருக்குர்ஆன்:


நபிகளாருக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறு பிரச்சாரங்களைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:


وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ


(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)

பொதுவாகவே எல்லா இறைத்தூதர்களும் பரிகசிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது:


وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ


இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்ப பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது. (அல்குர்ஆன் 21:41)


முஸ்லீம்களை நிராகரிப்பவர்கள் பரிகசிப்பார்கள் என்பது பற்றி திருக்குர்ஆன்:


إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ


நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். (அல்குர்ஆன் 83:29,30)


அவதூறு பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்:


இப்படிப்பட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகின்றபோது எப்படி அதை எதிர் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ{தஆலா பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.


وَٱصبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهجُرۡهُمۡ هَجرً۬ا جَمِيلاً۬ () وَذَرۡنِى وَٱلمُكَذِّبِينَ أُوْلِى ٱلنَّعمَةِ وَمَهِّلهُمۡ قَلِيلاً() إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا

அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக. என்னையும், பொய்ப்பிப்பவர்களாகிய அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடும். அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக. நிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன (அல்குர்ஆன் 73:10-12)


மேலும் அல்லாஹ் கூறுகிறான் ...


ஆதலால் உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக! உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம். இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள் (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸ{ஜுது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (அல்குர்ஆன் 15:94-99)

முஃமீன்கள் கடுஞ்சொற்களையும், நிந்தனைகளையும் செவியேற்க நேரிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا ۚ وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَ‌ٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ


(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் 3:186)


இந்த குர்ஆன் வசனங்கள் கீழ்வரும் உண்மைகளைத் தெளிவு படுத்துகின்றன:


1. இறைமறுப்பாளர்கள்; அவதூறுப் பிரச்சாரங்களின் மூலமாக நபிகள் நாயகத்தையும், முஸ்லீம்களையும் மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி முஸ்லீம்களின் இறைப் பணியை வீரியம் இழக்கச் செய்யவேண்டும், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்று நாடுகிறார்கள்.


2. இறைமறுப்பாளர்கள் செய்யும் அவதூறுப் பிரச்சாரம் நபியவர்களுக்கும், அதே போல முஸ்லீம்களுக்கும் மனநெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான்.


3. நிராகரிப்பாளர்களைப் பொருட்படுத்தாமல், உங்களுக்கு ஏவப்பட்ட மார்க்கப்பணியைத் தொய்வின்றி செய்து வாருங்கள். அவர்களது பொய் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் உங்களை மார்க்கப் பணியிலிருந்து திசை திருப்பி விட வேண்டாம்.


4. இப்படிப்பட்ட சூழல்களில், பொறுமையை மேற்கொள்ள வேண்டும், மேலும் இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு சிரம் பணிய வேண்டும்;.


5. முடிவாக, இங்ஙனம் பரிகாசம் செய்பவர்களை கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு தக்க தண்டனைகளைக் கொடுப்பதற்கும் அல்லாஹ்வாகிய தானே போதுமானவன் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாட்சியங்கள்:


இன்னும் உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது. மேலும் (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(அல்குர்ஆன் 68:3,4)


மேலும் நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.(அல்குர்ஆன் 94:4)


முஹம்மது நபியின் நபித்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் வாக்குறுதி:

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا


அல்லாஹ் இந்த இறைத்தூதரை எதற்காக அனுப்பினான் என்றால் ...

அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (அல்குர்ஆன் 48:28)

மற்றொரு வசனத்தில் இறைவன் கூறுகின்றான், இணைவைப்பாளர்கள் எவ்வளவுதான் வெறுத்தபோதிலும், இந்த நபியை நேர்வழியைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அனுப்பியக் காரணம், இந்த மார்க்மாகிய இஸ்லாம் அனைத்துக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மிகைத்து விடுவதற்காகத்தான். இதற்கு அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

ஆகவே, இப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களால் இஸ்லாத்தின் ஒளியை அணைத்துவிடலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் ஒருப்போதும் வெற்றி பெற்றதில்லை. இனியும் வெற்றி பெறப் போவதில்லை. இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக இஸ்லாம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, பலர் இஸ்லாத்தின் உண்மையை ஏற்றுக் கொண்டுவருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?

நற்பண்புகளின் தாயகமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் பரப்பப்படும் அனைத்து பொய்களையும், அவதூறுகளையும், கேலிகளையும், அசிங்கங்களையும் வன்மையாகக் கண்டித்து, முஹம்மது நபியை உயிரை விட அதிகமாக நேசிக்கிறோம் என்பதை உலகளாவிய அளவிலே சாத்வீகமான முறைகளில் தெளிவுபடுத்தும் அதே வேளையில், நாம் கவனத்தோடு செயல்படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களும் இருக்கின்றன. அவைகள்:


நபியைப் பற்றிய உண்மையை உலகுக்கு உணர்த்த அருமையான வாய்ப்பு:


இன்றைய பரபரப்பான சூழலில், அனைவரின் கவனமும் முஹம்மது நபியைப் பற்றி திரும்பியிருக்கின்ற நிலையில், உண்மையில் இந்த முஹம்மது நபி யார்? அவர்களது நற்குணங்கள் எப்படிப்பட்டது, அவர்களது எளிமை, தலைமை, வழிகாட்டுதல் போன்றவைகள் எப்படிப்பட்டது என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்திக்காட்ட அருமையான வாய்ப்பாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


நபிக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை மறுத்து உண்மையை நிலை நாட்ட நாம் தயாரா?


