Monday, April 26, 2010

சாப்பிட்டவுடனே செய்யக்கூடாதவை...

நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்! இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don't Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!


THANKS: VIDUTHALAI.

Saturday, April 24, 2010

வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் - இந்தியர் சாதனை

புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (N.E.H.U) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.

'இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://ularuvaayan.blogspot.com/

Tuesday, April 20, 2010

நம் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது கவுரவமா!?

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.

சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

Received thru [TAFAREG] Group

தமிழனுக்கு எதிர்கொள்ளுதல் (RISK) என்ற வார்த்தை அபாயமானது (RISK)

என்ன ஆச்சு நம் இளைய சமுதாயத்துக்கு? தமிழர்களாகிய நாம் எதில் குறைந்துவிட்டோம்? ஏன் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறோம்? ஏன் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது நமக்கு வேப்பங்காயாக இருக்கிறது? ஏன் நமது குழந்தைகளை ஒரு என்ஜினீயராகவோ, ஒரு டாக்டராகவோ ஆக்கவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறோம்? ஏன் ஒரு தொழிலதிபராக ஆக்க நினைப்பதில்லை? ஆழமாக யோசித்துப் பார்த்ததில் பல விஷயங்கள் புரிந்தது.

பெரும்பாலான தமிழர்கள் அலுவலக வேலைக்குச் செல்வதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும் தனியார் துறை வேலை வேண்டாம், அரசாங்க வேலைதான் வேண்டும் என்கிறவர்கள் பலர். கொஞ்சநஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொழில் தொடங்கப் போகிறார் என்றால், ஏதேதோ சொல்லி அவரைப் பயமுறுத்தி பின்வாங்கச் செய்துவிடுவது நம் இயல்பாக மாறிவிட்டது.

'தமிழகத்திலிருந்து எந்தத் தொழிலதிபரும் உருவாகவில்லை. யாருமே 'ரிஸ்க்' எடுக்கத் தயாராக இல்லை' என்று நான் சொல்லவில்லை. ஆனால் சொந்தமாகத் தொழில் தொடங்கி பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற சிந்தனை நம்மை விட்டுச் சென்று பல காலமாகிவிட்டது. நம் தாத்தாக்கள் டி.வி.எஸ்., சிம்சன் போன்ற பல மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கினார்கள். காரணம், பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற வெறி அவர்களிடம் இருந்தது. சிறிய அளவில்தான் அவர்கள் தொழிலைத் தொடங்கினாலும் 'Think Big'' என்கிற மந்திர வார்த்தையை மட்டும் அவர்கள் மறக்கவேயில்லை. ஆனால் இன்று...?

தொழில் செய்வது என்பது வடநாட்டினருக்கே உரித்தான ஒன்று என்றாகிவிட்டது. இன்றைய தேதியில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு தொழிலதிபர் போகிறார் என்றால், அவர் வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். காரணம், அமெரிக்காவில் உள்ள மோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல்கள். அந்தத் தொழிலில் மட்டுமல்ல, உலக வைர வியாபாரத்திலும் குஜராத்காரர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள். வைர வியாபாரத்தில் ஆம்ஸ்டர்டேமில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்த யூதர்களையே வேலைக்கு அமர்த்தி தொழில் செய்கின்றனர் குஜராத்காரர்கள். அவ்வளவு ஏன்? நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்கூட சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் வெறியோடு செயல்படுகிறார்கள். அதனால்தான் இன்று ஐ.டி. துறையில் நம்மையும் விஞ்சி நிற்க ஆந்திராவினால் முடிகிறது. ஆனால் உலகம் முழுக்க ஐ.டி. துறையின் மூளையாக இருப்பது தமிழனின் மூளைதான். அந்த மூளை சம்பளத்துக்குத்தான் வேலை செய்வேன் என்கிறதே ஒழிய, சுயமாகத் தொழில் தொடங்க மறுக்கிறது.

என்ன காரணம்? நல்ல கல்வியறிவு, வளம், கலாசாரம் என அவர்களிடம் இல்லாத பல விஷயங்கள் நம்மிடம் இருந்தும், அவர்களிடம் இருக்கும் முக்கியமான விஷயமொன்று நம்மிடம் இல்லை - அதுதான் துணிச்சல். அதாவது, 'ரிஸ்க்' எடுக்கும் திறன்தான் நம்மிடம் குறைவாக உள்ளது. நம்மில் பலர் 'ரிஸ்க்' என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் பின்வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏன் இந்தத் தயக்கம்? எதில்தான் இல்லை 'ரிஸ்க்'? வாகனம் ஓட்டும்போது, பயணம் செய்யும்போது... எல்லாவற்றிலும் 'ரிஸ்க்' இல்லாமல் இல்லை. இதற்காக நாம் வண்டி ஓட்டாமல் இருக்கிறோமா, இல்லை விமானத்தில்தான் பறக்காமல் இருக்கிறோமா? நல்ல வாகனத்தை, நல்ல சாலையைத் தேர்வு செய்து ஜாக்கிரதையாக பயணம் செய்கிற மாதிரி, தொழிலைத் தொடங்கி நடத்தும்போதும் ஒரு பாதுகாப்பான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளலாமே!

