Sunday, February 28, 2010

RECOGNIZING A STROKE

Thank God for the sense to remember the '3' steps, STR . Read and Learn!
Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke.

Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:

S *Ask the individual to SMILE.

T *Ask the person to TALK and SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (i.e. It is sunny out today.)

R *Ask him or her to RAISE BOTH ARMS.

If he or she has trouble with ANY ONE of these tasks, call emergency number immediately and describe the symptoms to the dispatcher.

New Sign of a Stroke -------- Stick out Your Tongue

NOTE: Another 'sign' of a stroke is this: Ask the person to 'stick' out his tongue.. If the tongue is 'crooked', if it goes to one side or the other,that is also an indication of a stroke.

Courtesy:- Mr. W. A. Faruqui, Sr. Manager-HR, CARS TAXI GROUP

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!

கவிதை


புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!


அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!


நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!


முழுதாய் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!


எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!


பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!


பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!


வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!


கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!


துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு;


உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!


- யாசர் அராஃபத்

Saturday, February 27, 2010

புதிய சூரியனை கண்டுபிடித்தனர் நாஸா விஞ்ஞானிகள்!

வாஷிங்டன்: விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை அமெரிக்க விண்வெளி துறையின் நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.


இது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது. இந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Source - Inneram.com

Tuesday, February 23, 2010

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸஹடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.
உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.
அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.
சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.
பானங்கள் (200 மி.லி அளவு):
* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..
* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..
* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.
* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.
* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.
* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.
எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.

உணவு வகைகள்

உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.
* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.
* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.
* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.
* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..
* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.
* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.
* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.
* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.
* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ்வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.
பழங்கள் (100 கிராம்)

* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..
* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி 30 முதல் 40 மி.கி.
* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு 40 முதல் 60 மி.கி..
* மா, பலா, வாழை 100 முதல் 150 மி.கி.
* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா 150 முதல் 250 மி.கி.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

Sunday, February 21, 2010

உத்தம நபியை உரிய முறையில் நேசிப்போம்!

இஸ்லாத்தின் அடிப்படை “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

நாம் “நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்” எனச் சாட்சி சொல்வது என்பது வெறும் வெற்று வார்த்தைகளால் மாத்திரம் உறுதியாகி விடாது. “(நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதரே என நாங்கள் சாட்சி கூறுகின்றோம்” என்று கூறுவர். நிச்சயமாக நீர் அவனது தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் பொய்யர்களே என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.” (அல்குர்ஆன் 63:1)

அல்லாஹ்வின் தூதரை உண்மையில் நேசிக்காது அவரை “இறைத் தூதர்” என்று முறையாக நம்பாது நீங்கள் “அல்லாஹ்வின் தூதர் என நாம் சாட்சி கூறுகின்றோம்” என அவர்கள் கூறிய சாட்சியத்தை அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. எனவே நாம், கூறும் சாட்சியம் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் அந்தச் சாட்சியத்தில் முக்கிய சில பண்புகள் அடங்கியிருக்க வேண்டும்.

இஸ்லாத்தின் அத்திவாரத்தின் ஒரு பகுதியான “முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகின்றேன் என்ற” சாட்சி உண்மையாக வேண்டுமென்றால் நம்மிடம் பின்வரும் பண்புகள் வெளிப்பட்டேயாக வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களை உண்மைப்படுத்துவது அவசியம். எல்லா முஸ்லிம்களும் அவர் “அல்லாஹ்வின் தூதர்” என உண்மைப்படுத்துகின்றனர். ஆனால், நபியை உண்மைப்படுத்துவது என்பது அவர் அறிவித்த அனைத்தையும் உண்மைப்படுத்துவதைக் குறிக்கும். “நான் நபியை ஏற்றுக்கொள்கின்றேன்” அவர் கூறிய இன்னின்ன செய்திகள் பகுத்தறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும், நடைமுறைக்கும் பொருத்தமில்லாதவை. அதற்கு என்னால் உடன்பட முடியாது” என்ற தோரணையில் பேசுவது நபியை உண்மைப்படுத்துவதாகாது. அடுத்து, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியை மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் எத்திவைப்பதற்காக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் என நம்புவதும் நபியை உண்மைப்படுத்துதல் என்பதில் அடங்கும்.

- நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும், அவர்களது தீர்ப்பை எத்தகைய அதிருப்தியும் இல்லாது முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும். நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பின்பற்றுவதும், அதற்கு மாற்றமானதை விட்டு விடுவதும் ஷஹாதாக் கலிமாவில் அடங்கக் கூடியதாகும்.

- அடுத்து, நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும். இது சாதாரண நேசம் அல்ல. தனது பெற்றோர், பிள்ளைகள், மற்றோர் ஏன்! தனது உயிரை விட அதிகமாக நபியை நேசிக்க வேண்டும். இந்த நேசம் என்பது வாய் வார்த்தையில் மட்டுமல்லாது நடைமுறையிலும் இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், அவர்களுக்கு உதவி செய்வதும், அவர்கள் மூலம் கூறப்பட்ட செய்திகளை நடைமுறைப்படுத்துவதும், நபி(ஸல்) அவர்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதும் இந்த நபி மீதான நேசத்தின் சான்றுகளாக இருக்கும்.

எமது குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போது “முஹம்மத்” எனப் பெயர் வைத்து விட்டால் நாம் நபியை நேசிப்பதாய் விடாது. அல்லது அவர்களது பிறந்த தினத்திற்கு விழா எடுத்தால் அது நபி மீது நேசம் கொண்டதற்குச் சாட்சியாகவும் அமைந்து விடாது. மேலே நாம் கூறியது போன்று நமது ஷஹாதத் கலிமா ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் சிலவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.

- நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கான சான்றுகளை உங்கள் சிந்தனையில் பதியச் செய்யுங்கள்! இந்தச் சிந்தனையின் அடிப்படை குர்ஆன்தான். எனவே, நபி(ஸல்) அவர்களது தூதுத்துவம் பற்றிக் கூறும் குர்ஆன் வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்!

- நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறக் கூடிய குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் கற்றுக்கொள்ளுங்கள்!

- இந்த உம்மத்தில் உள்ள அறிஞர்களின் தியாகத்தின் மூலமும், நுணுக்கமான ஆய்வின் மூலமும் நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவை அல்லாஹ் பாதுகாத்துள்ளான். ஏனைய எந்த சமூகம் கவனம் செலுத்தாத அளவுக்கு இந்த உம்மத் -நபியின் ஸுன்னாவைப் பாதுகாப்பதற்கும், அதில் நுழைந்த கலப்படங்களைக் களைவதற்கும் செய்த தியாகங்களை அறிந்துகொள்ளுங்கள்!

(அப்போதுதான் ஸுன்னாவின் பெறுமதியையும், போலிச் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தையும் உங்களால் உணர முடியும்.)

- நபி(ஸல்) அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதை நேரடியாகக் காட்டுங்கள்! உள்ளத்தளவில் அவரது உயர்ந்த பண்புகளை நினைவுக் கூறுங்கள்! நீங்கள் ஒரு நடிகனையோ, விளையாட்டு வீரனையோ, அரசியல் தலைவனையோ விரும்பினால் அவனது பெயர், பிறந்த இடம், வரலாறு, செய்த சாதனைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றீர்கள். நபியை நேசிக்கும் நாம், நபி(ஸல்) அவர்களது பரிபூரணமான பண்புகள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமற்றிருக்கலா? எனவே, நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசும் “ஷமாயிலுத் திர்மிதி” (தமிழில்: நபிகள் நாயகம் – நேர்முக வர்ணனை) போன்ற புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.