நபிகளாரைப் பற்றிய சிறப்புகளை இந்த மறுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமே!, இவைகளையெல்லாம் தெரியாமல் தங்களது வாழ்நாளை வீணடிக்கிறார்களே! என்று ஆதங்கப்படக்கூடிய நாம் உண்மையில் நபிகள் நாயகத்தின் சிறப்புகளைத் தெரிந்திருக்கிறோமா? அவர்களது வாழ்க்கை வரலாற்றைக் கற்றிருக்கிறோமா? அவர்களது வழிகாட்டுதல்களை புரிந்திருக்கிறோமா?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று உலகுக்கு பறைசாற்ற தயாராக இருக்கும் நாம், உண்மையில் அவர்களைப் பற்றி சரியாக தெரிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்வரும் முக்கியமான சிறப்புகளில் எவைகளை நாம் தெரிந்திருக்கிறோம் என்று உளப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்:


• நபியின் ஆன்மீக வழிகாட்டுதலும் அதன் சிறப்புகளும்.

• நபியின் இறைபக்தி மற்றும் இறைவழிபாடுகள்

• நபியின் ஆட்சி மற்றும் அரசியல் தலைமை

• நபியின் போர்த் தலைமை மற்றும் அதில் கையாண்ட மாண்புகள்.

• எல்லா காலகட்டத்திலும் அவர்கள் கடைபிடித்த எளிமை மற்றும் பற்றற்ற தன்மை.

• நபிகளாரின் பணிவு, கனிவு மற்றும் ஈகை

• நபிகளார் கொண்டு வந்த சமூகப் புரட்சி, சமத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள்

• நபிகளார் கொண்டு வந்த ஆன்மீக, அரசியல், சமூகவியல் மற்றும் பொருளாதார சட்டதிட்டங்கள்

• நபிகளாரின் குடும்ப வாழ்வு மற்றும் வழிகாட்டுதல்

• நபிகளார் கொண்டு வந்த திருக்குர்ஆனின் சிறப்பு மற்றும் அதன் அற்புதத்தன்மைகளின் பல பரிமாணங்கள்

• இறைவனால் நபிக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்துகள் மற்றும் சிறப்புகள் ...


மேற்குறிப்பிடப்பட்டவைகளில் சிலவற்றையாவது சரியான முறையில் தெரிந்திருக்கவில்லையென்றால் நாம் எப்படி இஸ்லாத்தைப்பற்றி அறியாத மற்றவர்களுக்கு நபிகள் நாயகத்தின் சிறப்புகளையும் உண்மைகளையும் தெளிவுபடுத்த முடியும்? ஆகவே உடனடியாக நபிகளாரைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

ஓவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும், கூட்டங்களிலும், அமைப்புகள் மூலமாகவும், நமக்கு இருக்கக்கூடிய பல்;வேறு ஊடகங்களின் மூலமாகவும் நபிகளாரைப் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறோம். நபிகளாருக்கு எதிராக அவதூறுகள் பரபரப்பாக பரப்பப்படும் சூழல்கள் நபிகளார் யார் எனபதை உலகுக்கு பறைசாற்ற நமக்கு இரட்டிப்பான உத்வேகத்தைத் தரவேண்டும்.

நபியை நாம் எப்படி நேசிக்கிறோம்?

நபியை முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் கூறுகின்றான்:


النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; ..(அல்குர்ஆன் 33:6)

மேலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான், அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளம் நபியை முழுமையாகப் பின்பற்றுவதுதான். இதை திருக்குர்ஆன் இவ்வாறாக குறிப்பிடுகிறது:


قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ


(நபியே!) நீர் கூறும் ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருகின்றான். (அல்குர்ஆன் 3:31)

நபியை நேசிக்கிறோம் என்று பிரகடனம் செய்யும் நாம், முஹம்மது நபியின் வழிகாட்டுதலை எந்த அளவுக்கு பின்பற்றுகிறோம் என்று சிந்தித்துப் பார்க்க இப்படிப்பட்டச் சூழல்கள் தூண்டவேண்டும். நமது செயல்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன. நமது செயல் பாடுகளைப் பார்த்து நமது தலைவராகிய நபிகள் நாயகத்தைப்பற்றி யாராவது எடைபோட நினைத்தால், நபியைப் பற்றி சரியான முறையில் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். நமது செயல்பாடுகள் நபிகள் நாயகத்திற்கு உரிய அந்தஸ்தை தருவதாக இருக்கிறதா அல்லது நபிகள் நாயகத்தைப் பற்றி சரியாக உணர்ந்து கொள்வதற்கு தடையாக இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உண்மையில் நாம் நமது நடவடிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், கொடுக்கல் வாங்கல்களையும், சமூக, குடும்ப மற்றும் தனி வாழ்;க்கையையும் சீர்படுத்த வேண்ய கட்டாயத்தில் உள்ளோம் என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.