இப்படி ஒரு அணுகுமுறை நமக்குள் ஏற்படாததற்கு என்ன காரணம்? நம் பெற்றோர்கள்தான். ஒரு தமிழ்த்தாய் தன் குழந்தையை கீழே விழ அனுமதிக்கமாட்டாள். தப்பித் தவறி குழந்தை விழுந்தால் போதும், அலறி அடித்துக்கொண்டு ஓடிப் போய் குழந்தையைத் தூக்குவாள். அவள் ஓடி வருவதைப் பார்த்து அழ நினைக்காத குழந்தைகூட அழ ஆரம்பித்துவிடும். அந்தச் சிறுவயது முதலே 'ரிஸ்க்' எடுக்கும் திறனை நாம் குறைத்துவிடுகிறோம். நம்மில் பாதிப் பேருக்கு மேல் நீச்சல் தெரியாது. தண்ணீர் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆனால் ஜப்பானில் மூன்றே மாதக் குழந்தையை தண்ணீரில் மிதக்கவிடுகிறார்கள். அந்தக் குழந்தை தவழ்வதற்கு முன்பே மிதக்கக் கற்றுக் கொள்கிறது. நடப்பதற்கு முன்பு நீந்தக் கற்றுக் கொள்கிறது. டன் கணக்கில் எடை கொண்ட யானையே நீச்சல் அடிக்கும்போது மனிதன் நினைத்தால் முடியாதா என்ன? ஆனால், நம்மால் நீந்தமுடியாது என்கிற எண்ணம் நம் மனதில் ஆழமாக விழுந்துவிட்டது. எனவேதான் நம் குழந்தைகளை தண்ணீர் பக்கமே நாம் அனுமதிப்பதில்லை.

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகாவது அவர்களை ஒரு முடிவெடுக்க அனுமதிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. 17 வயதான மகன் அல்லது மகள் என்ன படிக்கவேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டியாக, நல்ல முன்னோடியாக, நல்ல நண்பர்களாக இருந்தாலே போதும்; அவர்களுக்காக நீங்கள் முடிவு செய்யத் தேவையில்லை. அவன் குழந்தை, அவனுக்கு என்ன தெரியும் என்று அவர்களுக்காக நீங்கள் முடிவெடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் பின்நாட்களில் அவர்களால் எந்தப் பிரச்னையிலும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாது.

கோபி பிரயன்ட் (Kobe Bryant) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப் பந்து வீரர். அவருக்கு 17 வயது ஆனபோது கல்லூரிக்குச் செல்வதா தேசிய கூடைப்பந்து சங்கத்தின் குழுவில் சேர்ந்து விளையாடுவதா என்கிற குழப்பம் வந்தது. என்ன முடிவெடுப்பது என்று தன் அப்பாவிடம் கேட்டார் கோபி. 'நீயே முடிவெடு' என்றுதான் அவர் சொன்னாரே ஒழிய, கோபிக்காக அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கல்லூரிப் படிப்பு வேண்டாம்; கூடைப்பந்துதான் வேண்டும் என்று கோபி சுயமாக யோசித்து முடிவெடுத்ததால் முழுமையாக தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. இன்று உலகில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கு அந்த விளையாட்டில் முன்னணி வீரராக இருக்கும் அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ 100 கோடிக்கு மேல்!

'ரிஸ்க்'கைக் கண்டு நாம் தொடை நடுங்க என்ன காரணம்? நாம் தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற பயம்தான். எல்லா விஷயத்திலும் எப்போதும் நாம் வெற்றியை மட்டுமே விரும்புகிறோம். தோல்வி வந்தால் அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்லும் மனப்பக்குவம் நம் மக்களிடம் இல்லை. தோல்விக்காக குலுங்கிக் குலுங்கி அழுகிறவர்கள் உலகத்திலேயே நம்மவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தும்போது தோல்வி வந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்கிற முன்யோசனை இருந்தாலே போதும், எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.

''நாங்கள் மிடில் கிளாஸ். என் அப்பா பெரிசா சம்பாதிக்கலை. நான் எப்படித் தொழில் தொடங்க முடியும்?'' என்று என்னிடம் கேட்ட இளைஞர்கள் பலர். தங்களின் தயக்கத்தில் பெரிய நியாயம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியும் அவரின் நண்பர்களும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியாது! தவிர, இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி, இன்று முன்னணியில் நிற்கும் பல தொழிலதிபர்கள் முதல் தலைமுறையினரே! அவர்களின் அப்பாக்கள் நம் அப்பாக்கள் மாதிரி மிடில் கிளாஸ்தான்! அவர்களால் மட்டும் எப்படி ஒரு தொழிலதிபராக மாற முடிந்தது? தொழில் தொடங்க பணம் தேவை! ஆனால், அது மட்டுமே தேவை என்று நீங்கள் நினைத்தால் தவறு. பணமிருந்தால் பெரிய தொழிலதிபராக ஆகிவிடலாம் என்பது உண்மையாக இருந்தால் இன்று பணக்காரர்கள் எல்லோருமே உலக அளவில் பெரும் தொழிலதிபர்களாக இருப்பார்கள். ஆனால், சாதாரண குடும்பத்தில் பிறந்த அம்பானியால்தான் மிகப் பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடிந்தது. காரணம், அவரிடம் இருந்த துணிச்சல். அதாவது, ரிஸ்க் எடுக்கும் திறன்.

நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கப் போகிறீர்கள் எனில் உங்கள் பெற்றோர்களிடம் இருந்து பணத்தைப் பெறாதீர்கள். அவர்கள் உங்களை 'ரிஸ்க்' எடுக்கவிடாமல் தடுத்துவிடுவார்கள். அதற்கு பதில், உங்கள் மீதும் உங்கள் ஐடியாவின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அதை ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கான்செப்டை விற்பனை செய்யுங்கள். அவர்களை பங்குதாரர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் 'ரிஸ்க்'கை பரவலாக்கிக் கொள்ளுங்கள்; எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழிலதிபராக வருவீர்கள்.

''ரிஸ்க்' எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' - வடிவேலுவின் ஜோக்கை கேட்டுவிட்டு நாம் சிரித்து விட்டுப் போவதைவிட, உண்மையிலேயே 'ரிஸ்க்'கை காதலிக்க ஆரம்பிப்போம். புதிய தொழில்முனைவர்களை உருவாக்குவோம். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை தொழில் மாநிலமாக ஆக்கிக் காட்டுவோம்!
 
மின்னஞ்சலில் பூத்து, (ThameeM, Mohamed Ibrahim. M.I, Jafar Sadiq, Akbar Batcha) இவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. இவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி !!!

Monday, April 19, 2010

Mother's Diet Affects Newborn Allergy Risk

Eating lots of vegetables and fruits during pregnancy is associated with lowering the chance of having a baby with certain allergies, study findings from Japan suggest.

The study found that babies born to women who ate high amounts of green and yellow fruits and vegetables, and those rich in beta carotene, had a reduced risk of being born with eczema, a condition that cause the skin to become itchy, dry, reddened and cracked.

Furthermore, foods high in Vitamin E, found in some green vegetables, were similarly found to lessen the risk of having a wheezy infant.

Study Details

Researchers evaluated vegetable and fruit intake during pregnancy of 763 women and their offspring's early-age eczema or allergic wheeze.

The women were 30 years old on average and about 17 weeks pregnant when they reported personal and medical history. When their babies were between 16 and 24 months old, the women provided birth and breastfeeding history, number of older siblings, and exposure to smoke.

The team found that 21 percent of the youngsters wheezed or had a "whistling in the chest in the last 12 months," and fewer than 19 percent had eczema.

According to the investigators, moms who ate greater amounts of green and yellow vegetables, citrus fruits, or beta carotene while pregnant were less likely to have an infant with eczema.

For example, after allowing for other eczema risk factors, eczema was more common among infants of moms who ate the least versus the most green and yellow vegetables - 54 and 32 infants, respectively.

Likewise, higher intake of Vitamin E during pregnancy was associated a reduced likelihood of having a wheezy infant.

The researchers said that increasing intake of green and yellow vegetables, citrus fruits, and antioxidants such as Beta-carotene and Vitamin E among pregnant women "deserves further investigation as measures that would possibly be effective in the prevention of allergic disorders in the offspring."

This study supports previous and on-going research that eating foods rich in vitamin and minerals, like those found in fruits and vegetables, during pregnancy can go a long way in preventing children from developing allergies.

Breastfeeding is another way to ensure your baby receives the most wholesome nutrition possible. Breast-fed babies are typically born with fewer or no allergies when compared to their formula-fed counterparts. Breast milk contains all the required nutrients crucial for healthy growth and offers protection against infections and diseases, which bottle-feeding does not provide.

Research Paper Details:

Miyake Y, Sasaki S, Tanaka K, Hirota Y. Consumption of vegetables, fruit, and antioxidants during pregnancy and wheeze and eczema in infants. Allergy 2010.

Courtesy : www.healthymuslim.com

Saturday, April 17, 2010

TAMIL NADU COMMON ENTRANCE TEST (TANCET) 2010

TAMIL NADU COMMON ENTRANCE TEST (TANCET) 2010


FOR M.B.A., M.C.A., & M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. DEGREE PROGRAMMES
ANNA UNIVERSITY CHENNAI, CHENNAI 600 025
Advertisement No.255/ EA1 /TANCET/2010

Applications are invited for the TANCET 2010 to be conducted by Anna University Chennai on behalf of the Government of Tamil Nadu on 29th & 30th May 2010, from candidates who seek admission to 1. M.B.A., 2. M.C.A., and 3. M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes in Tamil Nadu for the year 2010-2011 offered at University Departments of Anna University Chennai, Anna University Coimbatore, Anna University Trichy, Anna University Tirunelveli, Govt. Engineering, Arts and Science Colleges, Govt. Aided Engineering, Arts & Science Colleges, and Govt. Quota seats in self-financing Engineering, Arts & Science Colleges / stand alone Institutions. Some Universities and Self–Financing Engineering Colleges may also opt to admit the candidates on the basis of TANCET 2010.

Other State candidates can appear for the entrance test but, admission is subject to the eligibility conditions of the admitting authority / University.

ELIGIBILITY:

1. MBA: A pass in any recognised Bachelor’s degree with 10 + 2 + 3 or 4 years or a pass in any degree with 10 + 3 years diploma + 3 years pattern.

2. MCA: a) A pass in any recognised Bachelor’s degree of minimum 3 years duration (10 + 2 + 3 / 4 years pattern) in any discipline with core Mathematics (or) Business Mathematics at +2 level or A pass in any recognised Bachelor’s degree with 10+3 years Diploma +3 years pattern with Mathematics at Diploma level or Mathematics or Statistics as one of the subjects at the degree level or A pass in any recognised Bachelor’s degree of minimum 3 years duration (10 + 2 + 3 pattern) in any discipline with Mathematics or Statistics as any one of the subjects.