- அவரது மகத்துவத்தையும், சிறப்பையும் அறிந்திருக்க வேண்டும். “நபி(ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை கொஞ்சம் கூடக் குறைவின்றிப் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்” என நம்ப வேண்டும். எங்கள் அனைவரை விடவும் அவர் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். (இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால்தான் நபிமொழிக்கு மாற்றமாக யார் பேசினாலும் நம்மால் அதைப் புறக்கணிக்க முடியும். இல்லையென்றால் “இவர் பெரிய அறிஞர்”, “சேவை செய்தவர்” என்றெல்லாம் காரணம் கூறி நபிமொழியை விடத் தனி நபரின் கூற்றுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுவோம்.)

- நபி(ஸல்) அவர்கள்தான் எமது வழிகாட்டிளூ நபிவழியே நம் வழி. அல்லாஹ்வின் அன்பைப் பெற அவரது வழிகாட்டல் ஒன்றின் மூலம் மட்டுமே முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக எமது வாழ்க்கை அமைய வேண்டும்.

- நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மீது பேரன்பும், கிருபையும் கொண்டவர்கள் என்பதை நம்ப வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களது கண்ணியத்தையும், அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருக்கும் உயர்ந்த ஸ்தானத்தையும்

அல்லாஹ் அவர்களைக் கண்ணியப்படுத்தியுள்ள விதத்தையும் விளக்கும் குர்ஆனிய வசனங்களையும், ஹதீஸ்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களை நேசிக்குமாறு நாம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப் படுத்துமாறு நாம் ஏவப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்தஆலா தன் திருமறையில்; நம்பிக்கை கொண்டோரே! உங்கள் சப்தங்களை நபியின் சப்தத்திற்கு மேலால் உயர்த்தாதீர்கள். மேலும், உங்களில் சிலர் மற்றும் சிலருடன் சப்தமிட்டுப் பேசுவது போன்று அவருடன் சப்தமிட்டுப் பேசாதீர்கள்;. (ஏனெனில்,) நீங்கள் உணராத நிலையில் உங்கள் செயல்கள் அழிந்து விடும். நிச்சயமாக எவர்கள் தமது சப்தங்களை அல்லாஹ்வின் தூதரிடத்தில் தாழ்த்திக்கொள்கிறார்களோ, அவர்களது உள்ளங்களை அல்லாஹ் பயபக்திக்காகப் பரிசுத்தமாக்கினான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (49:2-3)

இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக்கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும். (24:63)

இன்று நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லையென்றாலும் அவர்களது வழிமுறையும், பொன்மொழிகளும் இருக்கின்றன. நபிவழிக்கும், நாயக வாக்கியங்களுக்கும் கண்ணியமளிப்பது எமது மார்க்கக் கடமையாகும்.

நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பது எமது மார்க்கக் கடமையாகும். இந்த வகையில் நபி(ஸல்) அவர்களை நோவினை செய்யும் விதத்தில் அல்லது அவர்களது அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் அனைத்துச் சதிகளுக்கு எதிராகவும் போராடுவதும் எமது மார்க்கக் கடமையாகும்.

இதனை; “…எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்” (7:157) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

- எனது சக்திக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப முடிந்த அளவு நபி(ஸல்) அவர்களுக்கு “நுஸ்ரத்” செய்வேன் என உண்மையான உள உறுதிப்பாட்டை எடுத்தல் வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களை முறையாக நேசித்தால் சுவனத்தில் அவர்களுடன் இருக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். ஒரு நபித் தோழர், “நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றேன்” என்று கூறிய போது, “நீ யாரை நேசித்தாயோ அவர்களுடன் இருப்பாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த மகத்தான பாக்கியத்தை மனதில் வைத்து அவர்களை உண்மையாக நேசிக்க வேண்டும்.

- நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள எமது நேசத்தை வெளிப்படுத்துமுகமாக நபியவர்கள் கற்றுத் தந்த “ஸலவாத்”தை அதிகமதிகம் ஓத வேண்டும். குறிப்பாக நபியவர்கள் நினைவுகூறப்படும் போதும், அதானுக்குப் பின்னரும், வெள்ளிக் கிழமை தினம் மற்றும் சகல சந்தர்ப்பங்களிலும் “ஸலவாத்”து ஓதி அந்த நன்மையைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும்.

- நபி(ஸல்) அவர்கள் மீது நேசம் கொண்டவர்கள் நபி(ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்றையும், அது தரும் படிப்பினைகளையும் அதிகமதிகம் படித்துப் பயன்பெற வேண்டும். “நபியை நேசிக்கின்றேன்!” என்று கூறிக்கொண்டு அவரது அவரது வாழ்வு பற்றிப் படிக்காமல் இருக்க முடியாது.

- நபி(ஸல்) அவர்களது பொன்மொழிகளைப் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத், அபூதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களும், ரியாளுஸ் ஸாலிஹீன், புழூஹுல் மறாம் போன்ற ஹதீஸ் தொகுப்புக்களும் இன்று தமிழில் வெளிவந்துள்ளன. இந்த மொழிபெயர்ப்புக்கள் மூலம் நபிமொழிகளை அறிந்துகொள்ளலாம்.

- நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாக்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் நபி(ஸல்) அவர்களையே முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களது எந்த ஸுன்னத்தையும் இழிவுபடுத்துவதை விட்டும், கேலி செய்வதை விட்டும் தவிர்ந்திருத்தல் வேண்டும். இன்று எம்மில் சிலர் தாடி வைத்தல் போன்ற ஸுன்னாக்களை இழிவுபடுத்துகின்றனர். இது நபியை இழிவுபடுத்துவது போன்று குற்றமாகக் கருதப்படும்.

- மக்கள் மத்தியில் ஸுன்னா முக்கியத்துவம் பெறும் போதும், நடைமுறைப்படுத்தப்படும் போதும், மேலோங்கும் போதும் மகிழ்வடைய வேண்டும்.

- சில ஸுன்னாக்கள் மக்கள் மத்தியில் மறைந்து போயிருப்பது குறித்து கவலை கொள்ள வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களையோ, அவர்களது ஸுன்னாவையோ விமர்சிப்பவர்கள் மீது கோபம் கொள்வதும் நபி மீதான நேசத்தை வெளிப்படுத்தும் அம்சமாகும்.

- நபி(ஸல்) அவர்களது மனைவியர், அவர்களது சந்ததியினர் மற்றும் நபி(ஸல்) அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த முஃமின்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களது தோழர்களான ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்கவும், மதிக்கவும் வேண்டும். அத்துடன் மார்க்க அறிவு, பேணுதல், அல்லாஹ்விடம் பெற்றுள்ள அந்தஸ்து அனைத்திலும் அவர்கள் பின்னால் வந்தவர்களை விட உயர்வானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- “உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபிவழியைப் போதிக்கும் உலமாக்களை நேசிப்பதும், கண்ணியப்படுத்துவதும் நபி(ஸல்) அவர்கள் மீதான எமது நேசத்தை வெளிப்படுத்தும் அம்சமாக அமையும்.

குடும்ப மட்டத்தில் நபியை நேசிக்க..

எமது குடும்ப அமைப்பில் நபி மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தப் பின்வருவன போன்ற செயல் திட்டங்களை முன்னெடுக்கலாம்.

- நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடிப்படையில் குழந்தைகளை வளர்த்தல், பயிற்றுவித்தல்.

- உண்பது, உறங்குவது, மல-சல கூடத்துக்குச் செல்வது போன்ற விடயங்களில் குழந்தைகள் நபிவழியைப் பின்பற்றப் பயிற்றுவித்தல்.

- நபி(ஸல்) அவர்களது வரலாற்றைப் பிள்ளைகளுக்குக் கற்பித்தல். அதற்கான நூற்கள், இறுவட்டுக்களைக் குழந்தைகளுக்கு அன்பளிப்புச் செய்தல்.