இறுதியாக ...

நபிகள் நாயகத்தைப் பற்றி கற்றுத்தெரிந்து கொள்ளவும், அவர்களைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு உரைக்கவும் நமது செயல்பாடுகளை சீர்திருத்திக் கொள்ளவும் நாம் அனைவரும் முன் வரவேண்டும்.


அல்லாஹ் நமது செயல்பாடுகளை அவனுடைய திருப்பொருத்தத்திற்குரிய செயல்பாடுகளாக பொருந்திக்கொள்வானாக! ஆமீன்.

Tuesday, August 07, 2012

IAS, IPS, IFS தேர்வெழுதத் தகுதிகள்.


சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றி தெளிவாக அறிவது அவசியம்.

கல்வித் தகுதி :

* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).

* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.

* ஆனால், Main தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.

* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.

தேசிய அடையாள தகுதி :

* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.

* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, மாலவி, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், சையர் மற்றும் சாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.

வயது தகுதி :

* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

* மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் :

* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்(OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.

* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

விண்ணப்ப நடைமுறைகள் :

     சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.

பூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன்

Secretary, 
Union Public Service Commission, 
Dholpur House, 
New Delhi - 110011 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நன்றி : அலாவுதீன்

Saturday, February 11, 2012

தொழுகையை விட்டவன்

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
 தொழுகையை விட்ட என் தோழனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்.. உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்குஅவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.
    அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!
    அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!
    நன்றாகத் தெரிந்து கொள் தோழனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா?! அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே! நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா!? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.
    இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய்?, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?. நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா?, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா?, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா?.
    நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா?. இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா?. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை நோன்பு இன்ன பிற வணக்கங்கள்.. அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே! நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே!. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே!. அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?. அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...
    போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.
    தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ!
நபியவர்கள் கூறினார்கள்...
    'இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)
    தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா?. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???
    'நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)
இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள் ...
'தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ அவன் துரதிஷ்ட்ட வாதியும் பெரும் பாவியுமாவான்.' என்கின்றார்கள்.
என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும் நேரம் கிடைக்கும் போது தொழுவதும் முனாபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?
அல்லாஹ் சொல்கின்றான்...
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُواْ إِلَى الصَّلاَةِ قَامُواْ كُسَالَى يُرَآؤُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللّهَ إِلاَّ قَلِيلاً
    நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை.
(
நிஸாஃ 142ம் வசனம்)
நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா?
பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள், ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளிவாயலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!
கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப்பொழுது கூட அவை இருந்த தில்லையே!
    அல்லாஹ் கூறுகின்றான் ..

    'நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா? (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)
    ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது.?, ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே?. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனச் சாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா?.
மனிதா! ஐயறிவுள்ள மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னை விட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும் அவற்றை விடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?

என்னருமைச் சோதரனே! நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார்?. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?

நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!
    'ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்)
தொழுகையைப் பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ?. கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்.
    'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (ஆதாரம் முஸ்லிம்)
அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!...
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى  ، وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى
    'யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)

    ஆகவே நண்பா! நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்!. இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே!
    போதும் நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற வசிடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் .
    (அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா?
    தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான்.
(
ஸூரா அல் ஹதீத் 53)
 ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டுவிட்டால் அவனது விடயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா?. இதோ கேள்!.
  •  தொழுகையை விட்டவன் காபிராக ஆகி விடுகின்றான்.
  •  அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது
  •  அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.
  •  அவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மைய வாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.
  •  அவனுடைய மகளுக்கு வலியாக இருந்து திருமணம் முடிந்து வைக்கவும் கூடாது.
  •  அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.
  •  அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.
  •  அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக் கூடாது.
  •  அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்தத் திருமணத்தை ரத்துச் செய்ய வேண்டும்.
  •  அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.
பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா?. ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா?
இன்றே நீ தவ்பாச் செய்வாயல்லவா? ஆம். அதைத் தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னைக் கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை .
அதே போல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்து விடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகி விடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடு.
இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்

நன்றி : மௌலவி. முஹம்மது ஜலீல் மதனி