3. M.E./M.Tech./M.Arch./M.Plan.: Details of the common eligibility criteria are available in the “Information & Instructions Booklet” for TANCET 2010 to be issued during Spot Registration and also in the website: www.annauniv.edu/tancet2010.

Those who are appearing for final year / semester examination of the above qualifying degree in April / May 2010 can also apply for TANCET 2010.

Application Form is common for all the three entrance tests. Candidates have to submit only one application. The candidates have to pay a fee of Rs.300/- (Rs.150/- for SC / SCA / ST candidates belonging to Tamil Nadu on production of a copy of Permanent Community Certificate) as entrance test fee for any one of the Programmes either (1) M.B.A. or (2) M.C.A. or (3) M.E./M.Tech./M.Arch./ M.Plan.

If a candidate desires to appear for more than one programme, for every additional programme, he / she has to pay Rs.300/- (Rs.150/- for SC/SCA/ST candidates belonging to Tamil Nadu).

REGISTRATION FOR THE ENTRANCE TEST

(1) SPOT REGISTRATION: Hall Tickets will be issued to the candidates who come in person to the following Co-ordinating Centres with a copy of 10th Std. mark sheet and 12th Std. mark sheet (or 3 years Diploma Certificate) and cash or Demand Draft (A single DD is sufficient for one or more programme) for the required amount towards Entrance Test fee.

1. Examination Centre, Anna University Chennai, Chennai, 2. Govt. College of Technology, Coimbatore, 3. Annamalai University, Chidambaram, 4. PSNA College of Engg. & Technology, Dindigul, 5. Institute of Road and Transport Technology, Erode, 6. Alagappa College of Engg. & Technology, Karaikudi, 7.Thiagarajar College of Engg., Madurai, 8. Govt. Polytechnic College, Nagercoil, 9. Govt. College of Engg., Salem, 10. Kunthavai Naachiyaar Govt. Arts College for Women, Thanjavur, 11. Govt. College of Engg., Tirunelveli, 12. Anna University Trichy, Trichy, 13. Thanthai Periyar Govt. Institute of Technology, Vellore, 14. University College of Engg., Villupuram, 15. Kamaraj College of Engg., Virudhunagar.

(2) REGISTRATION THROUGH INTERNET: The candidates can also register through internet logging on to www.annauniv.edu/tancet2010.

The Demand Draft should be drawn in favour of The Director, Entrance Examinations, Anna University Chennai, payable at Chennai, obtained from any Nationalised bank on or after 29.03.2010.

DATE AND TIME OF ENTRANCE TEST:

Programme / Date / Time

M.B.A. / 29.5.2010 (Saturday) / 10.00 a.m. to 12.00 noon


M.C.A. / 29.5.2010 (Saturday) / 02.30 p.m. to 04.30 p.m.

M.E./M.Tech./M.Arch./M.Plan. / 30.5.2010 (Sunday) / 10.00 a.m. to 12.00 noon

EXAMINATION CENTRES:
1.Chennai, 2.Coimbatore, 3.Chidambaram, 4.Dindigul, 5.Erode, 6.Karaikudi, 7.Madurai, 8.Nagercoil, 9.Salem, 10.Thanjavur, 11.Tirunelveli, 12.Trichy, 13.Vellore, 14.Villupuram, 15.Virudhunagar.

IMPORTANT DATES:

i) Commencement of Spot Registration / Registration through Internet : 01.04.2010

ii) Last date for Spot Registration at Co-ordinating Centres (other than Anna University Chennai, Chennai 25 / Registration through Internet) : 20.04.2010

iii) Last date for Spot Registration and receipt of application (Registered through Internet) at Centre for Entrance Examinations, Anna University Chennai, Chennai 25 : 26.04.2010

Note: Spot Registration can be made at all the Centres on all the days as above between 9.30 am. and 5.30 pm. except on Sundays and Public Holidays

The completed application (registered through Internet) should reach The Secretary, TANCET, Centre for Entrance Examinations, Anna University Chennai, Chennai 600 025 on or before 26.04.2010, by 5.30 p.m. The Applications received after the due date and time will not be considered at any cost.

For details visit the Anna University Chennai website: www.annauniv.edu/tancet2010
Telephone Numbers for enquiry at the Co-ordinating Centres:
Chennai : 044-22358265
Karaikudi : 04565-224528
Tirunelveli : 0462-2552024
Coimbaore : 0422-2432221
Madurai : 0452-2482242
Trichy : 0431-2407958
Chidambaram : 04144-237275
Nagercoil : 04652-260979
Vellore : 0416-2260233
Dindigul : 0451-2554032
Salem : 0427-2346102
Villupuram : 04146-224500
Erode : 0424-2533279
Thanjavur : 04362-277924
Virudhunagar : 04549-278174

by
 
SECRETARY, TANCET

Carrier Guide - Indian Educational System

Please Click on the picture to view in bigger size...