- சின்னச் சின்ன நபிமொழிகளையும், அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய அவ்றாதுகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.

கல்விக் கூடங்கள்:

நீங்கள் ஒரு ஆசிரியராகவோ, அதிபராகவோ இருக்கலாம். அல்லது பல்கலைக்கழக மாணவ அமைப்புக்களின் பொறுப்புதாரிகளாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கலாம். நீங்கள் அல்லாஹ்வின் தூதரை உண்மையாக நேசிக்கின்றீர்கள் என்பதை நடைமுறையில் நிரூபித்தாக வேண்டும். அதற்காகப் பின்வரும் செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.

- உங்கள் மாணவர் மனதில் நபி(ஸல்) அவர்கள் மீதான நேசத்தை விதையுங்கள்! (ஒரு கம்யூனிஸவாதி கார்ல் மார்க்ஸ் மீது பற்றை விதைக்கும் விதத்தில் தனது பாடத்தையும், உதாரணத்தையும் அமைத்துக்கொள்ளும் போது ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் மீது நேசத்தை விதைக்க முயலக் கூடாதா என்ன!?)

- நபி(ஸல்) அவர்களது பன்முக ஆளுமைகளை விபரிக்கும் விதத்தில் அதிகமான செயலமர்வுகளை நடத்தலாம்.

- நபி(ஸல்) அவர்களது வரலாறு குறித்த ஆய்வுகளை உற்சாகப்படுத்தி இது தொடர்பான நூலாக்க முயற்சிகளை ஊக்குவிக்கலாம்.

- பொது வாசிகசாலைகளில் நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வரலாறு, ஆளுமை குறித்துப் பேசும் நூற்களை வைக்கலாம்.

அந்நியர்களது வாசிகசாலைகளுக்கும் நாமே இது தொடர்பான நூற்களை அன்பளிப்புச் செய்யலாம். இல்லையென்றால் இஸ்லாத்தின் எதிரிகளின் நூற்கள்தான் அந்த இடத்தை நிரப்பும். நபி(ஸல்) அவர்களைப் பற்றி அறிய விரும்பும் ஒரு அந்நிய வாசகன் இஸ்லாத்தின் எதிரிகளின் நூற்களை எடுத்துத்தான் வாசிப்பான். இதைத் தவிர்ப்பதற்கும், நபி(ஸல்) அவர்கள் பற்றிய உண்மையான-உயர்வான வரலாறு பிற மக்களைச் சென்றடையவும் இந்தத் திட்டம் உதவும்.

- நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வழிகாட்டல் தொடர்பான வருடாந்தப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதில் அந்நியர்களும் பங்குகொள்ள வாய்ப்பளிக்கலாம். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் நிலையை உருவாக்கலாம். இதற்காகக் கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளை நடத்தலாம்.

- இளைஞர்-யுவதிகளுக்காக விடுமுறை நாட்களில் ஆழமான, விரிவான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.


அறிஞர்கள் – தாயிகள் (அழைப்பாளர்கள்)

நீங்கள் மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கும் இமாமாகவோ, தஃவாப் பணியில் ஈடுபாடு கொண்டவராகவோ, அறிவைத் தேடும் மாணவராகவோ இருந்தால் பின்வரும் பணிகளூடாக நபி(ஸல்) அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் பறை சாட்டலாம்.

- நபி(ஸல்) அவர்களது பிரச்சாரத்தினதும், அவர்களது தூதுத்துவப் பணியினதும் தனித்துவங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தலாம்.

- நபி(ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்குமான வழிகாட்டியாவார்கள். இந்த வகையில் குல-நிற-கோத்திர-பிரதேச வேறுபாடுகளையும் தாண்டி அனைத்துலக மக்களிடமும் நபி(ஸல்) அவர்களது தூதுச் செய்தியைத் தன் சக்திக்கு ஏற்பச் சுமந்து செல்லுவதன் மூலமும், அதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவதன் மூலமும் உங்கள் அன்பை உறுதி செய்யலாம்.

- அழகிய நடையில் நபி(ஸல்) அவர்களது சிறப்புக்களையும், அவர்களைப் பின்பற்றும் சமூகத்தினது தனித்தன்மையையும் பிற மதத்தவர்களுக்கு எடுத்துரைத்தல்.

- நபி(ஸல்) அவர்களது வாழ்வை மக்களுக்குத் தெளிவுபடுத்துதல், நபித்துவத்திற்கு முந்திய-பிந்திய அவர்களது தூய வாழ்வையும், அவர்களது சிறப்பான பண்பாடுகளையும் தெளிவுபடுத்துதல்.

- நபி(ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினர், அண்டை அயலவர், தோழர்கள் என்போருடன் எவ்வாறு உறவுகளைப் பேணினார்கள் என்பதை விளக்குதல்.

- நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளுடனும், யூத-கிறிஸ்தவர்களுடனும், இணைவைப்போருடனும் எத்தகைய மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துதல். குறிப்பாக இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார்கள் என விமர்சிக்கப்படும் இந்தச் சூழலில் நபி(ஸல்) அவர்கள் அந்நியர்களுடன் மேற்கொண்ட அன்னியோன்யமான உறவு குறித்து தெளிவுபடுத்துதல் அவசியமாகும்.

- காலையில் கண்விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அவர்களது அன்றாட நடவடிக்கை எப்படி அமைந்திருந்தது? என்பதைத் தெளிவுபடுத்தல்.

- குத்பா உரைகளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தை நபி(ஸல்) அவர்கள் மீது பற்றையும், பாசத்தையும் ஏற்படுத்தத்தக்க அவர்களது அழகிய வாழ்க்கையை மக்களுக்கு முன்வைக்கப் பயன்படுத்துதல்.

- தொழுகையில் நபி(ஸல்) அவர்களது வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஆயத்துக்கள் ஓதப்பட்டால் 5 அல்லது 10 நிமிடங்கள் தொழுகை முடிந்ததும் அந்த ஆயத்தின் அர்த்தம் நபி(ஸல்) அவர்கள் அதைக் கடைப்பிடித்த விதம் அல்லது அது என்ன காரணத்திற்காக அருளப்பட்டது? என்பதைச் சுருக்கமாக மக்களுக்கு விளக்கலாம்.

- குர்ஆன் வசனங்களைப் பாடமிட ஆர்வமூட்டுவது போன்று சின்னச் சின்ன ஹதீஸ்களை மனனமிடப் பயிற்றுவிக்கும் மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்யலாம்.

- நபி(ஸல்) அவர்களது செயற்பாடுகளையும், வழிமுறைகளையும் விமர்சிப்பவர்களை விட்டும் விலகி இருப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

- நபி(ஸல்) அவர்கள் மீது நேசம் வைப்பதிலும், அவர்களது சிறப்பைப் பேசுவதிலும் எல்லை மீறிச் சென்று விடக் கூடாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துதல். இந்த எல்லை மீறும் போக்கு எம்மை அறியாமலேயே எம்மை ஷிர்க்கில் தள்ளி விடும் என மக்களை விழிப்படையச் செய்தல் வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களது உண்மையான வரலாற்றைக் கற்பதை மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களின் வரலாறு சிறப்பு என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களுக்கு இனம் காட்டி நபி(ஸல்) அவர்களது தூய வரலாற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும்.

- நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வரலாறு குறித்து மக்களிடம் காணப்படும் ஐயங்களைத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.

அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்:

இவர்கள் தனி நபராக இருந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்கள். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் மீது பற்றும், பாசமும் கொண்ட இத்தகைய ஊடகவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பின்வருமாறு பணியாற்றலாம்.

- சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நபி(ஸல்) அவர்களது பண்புகளையும், தனித்தன்மைகளையும் மக்களுக்கு எடுத்து வைக்கலாம். உதாரணமாக, நபி(ஸல்) அவர்களை குண்டு வைப்பவராகக் கார்டூன் வரையப்பட்டு அது பரபரப்பை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் காபிர்களுடன் நடந்து கொண்ட விதம், எதிரிகளை மன்னித்த அவர்களது பண்பு, அவர்களின் அன்பான வாழ்வை மக்களுக்கு எடுத்து வைக்கலாம். அதே போன்று நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த போர் தர்மங்கள், ஒழுங்குகள் என்பவற்றை பகிரங்கப்படுத்தலாம்.

- நபிவழியில் குறை காணும் கருத்துக்களையோ, கட்டுரைகளையோ, செய்திகளையோ வெளியிடக் கூடாது.

- ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கான செயலமர்வுகளை ஏற்படுத்தி நபி(ஸல்) அவர்களது உண்மையான வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் முன்வைக்கலாம். அதன் மூலம் அந்த ஊடகவியலாளர்கள் நபி(ஸல்) அவர்கள் குறித்து தப்பும் தவறுமாகச் செய்தி வெளியிடுவதைத் தவிர்க்கலாம்.

- நபி(ஸல்) அவர்கள் குறித்து மாற்று மத அறிஞர்கள் வெளியிட்டுள்ள நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பலாம்.

- நாட்டில் உள்ள மாற்று மதம் சார்ந்த அறிஞர்கள், சிந்தனையாளர்களை அழைத்து நபி(ஸல்) அவர்களது வாழ்வு, அவரது அரசியல்-சமுகப் பணிகள் குறித்து விரிவான கலாச்சார மாநாடுகளை நடத்தலாம்.

- முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டும் பங்குகொள்ளும் விதத்தில் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த போட்டி நிகழ்ச்சிகளை தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாக நடத்தலாம். அவர்கள் ஆக்கங்கள் தயாரிக்கத்தக்க தகவல்களை நாமே நூற்களாக வெளியிடலாம். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அந்நியர்களும் படிக்கும் சூழலை உண்டுபண்ணலாம். அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குப் பெருமதியான பரிசில்களை வழங்கலாம். வெற்றி பெற்றோரின் ஆக்கங்களைத் தேசிய நாளேடுகளிலும் வெளிவரச் செய்து அதை மக்கள் மயப்படுத்தலாம்.

- நபி(ஸல்) அவர்கள் குறித்துப் பேசும் கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்கள், சிற்றேடுகள் என்பவற்றைப் பல மொழிகளிலும் வெளியிடலாம்.

- நபி(ஸல்) அவர்களை நேசிப்பது மார்க்கக் கடமை. அவர்களது நேசிப்பது என்பது அவர்களை கண்ணியப்படுத்துவது, பின்பற்றுவது என்பவற்றை உள்ளடக்கியது என்பதைத் தெளிவுபடுத்தும் கட்டுரைகளையும், வெளியீடுகளையும் சமுகத் தலைவர்கள் பார்வைக்கு உட்படுத்தலாம்.


நிறுவனங்களின் பணி:

முஸ்லிம் சமுகத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள பற்றையும், பாசத்தையும் பின்வரும் வழிகளில் வெளிப்படுத்தலாம்.

- நபி(ஸல்) அவர்களது உண்மையான வாழ்வை உலகுக்கு எடுத்துக் கூறும் ஒலி-ஒளி நாடாக்கள், புத்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யலாம்.

- பிரதேச, தேசிய மட்டங்களிலான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து முஸ்லிம் சிறுவர்-இளைஞர்களுக்கு நபி(ஸல்) அவர்களது வரலாற்றைப் போதிப்பதுடன் மாற்று மதத் தலைவர்களும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அறிந்துகொள்ளத்தக்க கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.

- நபி(ஸல்) அவர்களது வாழ்வை விபரிக்கும் இலவச வெளியீடுகளை விநியோகம் செய்யலாம்.

- நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பரப்புவதற்காகப் பாடுபட்ட நல்லறிஞர்களை இனங்கண்டு அவர்களையும், அடுத்தவர்களையும் ஊக்கப்படுத்துமுகமாகப் பரிசில்களையும், நினைவுச் சின்னங்களையும் வழங்கலாம்.

- மாற்று மொழிகளில் நபி(ஸல்) அவர்களது பன்முக ஆளுமைகளை விபரிக்கக் கூடிய வெளியீடுகளை வெளியிட்டு அதனைப் பல்கலைக் கழகங்கள், அரச-தனியார் பணியிடங்கள், நூலகங்கள், வாசிகசாலைகளுக்கு விநியோகிக்கலாம்.

- வருடாந்த நினைவு மலர்களை வெளியிட்டு அதன் மூலம் நபி(ஸல்) அவர்களது பண்பாடு, ஒழுக்கம், வழிகாட்டல்களை விபரிக்கலாம்.

- நபி(ஸல்) அவர்களது தூய வாழ்வை விபரிப்பதற்கும், அவர்கள் குறித்து எழுப்பப்படும் ஐயங்களுக்குப் பதிலளிப்பதற்குமெனத் தனியான அறக்கட்டளையை நிறுவி அதன் மூலமாக நூல் வெளியீடு, மொழியாக்கப் பணி, வலைப்பின்னல் எனப் பணிகளை விரிவுபடுத்தலாம்.


இணையத் தளங்களை நடத்துவோர்:

இணையத் தளங்கள் இன்றையத் தொடர்பூடங்களில் பிரிக்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. இணையத் தளப் பாவணையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இணையத் தளங்களை நடத்தும் முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் மீது தாம் கொண்ட அன்பை வெளிப்படுத்தப் பின்வரும் விதத்தில் பணியாற்றலாம்.

- இந்த மார்க்கத்தின் சிறப்பம்சங்களை இணையம் மூலம் தெளிவுபடுத்தலாம்.

- இஸ்லாம் அனைத்துத் தூதர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், அவர்கள் மீது அன்பு வைக்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ள செய்தியையும் தெளிவுபடுத்தலாம்.

- நபி(ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் சிறப்பம்சங்களையும், தனித்துவங்களையும் தெளிவுபடுத்தும் தனிப் பகுதியை இணையத்தில் ஏற்படுத்தலாம்.

- இணையத்தில் (chat) அரட்டையில் உரையாடும் போது நபி(ஸல்) அவர்களது வரலாற்றையும், அவர்கள் போதித்த கொள்கையையும் ஆய்வு செய்யுமாறு மாற்று மதச் சகோதரர்களிடம் வேண்டுதல் முன்வைக்கலாம்.

- நபி(ஸல்) அவர்களது சிறப்பம்சங்களையும், அவர்களது குறிப்பான சில ஹதீஸ்களையும் மாற்று மதத்தவர்களுக்கு (email) அஞ்சல் செய்யலாம். உதாரணமாக நபியவர்களின் மன்னிக்கும் பண்பு, விட்டுக் கொடுக்கும் போக்கு, சிறுவர்களுடன் அவர்கள் நடந்து கொண்ட விதம், இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.

- நபி(ஸல்) அவர்களது வாழ்வைப் பற்றிப் பேசும் சிறந்த நூற்கள், உரைகள் என்பவற்றை இணையத் தளத்தைப் பயன்படுத்தி மக்கள் மயப்படுத்தலாம்.