காதை குடையிறதுதான் வேலை

காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது, "தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி" என்றாள்.
"என்ன நடந்தது" என விசாரித்தேன். "வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று" என்றாள்.
"காது கடித்தால் என்ன செய்வீர்கள்?" வினவினேன். "நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை" என்றான் கூட வந்த மகன்.
காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.
இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.
உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும். இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.
காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.
காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.
காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

நன்றி : டாக்டர்.எம்.கே.முருகானந்தன்

Monday, April 12, 2010

மாதச் சம்பளம் ஐந்துலட்சம் ரூபாய் என்றால் ஓ.கே-வா?

முதுகலைப் பட்டம் படிக்கிறீர்கள். படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்ததும் முதல் மாதச் சம்பளம் எவ்வளவு எதிர்பார்ப்பீர்கள்? 5,000, 20,000 அல்லது 50,000 ரூபாய்கள். கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்... ஐந்துலட்சம் ரூபாய் என்றால் ஓ.கே-வா?

நீங்கள் திறமையானவராக இருந்தால் அதற்கு மேலும் கொட்டிக் கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

CAT (Common Admission Test), GRE (Graduate Record Examination) , GMAT (Graduate Management Admission Test), GATE (Graduate Aptitude Test in Engineering) ... இந்த நுழைவுத் தேர்வுகள்தான் வளமான வாய்ப்புகளுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் முள்வேலி. இந்த வேலியைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சமே லட்சங்களில்தான் சம்பளம் துவங்கும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்து வேலை செய்பவர்கள்கூட, வேலையை உதறிவிட்டு இந்த நுழைவுத் தேர்வினை எதிர்கொண்டு தங்கள் எதிர்காலத்தை அப்டேட் செய்துகொள்கிறார்கள்.M.B.A., M.S., M.Tech போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை வழங்குபவைதான் அந்த நுழைவுத் தேர்வுகள். கலை அல்லது இன்ஜீனியரிங் போன்ற ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி என்பதுதான் இந்தப் படிப்புகளுக்கான அடிப்படைத் தகுதிகள். இந்தியாவில் IIM, XLRI, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு, மசாச்சூசட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) போன்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது அவசியம். இவை அனைத்தும் உலகத் தரக் கல்வி நிறுவனங்கள். இங்கு படித்துத் தேர்ச்சியடையும் அனைவருக்கும் உலகின் 'டாப் 100' நிறுவனங்களில் வாய்ப்புகள் நிச்சயம் காத்திருக்கும்.
''ஒரு துளி பிழைக்கும் இடம் கொடுக்காத இந்தத் தேர்வுகளில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் எவரும் சாதிக்கலாம்!'' என்று நம்பிக்கை வார்த்தை சொல்கிறார் ரகுநாத். CAT, GRE, GMAT தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்திய அளவில் முத்திரை பதித்திருக்கும் 'TIME' (Triumphant Institute of Management Education)பயிற்சி மையத்தின் இணை இயக்குநர் இவர்.

"இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்தும் சிகிஜி தேர்வு மிகவும் கடினமானது என்ற பிம்பம் இருந்தாலும், இளைஞர்களின் 'மோஸ்ட் வான்டட்' தேர்வும் அதுதான். காரணம், அந்தத் தேர்வு முடிவினைத்தான் கிட்டத்தட்ட 100 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் கணக்கில்கொள்கின்றன.
வெர்பல்(verbal) எனப்படும் ஆங்கில அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள், குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் (quantitative aptitude) எனப்படும் கணிதத் திறன் சார்ந்த கேள்விகள், லாஜிக்கல் ரீசனிங் (logical reasoning) எனப்படும் யோசிக்கும் திறன் சார்ந்த கேள்விகள்தான் அனைத்து மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுத் திட்டங்களிலும் இடம்பெறும்.

CAT தேர்வினில் 60 முதல் 70 கேள்விகள் வரை கேட்கப்படும். இந்தத் தேர்வினைtime stressed test என்று கூறலாம். சென்ற ஆண்டு முதல் இந்தத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், அது மீண்டும் பேப்பர் - பென்சில் தேர்வாக மாற்றப்படலாம் என்பதால், இரண்டுவிதமான தேர்வுகளுக்குமே மாணவர்கள் தயாராக இருப்பது நல்லது. சரியான பதில் ஒன்றுக்கு 7.5 மதிப்பெண்கள். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் தலா 2.5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். பொதுவாக, நமது மாணவர்கள் ஆப்டிட்யூட் பகுதியில் பெரும்பாலும் கெட்டி. ஆனால், வெர்பல் பகுதியில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். ஆனால், எந்தப் பயமும் பதற்ற மும் இல்லாமல் இவற்றைச் சமாளிக்கலாம்.

M.S படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு GRE. இந்தத் தேர்வை நடத்துவது அமெரிக்காவைச் சேர்ந்த ETS -Educational Testing Service என்ற அமைப்பு. இதை எழுத விரும்புபவர்கள் அதன் வெப்சைட்டில் (www.ets.org/ gre) பதிவு செய்ய வேண்டும். 180 டாலர்கள் கட்டணம். தேர்வை வருடத்தின் எந்த நாளிலும் எழுதலாம். வெர்பல் பகுதிக்கு 800 மதிப்பெண்களும், குவான்ட்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் பகுதிக்கு 800 மதிப்பெண்களும் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இந்திய மாணவர் 700-க்கும் குறைவாக ஆப்டிட்யூட் பகுதியில் மதிப் பெண்கள் வாங்கினால், அவரை ஒரு திறமைசாலியாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கருதுவது இல்லை. ஆனால், இதற்காகப் பயப்படத் தேவை இல்லை. நம் நாட்டின் பள்ளிக்கூடக் கணிதப் பாடத் திட்டங் களைப் போலத்தான் இருக்கும் கேள்விகள். வெர்பல், ஆப்டிட்யூட் பகுதிகளுக்குச் செல்லும் முன், அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வு வைப்பார்கள். அதில் இரண்டு தலைப்புகள் கொடுத்து அதைப்பற்றிக் கட்டுரை எழுதச் சொல்வார்கள். இந்த இரண்டு கட்டுரைகளும் ஏதேனும் சிக்கலான சூழ்நிலைக்குத் தீர்வு சொல்வதாக அமையும். உதாரணமாக, கூவம் நதியைச் சுத்திகரித்து சிங்காரச் சென்னையைச் சாத்தியப்படுத்துவது எப்படி?' என்பது மாதிரியான கேள்விகள். வெர்பல், குவான்டிடேட்டிவ் பகுதிகளின் முடிவுகள் தேர்வு முடிந்த உடனே தெரிந்துவிடும். அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வின் முடிவு ஆறு வாரங்களுக்குப் பிறகே நமக்கு அனுப்பிவைக்கப் படும்.
கொஞ்சம் கவனத்தோடு எழுத வேண்டிய தேர்வு GRE. ஏனென்றால், ஒரு முறை விடை அளித்த பிறகு, அந்தக் கேள்விக்கான பதிலை மாற்ற முடியாது. தெரியவில்லை என்பதற்காக, எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் விட்டுவிடவும் முடியாது. GRE தேர்வுடன் சேர்த்து TOEFL எனும் மற்றொரு தேர்வையும் எழுதினால்தான் வெளிநாடு களில்M.S. படிக்க முடியும். ஆங்கிலம் அல்லாத வேறு ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் ஆங்கிலத் திறமையை நிரூபிக்கும் தேர்வுதான் TOEFL.வாசிப்பது, எழுதுவது, கவனிப்பது, பேசுவது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்கள் ஆங்கிலத் திறனைச் சோதிப்பார்கள். இதில் மொத்த மதிப்பெண்களான 120-ல் ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட சர்வசாதாரணமாக ஸ்கோர் செய்யலாம். நல்ல தயாரிப்பு இருந்தால் முழு மதிப்பெண்களையும் பெறலாம்.

பொதுவாகவே, CAT, GRE தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு, GMAT தேர்வு சுலபமானதாகவே இருக்கிறது. இந்தத் தேர்வு வெளிநாட்டுப் பல்கலைக்கழக M.B.A., படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வு. இதன் வெர்பல் பகுதி மற்ற நுழைவுத் தேர்வுகளுடன் ஒப்பிடும் போது சற்றே கடினமானது. GMAT தேர்வு முடிவுகள் மட்டுமே வெளிநாட்டு M.B.A., படிப்புகளுக்குப் போதுமானது இல்லை. குறைந்தது இரண்டு, மூன்று வருடங்களாவது வேலை அனுபவம் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்களையே ஏற்பார்கள். ஆனால், இந்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஃப்ரெஷர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த GMAT தேர்வுக்கும் TOEFL தேர்வு கட்டாயம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் IELTS எனும் தேர்வையும் ஆங்கிலத் திறனுக்கான தகுதியாக நிர்ணயித்திருக்கின்றன. ஏதேதோ சொல்கிறார்களே என்று தயங்க வேண்டாம். எல்லா படிப்புகளுக்கு மான அடிப்படைகள்தான் இவற்றுக்கும். தினசரி பயிற்சியும் முயற்சியும் இவற்றுக்கான கூடுதல் தேவைகள்!'' என்று முடிக்கிறார் ரகுநாத்.

சென்ற ஆண்டு GRE தேர்வில் 1,540 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் வித்யா வெங்கட், அமெரிக்காவின் கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் படிப்பில் சேர்ந்திருக்கிறார். ''GRE தேர்வில் வெர்பல் பிரிவு கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் படிக்கும்போதே அதற்காக நிறைய நேரம் செலவிடுவது நல்லது. பொதுவாக, வெர்பல் தொடர்பான கேள்விகள் Barro'’s புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்படும். அதனால், அந்தப் புத்தகத்தை அட்டை டு அட்டை புரட்டிப் பார்ப்பது நல்லது. தேர்வில் முதல் 15 கேள்விகளுக்கு அவசரப்படாமல் பதில் கூற வேண்டும். முதல் 15 கேள்விகளில் நாம் எப்படிப் பதில் சொல்கிறோமோ அதை வைத்துதான், அடுத்தடுத்த கேள்விகளின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படும். எனவே, நிதானமாக யோசித்துப் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்படும். அதனால் GRE தேர்வைப் பொறுத்தவரை, கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் நல்லது. பல பல்கலைக்கழகங்களும் GRE ஸ்கோரைவிட நம் இன்ஜினீயரிங் புராஜெக்ட்டுகள், மதிப்பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். எனவே, ஆரம்பம் முதல் அம்சமாக வைத்துக்கொள்ளுங்கள்!'' என்கிறார் வித்யா.