செல்வந்தர்களும், இஸ்லாமிய அரசும்:

எமது சமுகத்திலுள்ள செல்வந்தர்களும், இஸ்லாமிய அரசுகளும் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள உண்மையான தமது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர். வெறுமனே நபி(ஸல்) அவர்களுக்காக “மீலாத் விழா” எடுத்து விட்டு அல்லது “மவ்லூது” ஓதி விருந்து படைத்து விட்டு நாம் நபி(ஸல்) அவர்களுக்குரிய அன்பை வெளிப்படுத்தி விட்டோம் எனச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இது தவறாகும். இஸ்லாமிய அரசுகள், செல்வந்தர்கள் என்போர் நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் ஊக்குவித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். செல்வந்தர்கள், சாதாரண நூல் வெளியீடுகள்-கவிதை வெளியீடுகள் என்பவற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் 10 வீதம் கூட இஸ்லாமிய வெளியீடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இஸ்லாமிய அரசுகளைப் பொறுத்த வரையில் நபி(ஸல்) அவர்கள் மீதான தமது பாசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய பணிகளை அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும். இன்றைய முஸ்லிம் அரசுகள் சினிமா, கலை-கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அநாச்சாரங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் கூட நபி(ஸல்) அவர்களது தூய வாழ்வை மக்கள் மன்றத்திற்கு வைப்பதற்கு அளிப்பதற்கு தவறி விட்டன. இருப்பினும் வருடம் ஒரு முறை “மீலாத்” நடத்தி, நபி மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தி விட்டோம் என்று திருப்தி காண்கின்றன. அல்லது நடிக்கின்றன எனக் கூறலாம்.

எனவே, எமது ஈமானின் ஒரு அம்சமான நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள நேசத்தை வெறும் வெற்று வார்த்தைகளிலும் உண்ணும் உணவிலும் மட்டும் காட்டும் இந்தப் போக்கைக் கைவிட்டு விட்டு நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள நேசத்தை உள்ளத்து உணர்வுகளாலும், எமது ரூபத்திலும், நடத்தையிலும் வெளிக்காட்ட முனைவோமாக!

 
 - எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Sunday, February 14, 2010

வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு


வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.


"ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் "வரலாற்று வரைவியல்"(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு

முஸ்லிம் வரலாற்று வரைவியலின் தோற்றம் என்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்களின் கைகளாலேயே வரலாற்றை எழுதத் துவங்கினர். அதாவது, தங்களின் பாரம்பரிய வரலாற்றினைத் தாங்களே தொகுத்து விடுவர். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்களுடனான தங்களின் பாரம்பர்ய தொடர்புகளைப் பற்றிய வரலாற்றினைப் பதிவு செய்து வந்தார்கள்.(நபிமொழி அறிவிப்பாளர் தொடர் வரிசை)

ஆரம்ப கால முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் மார்க்கம் மற்றும் அரசியல் சார்ந்த வரலாற்றில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தனர்.

இவர்கள் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றையும் முஸ்லிம்களின் வெற்றிகளைப் பற்றியும் எழுதி வந்தார்கள்.அத்துடன் இஸ்லாமியக் கலாச்சாரம், அரசியல் வளர்ச்சி, கலீஃபாக்களின் காலத்தில் அவற்றின் நிலை ஆகியவற்றையும் பதிவு செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களைப் பற்றி முதலாவதும் முக்கியத்துவமும் வாய்ந்த வரலாற்றை எழுதியவர் இப்னு இஸ்ஹாக். இவர் எழுதிய நூலின் பெயர்: "The Biography of the Prophet" இதில் நபி(ஸல்) அவர்களுடைய பாரம்பரியம், இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த நூலானது சிறப்பு வாய்ந்ததாகவும் பின்னர் வந்த முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அந்த நூலில் உள்ள விஷயங்களை சுதந்திரமாக எடுத்தாள்வதற்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிய மற்றுமொரு வரலாற்று நூல் இப்னு ஹிஷாம் எழுதிய "Biography of Prophet(Sal)". இந்த நூலிலுள்ள பெரும்பாலான விஷயங்கள் இப்னு இஸ்ஹாக் உடைய நூலிலிருந்து எடுத்து ஆளப்பட்டவையே.

பெரும்பாலான முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போர்களையே பதிவு செய்துள்ளார்கள். அப்பாஸிய கலீஃபாக்களின் ஆஸ்தான வரலாற்றாசிரியர் அல் வாஹிதி(747-823) இது பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் "History of the Wars of the Prophet" எனும் நூல் புகழ் பெற்றது. மற்றுமொரு சிறந்த வரலாற்றாசிரியர் அல்-பலதூரி ஆரம்ப கால முஸ்லிம் வெற்றிகள் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பினை "கான்குட்ஸ் ஆப் தி கண்ட்ரீஸ்" எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இவை தவிர, புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்களான அல் தினாவரியின் ஹிஸ்டரி ஆப் அரேபியா அண்ட் பர்ஷியா" நூலும் இப்னு அலீ தாஹிரின் "தி ஹிஸ்டரி ஆப் பாக்தாத் அண்ட் இட்ஸ் கலீப்ஸ்" எனும் நூலும் புகழ் பெற்றதாகும்.

இது போல வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களையும் அவர்கள் தம் நூல்களையும் இந்த உலகம் கண்டுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் இங்கு நினைவு கூர்வது நம்முடைய வரலாறுகளை நமக்குத் தந்த முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் அவர்கள் இந்த உலகிற்கு ஆற்றிய சேவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அல்-தபரீ (838-923)

உலகத் தரம் வாய்ந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் மிகவும் முதன்மையானவர் இவரே. இவர் எழுதிய "தி அன்னால் ஆப் தி அபோஸ்டல் அண்ட் கிங்ஸ்" எனும் முன்னோர்களைப் பற்றிய வரலாற்று நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.

அந்த நூலில் கி.பி. 915 வரை வாழ்ந்த முன்னோர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

மேலும் ஷரீஅத் சட்டத்தில் ஆழ்ந்த அறிவையும் பெற்றுள்ளார். கால அட்டவணையை முறையாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்திய முதல் முஸ்லிம் வரலாற்றாசிரியரும் இவரே. அல் தபரீ வரலாற்று ஆய்விற்காகப் பயன்படுத்திய நெறிமுறைகள் இன்றளவிலும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

அல் மஸ்ஊதி

மத்திய காலப்பிரிவில் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் இவர். மேலும் இவர் சிறந்த Enotclopaedist என்றும் அழைக்கப்படுகிறார். அல் தபரீ பயன்படுத்திய கால அட்டவணையை இவர் மன்னர்கள், ஆட்சி மற்றும் தலைப்புகளின் கீழ் அதனைப் பிரித்து எழுதியுள்ளார்.

இவருடைய நூல்களில் சிறந்தது "Meadow of Gold" ஆகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இவர் அரசியல் நடவடிக்கைகளைக் குறிப்பிடும் போது அதனுடன் சேர்த்து மக்களுடைய கலாச்சார மற்றும் சமூக வாழ்வினை இணைத்தே வரலாற்றைத் தந்துள்ளார். இவருடைய வரலாற்று ஆய்வுகளில் அனைவராலும் பொறாமை கொள்ளத்தக்க ஓர் ஆய்வு "Herodotus of the Arabs" எனும் நூலாகும்.

மிஸ்காவைஹி

அரபு வரலாற்று ஆய்வுகள் மிகவும் உச்ச நிலையை அடைந்தது மிஸ் காவைஹியின் எழுத்துகள் மூலமே. ஏனெனில் முன்னர் கூறிய வரலாற்றாசிரியர்களை விட இவர் முதல் தர (நம்பத்தகுந்த) தகவல்களைத் திரட்டுவதில் கைதேர்ந்தவராக இருந்தார்.

தற்போது இதனை Primary Sources என்று கூறுகிறார்கள். குறிப்பாக, நிர்வாகம் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்கள். இதனை இவர் எழுதிய "Experiences of the Nations" எனும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றுமொரு சிறப்பு, இவருடைய பாரபட்சமற்ற தன்மை. மிகச் சிறந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் காலத்தில் இவர் வழங்கிய தீர்ப்புகள் மிகவும் நேர்த்தியானவை.

மிக்ரிஷி (1360-1442)

எகிப்தைப் பற்றி எழுதிய முஸ்லிம் வரலாற்றாசிரியர் தான் மிக்ரிஷி. இவர் எகிப்து முஸ்லிம்களின் வரலாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புவியியல் அமைப்பு போன்றவற்றைத் தந்துள்ளார். இவர் பாதிம்களுடைய மற்றும் மம்லூக் சுல்தான்களுடைய வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இவருடைய மற்றுமொரு சிறந்த வரலாற்றுப் பங்களிப்பு "Encyclopaedia of Egyptian Biography" ஆகும். இவர் எழுதிய வரலாற்று நூல்கள் மிகவும் ஆதாரப்பூர்வமானவையாக இருந்த போதிலும் இவர் ஓர் ஆய்வாளர் கிடையாது என்பது தனிச் சிறப்பாகும். ஆயினும் இவர் எழுதிய "இடைக்கால கெய்ரோ" உலகிற்குக் கிடைத்த மிகவும் விரிவான, மதிப்பு வாய்ந்த ஆய்வாகும்.

அல் பிரூனி (973-1048)

முஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி(chronology) மூலம் ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்ட மற்றொரு சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் தான் அல் பிரூனி. சிலகாலம் இந்தியாவிலும் தங்கியுள்ளார். இந்து கலாச்சாரத்தின் நிலை குறித்து இவர் கி.பி. 1080 -இல் எழுதிய "கிதாபுல் ஹிந்த்" மிகப் புகழ் பெற்றதாகும். இந்துக் கலாச்சாரத்தின் நல்ல - தீய அம்சங்களை அவர் அதில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர் செய்த இந்த ஆய்வு ஆரம்பகால சிலைவணங்கிகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

அலீ அல் தனாகி(969-94)

"Collections of Histories" எனும் நூல் மூலம் சிறப்பு பெற்றவர் தனாகி. முஸ்லிம்களுடைய தொடர்புகளைப் பற்றியும் பின்பற்றப்பட்ட வரலாற்று முறைகள் பற்றியும் இவர் எழுதியுள்ளார். "The History of Damascus" எனும் நூலின் மூலம் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் அல் ஹஸன்(1121 - 93) ஆவார்.

வரலாறு என்பது மாறக்கூடிய தன்மை கொண்டது. அதற்கென உள்ள தன் சக்தியின் மூலமே அது வளர்ச்சி பெறுகிறது. மேலும் வரலாற்றில் மாற்றம் என்பது சுழற்சி முறையில் ஏற்படும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர். சமூகம் மற்றும் உயிரினங்கள் நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு சமூகம் இரண்டு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒன்று ஊரகம்; இரண்டு நகர்ப்புறம். இதில் ஊரகத்திலிருந்து அந்தச் சமூகம் நகரத்திற்கு வரும் போது அதன் உள்ளார்ந்த சக்தி சீரான அளவில் குறைகிறது. இவ்வாறு அதன் சக்தி குறைந்தாலும் கலை, அறிவியல், தொழில்நுட்பம், வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் அபரிதமான வளர்ச்சியைக் காண்கிறது. அதே நேரத்தில் தனது முரட்டுப் பிடிவாதம் மற்றும் மூர்க்கத்தனத்தை இழக்கிறது. சுருங்கக் கூறின் செல்களின் வளர்ச்சியைப் போல சிலர் பிறப்பதும் பின்னர் இறப்பதும் தத்துவார்த்த முறைகளிலேயே நடைபெறுகிறது என வரலாற்றினை விளக்குகிறார்.

ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அதற்கான காரணத்தை அதன் சுற்றுச்சூழல், வானிலை, அந்த நிலத்தின் தன்மை போன்றவற்றின் மூலம் ஆராய முற்படுகிறார் இப்னு கல்தூன். மதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளார். தூதுத்துவத்திற்கும் மதரீதியான ஆளுமைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். வரலாற்றுக்கான தெய்வீகக் காரணங்களை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் தனது "Universal History" எனும் நூலில் தருகிறார். பேராசிரியர் பர்னஸ் இவரைப் பற்றி கூறும் போது, "மத்திய கால வரலாற்று வரைவியலாளர்களில் இப்னு கல்தூன் ரோஜர் பேகனாக இருந்தார்".

பேராசிரியர் ராபர்ட் பிளிண்ட் கூறுகையில், "இப்னு கல்தூன் வரலாற்று வரைவியலுக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். வரலாற்றை சிறப்பு அறிவியலாக மாற்றிய பெருமை இப்னு கல்தூனுக்கு உண்டு" என்கிறார்.

இவருடன் மத்திய காலப் பிரிவில் (அ) இடைக் காலத்தில் வாழ்ந்த மற்ற புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் சுல்தான் ஸலாஹுத்தீன் வரலாற்றை எழுதிய பஹாஅத்தீன், உலகப் புகழ் பெற்ற முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிய இப்னு சவாது, அறிஞர்களின் அகராதி எழுதிய யாகூத், வரலாற்று அகராதி எழுதிய இப்னு கல்லிக்கன் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இப்னு கல்லிக்கன் சுமார் 865 புகழ்பெற்ற முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளார்.

நவீன கால வரலாற்றாசிரியர்களில் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மத் இக்பால் குறிப்பிடத்தகுந்தவர். வரலாற்றின் பொருள் மற்றும் தன்மை குறித்து இவர் தனது The Reconstruction of Religious Thought in Islam (1930)எனும் நூலில் விளக்கியுள்ளார். வரலாற்றின் முக்கியத்துவம் கடவுளிடம் மனிதனை இணைப்பது தான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தனித்தன்மைக்கு வரலாற்றில் மிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இறைவன் தான் இந்த உலகைப் படைத்து மனிதன் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளான் என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

இவரைப் போல இன்னும் பல முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த உலகிற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார்கள். இவர்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த முஸ்லிம் உம்மத்தில் இன்றைய இளைஞர்களிலிருந்து உருவாக வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக.

நன்றி: ஹாஜா ஹமீதுல்லாஹ் (Samarasam)

Indian Engineering Services Exam 2010 - Equal to IAS, IPS

Indian Engineering Services Exam 2010 This is same as IAS but in Engineering Sector. They can become General Manager in Railways, NTPC etc in few years. The Union Public Service Commission (UPSC) announces the Indian Engineering Service (IES) examination 2010 to commence from 26-Jun-2010. The examination is used to fill various engineering positions in Indian Government.

Eligibility
Aged between 21 to 30,
Degree in Engineering or equivalent
Physically fit

Selection Process
IES Written Examination 2010 will be conducted from 26-Jun-2010
Selected Candidates will be called for a personality test

How to Apply
UPSC will open an online application for IES 2010. The online application form will open from 06-Feb-2010
Alternatively, Candidates can also Apply on the UPSC common application form which is available at all Head Post Offices, with an application fee of Rs100/- in the form of Central Recruitment Fee Stamps

Important Dates
02-Mar-2010 Last Date To Apply
Candidates applying from remote areas can send their application by 16-Feb-2009

Further Info
Visit UPSC website at http://www.upsc.gov.in/

Saturday, February 13, 2010

World’s 7 Amazing Holes

Looking at photos like these scares and fascinates me in equal doses. The sheer scale of these holes reminds you of just how tiny you are. Here is the Name of 7 amazing Holes on the World.

1 Mirny Diamond Mine, Siberia
2 Kimberley Big Hole – South Africa
3 Glory Hole – Monticello Dam
4 Bingham Canyon Mine, Utah
5 Great Blue Hole, Belize
6 Diavik Mine, Canada
7 Sinkhole, Guatemala

Mirny Diamond Mine, Siberia

It’s an absolute beast and holds the title of largest open diamond mine in the world. at 525 metres deep with a top diameter of 1200 metres there’s even a no-fly zone above the hole due to a few helicopters being sucked in.