GATE தேர்வில் அகில இந்திய அளவில் 18-வது இடம் பிடித்த ஜாஃபர், சென்னை I.I.T-யில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜீனியரிங் படிக்கிறார். இன்ஜினீயரிங் மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுதான் GATE. அதை எதிர்கொள்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஜாஃபர். ''ஒருமுறை எழுதிய GATE தேர்வின் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குச் செல்லும். சமயங்களில் ஒரு வருடத்துக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் எனத் திடீர் குண்டைத் தூக்கிப் போடுவார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். இன்ஜினீயரிங் படிப்பை ஓரளவுக்கு ஒழுங்காகப் படித்திருந்தாலே, GATE தேர்வை எளிமையாக எதிர்கொள்ளலாம். போன வருடம் வரை பாடங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்டனர். இந்த வருடத்தில் இருந்து ஆப்டிட்யூட் கேள்விகளும் இடம்பெறலாம் எனச் சொல்கிறார்கள்.

I.AS., I.P.S. மாதிரியான ஒரு படிப்புதான் I.E.S (Indian Engineering Service). அது படித்தவர்களைத்தான் இந்தியாவின் உயர் தொழில்நுட்பப் பிரிவுகளில் தலைமைப் பொறுப்புகளில் நியமிப்பார்கள். GATE தேர்வுக்குத் தயாரானவர்களுக்கு I.E.S தேர்வுகள் ரொம்பவே சுலபமாகத்தான் இருக்கும். அதே மாதிரி, பெல், ஐ.ஓ.சி.எல்., எல்.அண்ட்.டி மாதிரியான நிறுவனங்கள் GATE தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவர்களை எழுத்துத் தேர்வே இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். வரும் நாட்களில் இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு GATE தேர்வின் மதிப்பெண்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். டெக்னிக்கல் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் GATE ஸ்கோர் கேட்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை!'' என்கிறார் ஜாஃபர்.

இந்த வருட CAT தேர்வில் 99.81% மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அஷோக், ஏற்கெனவே எட்டு வருட வேலை அனுபவம் உள்ளவர். அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய I.I.M களில் இருந்து ஒரே நேரத்தில் அழைப்பு வந்திருக்கிறது இவருக்கு. பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறார் இவர். ''மற்றவர் களோடு ஒப்பிடும்போது நமது திறன் எந்த இடத்தில் இருக்கிறது. எத்தனை போட்டியாளர்களை நாம் கடக்க வேண்டும் போன்ற விஷயங்களை அகில இந்திய அளவிலான மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்வதன் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். நான் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தேன். படிப்பு விஷயங்களில் ரொம்பவே 'டச்' விட்டுப் போயிருந்ததால், அடிப்படை விஷயங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இன்னும் சொல்லப்போனால், வகுப்பில் சேர்ந்த புதிதில் பேனா பிடித்து எழுதவே வரவில்லை!" என்று சிரிக்கும் அஷோக்கின் அகில இந்திய ரேங்க் 480. இந்த ஆண்டு கேட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தப் படிப்புகளுக்கான செலவுகள் லட்சங்களில் எகிறும் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆனால், விடாமுயற்சியும், தணியாத ஆர்வமும் இருந்தால், இந்த உலகத்தையே வடிவமைக்கும் பொறுப்பு நாளை உங்கள் கைகளில். அதற்கு உண்டான தகுதிகளை இன்றே வளர்த்துக்கொள்ளுங்கள் இளைஞர்களே!

Sunday, April 11, 2010

ஆரோக்கியமான உடல்நலத்திற்கு அழகிய TIPS

ஆரோக்கியம் / உடல் நலம்

 1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்

 10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

 சமூகம்.

 21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

 வாழ்க்கை

 26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

-  வலைபூக்களில் பூத்தவை

Wednesday, April 07, 2010

Moral Stories - How to kill your mother in law

A long time ago in China , a girl named Li-Li got married & went to live with her husband and mother-in-law. In a very short time, Li-Li found that she couldn't get along with her mother-in-law at all
Their personalities were very different, and Li-Li was angered by many of her mother-in-law' s habits. In addition, she criticized Li-Li constantly.
Days passed, and weeks passed. Li-Li and her mother-in-law never stopped arguing and fighting.
But what made the situation even worse was that, according to ancient Chinese tradition, Li-Li had to bow to her mother-in-law and obey her every wish. All the anger and unhappiness in the house was causing Li-Li's poor husband! D great distress.
Finally, Li-Li could not stand her mother-in-! law's bad temper and dictatorship any longer, and she decided to do something about it! Li-Li went to see her father's good friend, Mr. Huang, who sold herbs.
She told him the situation and asked if he would give her some poison so that she could solve the problem once and for all.
Mr. Huang thought for awhile, and finally said, "Li-Li, I will help you solve your problem, but you must listen to me and obey what I tell you."
Li-Li said, "Yes, Mr. Huang, I will do whatever you tell me to do."Mr. Huang went into the back room, and returned in a few minutes with a package of herbs. He told Li-Li, "You can't use a quick-acting poison to get rid of your mother-in-law, because that would cause people to become suspicious Therefore, I have given you a number of herbs that will slowly build up poison in her body. Every other day prepare some delicious meal and put a little of these herbs in her serving.
Now, in order to make sure that nobody suspect you, when she dies, you must be very careful to act very friendly towards her. "Don't argue with her, obey her every wish, and treat her like a queen." Li-Li was so happy.
She thanked Mr. Huang and hurried home to start her plot of murdering her mother-in-law.
Weeks went by, and months went by, and every other day, Li-Li served the specially treated food to her mother-in-law. She remembered what Mr. Huang had said about avoiding suspicion, so she controlled her temper!r, obeyed her mother-in-law, and treated her like her own mother.
After six months had passed, the whole household had changed. Li-Li had practiced controlling her temper so much that she found that she almost never got mad or upset. She hadn't had an argument with her mother-in-law in six months because she now seemed much kinder and easier to get along with.
The mother-in-law' s attitude toward Li-Li changed, and she began to love Li-Li like her own daughter. She kept telling friends and relatives that Li-Li was the best daughter-in- law one could ever find. Li-Li and her mother-in-law were now treating each other like a real mother and daughter.
Li-Li's husband was very happy to see what was happening. One day, Li-Li came to see Mr. Huang and asked for his help again She said, "Dear Mr. Huang, please help me to keep the poison from killing my mother-in-law. She's changed into such a nice woman, and I love her like my own mother. I do not want her to die because of the poison I gave her."
Mr. Huang smiled and nodded his head. "Li-Li, there's nothing to worry about. I never gave you any poison. The herbs I gave you were vitamins to improve her health. The only poison was in your mind and your attitude toward her, but that has been all washed away by the love which you gave to her."
HAVE YOU REALIZED that how you treat others is exactly how they will treat you? There is a wise Chinese saying: "The person who loves others will also be loved in return." God might be trying to work in another person's life through you. Send this to your friends and spread the POWER OF LOVE.

Tuesday, April 06, 2010

வியாதிகளுக்கு விடைகொடுக்கும் அருகம்புல்

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்கல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.
தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
மருத்துவ குணங்கள்:
* அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
* வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தாயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.

Moral Story - The Cracked Pot

A water bearer in India had two large pots, each hung on each end of a pole which he carried across his neck. One of the pots had a crack in it, and while the other pot was perfect and always delivered a full portion of water at the end of the long walk from the stream to the master's house, the cracked pot arrived only half full.

For a full two years this went on daily, with the bearer delivering only one and a half pots full of water to his master's house. Of course, the perfect pot was proud of its accomplishments, perfect to the end for which it was made. But the poor cracked pot was ashamed of its own imperfection, and miserable that it was able to accomplish only half of what it had been made to do. After two years of what it perceived to be a bitter failure, it spoke to the water bearer one day by the stream.


"I am ashamed of myself, and I want to apologize to you."


"Why?" asked the bearer. "What are you ashamed of?"


"I have been able, for these past two years, to deliver only half my load because this crack in my side causes water to leak out all the way back to your master's house. Because of my flaws, you have to do all of this work, and you don't get full value from your efforts," the pot said.

The water bearer felt sorry for the old cracked pot, and in his compassion he said, "As we return to the master's house, I want you to notice the beautiful flowers along the path."


Indeed, as they went up the hill, the old cracked pot took notice of the sun warming the beautiful wild flowers on the side of the path, and this cheered it some. But at the end of the trail, it still felt bad because it had leaked out half its load, and so again it apologized to the bearer for its failure.

The bearer said to the pot, "Did you notice that there were flowers only on your side of your path, but not on the other pot's side? That's because I have always known about your flaw, and I took advantage of it. I planted flower seeds on your side of the path, and every day while we walk back from the stream, you've watered them.


For two years I have been able to pick these beautiful flowers to decorate my master's table. Without you being just the way you are, he would not have this beauty to grace his house."

Each of us has our own unique flaws. We're all cracked pots. But if we will allow it, Allah will use our flaws to grace the table (the world).

Saturday, April 03, 2010

பூகம்பத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் தவளை

பூகம்பம் ஏற்படுவதை முன் கூட்டியே தவளைகள் கண்டுபிடித்து விடுவதாக தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளை கள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றார். இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக கண்டுபிடித்து உள்ளார். இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் உள்ள ஏரியில் வாழும் தவளைகள் குறித்து ராஜெல் கிரான்ட் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
பூகம்பம் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த தவளைகள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 5 நாட்களுக்கு முன்பு 96 சதவீத ஆண் தவளைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. 3 நாட்களுக்கு முன்பு அனைத்து தவளைகளும் வெளியேறி சென்று விட்டன. பின்னர் பூகம்பம் முடிந்து 6 நாட்க ளுக்கு பிறகு அதே ஏரிக்கு திரும்பி வந்துவிட்டன.
இதைவைத்து பார்க்கும் போது தவளைகள் முன் கூட்டியே நில நடுக்கத்தை கண்டுபிடித்து விடுகின்றன என்று அவர் கூறுகிறார். அந்த தவளைகள் பூகம்பத்துக்கு பிறகு 6 நாட்கள் கழித்து திரும்பி வந்தன. இந்த 6 நாட்கள் வரையிலும் பூகம்பத்துக்கு பிறகு ஏற்படும் சிறிய அளவிலான அதிர்வுகள் இருந்து கொண்டிருந்தன. தவளைகள் திரும்பி வந்த பிறகு அதிர்வுகள் கூட நின்று விட்டன. எனவே தவளைகள் சிறிது அதிர்வையும் முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாகவும் அவர் கூறினார். எலி, பாம்பு, மீன்கள், எறும்பு போன்றவையும் பூகம்பத்தை முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாக ஏற்கனவே தகவல்கள் வந்துள்ளன.