The red arrow in the photo below is pointing to a huge truck


Kimberley Big Hole – South Africa

Apparently the largest ever hand-dug excavation in the world, this 1097 metre deep mine yielded over 3 tonnes of diamonds before being closed in 1914.


The amount of earth removed by workers is estimated to total 22.5 million tonnes


Glory Hole – Monticello Dam

A glory hole is used when a dam is at full capacity and water needs to be drained from the resevoir.


This is the glory hole belonging to monticello dam in california and it’s the largest in the world, its size enabling it to consume 14′400 cubic feet of water every second.



The hole can be seen at the top left of the photo above. if you were to jump in for some reason your slightly damp body would shoot out near the bottom of the dam (below).



Bingham Canyon Mine, Utah

This is supposedly the largest man-made excavation on earth. extraction began in 1863 and still continues today, the pit increasing in size constantly in its current state the hole is 3/4 mile deep and 2.5 miles wide.


Great Blue Hole, Belize

Situated 60 miles off the mainland of belize is this incredible ‘geographical phenomenon’ known as a blue hole. there are numerous blue holes around the world but none as stunning as this one.


At surface level the near perfectly circular hole is 1/4 mile wide, the depth in the middle reaching 145 metres. obviously the hole is a huge hit with divers


Diavik Mine, Canada

This incredible mine can be found 300km northeast of yellowknife in canada.


The mine is so huge and the area so remote that it even has its own airport with a runway large enough to accomodate a boeing 737. It also looks equally as cool when the surrounding water is frozen.



Sinkhole, Guatemala

A sinkhole is caused when water (usually rainwater or sewage) is soaked up by the earth on a large scale, resulting in the ground collapsing.


These photos are of a sinkhole which occured early this year in guatemala. the hole swallowed a dozen homes and killed at least 3 people.


Officials blamed the monster of a hole on a ruptured sewage pipe.



Source: Information Collected from the Net

வலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை

நம்மில் பலர் காலையில் எழுந்திருக்கையிலேயே அதிகமான இடுப்புவலி,
முதுகுவலியுடன் எழுகிறோம். அதற்கு என்ன காரணம்? வயதானவர்கள் பலருக்கு, மிக இலேசாக அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடம்பிலேயே மிக வலுவானது  என்று கருதப்படும் இந்த எலும்புகள்,          பட்பட் என்று ரொட்டித்துண்டு போல் உடைவது  ஏன்? அது மட்டுமல்ல. இன்று பல சிறு குழந்தைகளுக்குக் கூட கை கால்கள் > வளைதல்,
எளிதில் எலும்பு முறிதல் ஆகியவை ஏற்படுகின்றன என்பதைப் பல செய்தித்தாள்களில்  படிக்க நேரிடுகிறது.

ஒரு கட்டிடம் கட்ட அடிப்படையாகத் தூண்களை எழுப்புவது போல், இறைவன் நமது  உடலுக்கு வலுவும் வடிவமைப்பும் தர 'எலும்புக்கூட்டைப்' படைத்துள்ளான்.

இளம்  பருவத்தில் நாம் வளர வளர, நாம் நமது முழு உயரத்தை அடையும்வரை எலும்புகளும் வளர்கின்றன, அடர்த்தியாகி வலுவடைகின்றன. அதன் பிறகும் நமது  எலும்புத்திசுக்கள்  தொடர்ந்து உடைந்து புத்தாக்கமடைந்துகொண்டே இருக்கின்றன.

ஆண்கள் தமது 40 வயதிற்குப் பின்பும், பெண்கள் 30 வயதிற்குப் பின்பும் தமது எலும்புகளின் வலுவை மெள்ள மெள்ள இழக்கத் தொடங்குகின்றனர். ஏனெனில் ,  இந்த வயதிற்குப் பிறகு எலும்புத்திசுக்கள் அழியும் வேகத்திற்கு இணையான வேகத்தில் புத்தாக்கம் நடைபெறுவதில்லை. எனவே வயது அதிகமாக அதிகமாக, எலும்புகளின் அடர்த்தி குறைந்துகொண்டே வருகின்றது. அதிலும், குறிப்பாக 50 வயதைத் தாண்டியவர்களை ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரின்  மற்றும் பெண்களின் உடலில் சுரக்கும் ஆஸ்டிரோஜென் ஆகியவை, நமது உணவில்
இருந்து  கால்சியத்தைப் பிரித்தெடுத்து உடலுக்கு வழங்கும் பணியில் பெரும்பங்கு  வகிக்கின்றன. ஆனால், நமது ஐம்பதுகளில் நமது உடலில் அந்தச்> சுரப்பிகளின் செயல்பாடு மந்தமடைந்து விடுவதால், உணவில் இருந்து கால்சியத்தை கிரகிக்கும் நமது உடலின் ஆற்றலும் குறைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக  'சினைப்பை நீக்கம்' செய்யப்பட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்பும் பலமடங்கு அதிகமாகும்.

இதைத் தவிர்ப்பது எப்படி? நமது எலும்புகளைக்காப்பாற்றி வலுவுடன்  வைத்துக்கொள்ள என்ன வழி ?   உங்களது வாழ்க்கை முறையில் நீங்கள் மேற்கொள்ளும் சிற்சில மாற்றங்களே  உங்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்க அல்லது தள்ளிப்போட உதவக்கூடியது. நீங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவரா? காலை மற்றும் மாலை சூரிய ஒளியில்  சற்று காலார நடந்து விட்டு வாருங்கள். எலும்புகளுக்கு,  உழைப்பு அதிகரிக்க
அதிகரிக்க  வலுவும் அதிகரிக்குமாம். எனவே 'உடற்பயிற்சி' மற்றும்  'நடைப்பயிற்சி' மிகவும் இன்றியமையாதது.

சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் விட்டமின் 'டி' யானது, எலும்புகள் > வளரவும், வலுவடையவும் மிகவும் முக்கியம். ஆனால் கடும் வெயிலைத் தவிர்க்கவும்.

அதாவது பகல் பதினொன்று மணி முதல் மூன்று மணி வரையான நேரம் உகந்ததல்ல. சாப்பாட்டில் கால்சியம் அதிகமுள்ள உணவுவகைகளைச் சேர்த்துக்கொள்ளவும்.

பால் பொருட்கள், சோயாபீன்ஸ், கடுகு விதை, கொட்டைகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் முதலியவை) முதலியவற்றில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஐம்பது வயதுக்குக்குக் குறைவானவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராமும், அதற்குமேல் வயதுள்ளவர்களுக்கு 1200 முதல் 1500 மில்லிகிராமும் கால்சியம் தேவைப்படுகிறது. எனவே உங்கள் உணவில் தேவையான அளவு கால்சியம் இல்லாவிடில், கால்சியம் மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்வது நன்மை தரும்.

கோகோகோலா முதலிய காற்றேற்றம் செய்யப்பட்ட பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். 'நீரே அறிவாளிகளின் பானம்' என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. நீரையே எப்பொழுதும் அருந்த வேண்டும். மது வகைகளைத் தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீர் ஒரு நாளைக்கு இரண்டு குவளைகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புகைபிடிப்பது எலும்புத்தேய்மானத்தைத் துரிதப்படுத்துகிறது. எனவே வலுவான உடல் வேண்டுமானால், புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டியது அவசியம்.

விட்டமின் பி12, எலும்பு முறிவைத் தவிர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பால், முட்டை, பாலாடைக்கட்டி, சிலவகை மீன் மற்றும் மாமிச வகைகளில் அதிக அளவு பி12 விட்டமின் காணப்படுகிறது. நீங்கள் சுத்த சைவமாக இருப்பின் உங்களுக்கு உணவின் மூலம் கால்சியம் மற்றும் விட்டமின் ப்12 கிடைப்பது கொஞ்சம் குறைவுதான். எனவே தக்க மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு இதற்கான மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

நீங்கள் முப்பது வயதிற்கு மேற்பட்டவராக இருப்பின் ஒரு முறையாவது எலும்பு அடர்த்திக்கான பரிசோதனை மேற்கொள்ளுவது நல்லது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடாவருடம் இச்சோதனையையைச் செய்துகொள்ளுவது அவசியம். அதிலும், எலும்புத்தேய்மானம் இருப்பது சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் ஆறுமாதத்திற்கொரு முறை இப்பரிசோதனையைச் செய்தல் வேண்டும்.
வருமுன் காப்போம்: கூடியவரையில், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளாமல் இருப்பது முக்கியம். குறிப்பாக வயதானவர்கள் இருக்கும் வீடுகளில், தரையில் பொருட்கள், அதிலும் வழுக்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இன்று பல வீடுகளிலும் மிக வழவழப்பான தரைகள் இருக்கின்றன. இவற்றில் தண்ணீர் சிந்தியிருந்தால், வழுக்கிவிழும் அபாயம் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. இத்தகைய வீடுகளில் தரை விரிப்புகைளைப் பயன்படுத்தலாம். அவ்வளவு வசதி இல்லாவிடில், கூடியவரை தரையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் வைத்துக்கொண்டாலே போதுமானது. படிகளில் தேவையான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவதும், குளியலறைகளில் வழுக்காத தரை (Anti-skid tiles) இருக்குமாறு அமைப்பதும் விபத்துகளைக்கட்டுப்படுத்தும்.
வலிமையான எலும்புகளே வலியற்ற வாழ்வுக்கு ஆதாரம்.

வருமுன் காத்தால், வலியின்றி வாழலாம்

Sunday, February 07, 2010

Pistachios: The Heart-Healthy Nuts That Protect Against Cancer

Pistachio nuts not only taste great, they're also packed with heaps of healthful nutrients and have anti-cancer, heart-health and eye health benefits.

Pistachios are related to the cashew, peach and mango family. They are high in fiber and, in fact, a serving of pistachios contains more fiber than half a cup of broccoli. They are a good source of protein and potassium, and provide good amounts of mother minerals like magnesium, copper and phosphorus. They are also a good source of the gamma-tocopherol form of Vitamin E, found to protect against lung and prostate cancer.

Pistachios are the richest source of phytosterols - cholesterol-like compounds found in plants which may have anti-cancer and heart-health properties - among all of the tree nuts. They are also high in the amino acid arginine, which helps to enhance blood flow to all areas of the body, and are the richest source of the phytochemical lutein, excellent for eye health, compared to any other tree nut.

Pistachios and Cancer
Acording to data presented at a Cancer Prevention Research Conference in Houston recently, eating a handful of pistachios daily is associated with protecting against lung cancer.

"It is known that Vitamin E provides a degree of protection against certain forms of cancer. Higher intakes of gamma-tocopherol, which is a form of Vitamin E, may reduce the risk of lung cancer," said one of the researchers in a statement to the press.

"Pistachios are a good source of gamma-tocopherol. Eating them increases intake of gamma-tocopherol so pistachios may help to decrease lung cancer risk."

After a six-week controlled clinical trial, researchers found that subjects who ate pistachios had significantly higher serum gamma-tocopherol levels and Vitamin E levels than the control group not eating the nuts. This substantially increased amount of gamma-tocopherol in the body of pistachio eaters could help lower the risk of not only lung cancer but other cancers such as prostate cancer as well, as found in previous studies.

One of the study authors said:

"Pistachios are one of those 'good-for-you' nuts, and 2 ounces per day could be incorporated into dietary strategies designed to reduce the risk of lung cancer without significant changes in body mass index,"

"Other food sources that are a rich source of gamma-tocopherol include nuts such as peanuts, pecans, walnuts, soybean and corn oils."


Pistachios For A Healthy Heart

Pistachios contain an amazing four heart-healthy substances- high phytosterol, gamma tocopherol, arginine, and high monosaturated fat content. This makes them an excellent addition to the diet to help fight heart disease and improve circulation.

Previous studies have found pistachios to be a heart-healthy food. Healthy subjects who ate twenty percent of their calories as pistachios for three weeks had decreased levels of oxidative stress, which causes damage to cells and is involved in many diseases. These nuts are also loaded with immune system boosting antioxidants.

Pistachio nuts are delicious eaten as a snack straight from their shells, or add chopped pistachios to cereals, muffins or as a coating for fish, meat or chicken. To maintain the freshness of the nuts, store them in an airtight container.
Courtesy: www.healthymuslim.com

Saturday, February 06, 2010

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்?

ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.

சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.

எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.

இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.

அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.
 

Wednesday, February 03, 2010

முதிர் குழந்தைகளை உருவாக்கும் தொலைகாட்சிகள்

'ஏய் அம்மாவின் புடவ கலர்ல வானம் இருக்குடி' 'ஆமாம்டா அதில் விதவிதமா யாரோ ஓவியம் வரைஞ்சிருக்காங்க பாரு' தன் குழந்தைகள் வானத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததை கண்ட பெற்றோர்களின் மனம் குதூகலித்தது.

அலுவலகத்தின் டென்ஷனுடன் படுக்கையில் சாயும் தந்தையின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து 'யாரு உனக்கு கன்னத்துல தாடி ஒட்டி விட்டாங்க' என்று தன் குழந்தை கேட்கும் அந்த தருணங்களில் அலுவலக டென்ஷன் எல்லாம் பறந்துப் போகும் அந்த விந்தை பெற்றவருக்கு புதிராகவே இருக்கும்.

நேற்றிருந்த அந்த சந்தோஷங்கள் அடியோடு எவரோ திருடிக் கொண்டு போய்விட்ட மாதிரி இல்லங்களிலிருந்து துடைக்கப்பட்டு விட்டன. இன்றைக்கு அந்த பிஞ்சுகளின் மன கிளர்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரமூட்டுவதே வன்முறை விளையாட்டுகள் தான் எனும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.

அடுப்பங்கரையில் இருக்கும் கரண்டிகளை கையில் எடுத்துக் கொண்டு 'டுமீல்' 'டுமீல்' என்று சத்தமிட்டப்படியே தன் சக நண்பர்களை துரத்திக் கொண்டு செல்வது தான் அவர்களை பொருத்தவரை நாகரீக விளையாட்டு.

'டாடி ஒழுங்கா அத கொடுத்துடு இல்லேனா சுட்டு தள்ளிடுவேன்' கையில் இருக்கும் பொருள் தந்தையை நோக்கி உயரும் போது இதை ரசிக்கும் மன நிலை நிச்சயம் பெற்றோருக்கு இருக்காது.

எங்கு தொலைந்து போனது அந்த பிஞ்சுகளின் இயற்கையான மழலைத் தன்மை..?

'என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன்' என்பது போல் எதிரே தொலைக் காட்சிப் பெட்டி.

மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். யாரும் அவனிடம் வம்பு செய்தால் 'என்கிட்ட வச்சுக்காத.. எங்க டாடிகிட்ட சொல்லிடுவேன்' என்று சொல்லும் அவனுக்கு மூன்று வயது கடந்து விட்டால் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக் கொள்ள நிறைய ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். அந்த நடிகர்களின் ஆக்ரமிப்பிற்கு பிறகு இவனது நடை உடை பாவனைகள் கூட மாறி தானே அந்த ஹீரோ என்று கற்பனை சினிமா உலகின் உறுப்பினராகிறான்.

பள்ளிக் கூடம் முடிந்து வீடு வந்தது முதல் இரவு தூங்கும் வரை உளவியல் ரீதியாக குழந்தைகளை தாக்கி அவர்களின் பிஞ்சுத் தன்மையை சாகடிக்க வெடிக்காமல் ஆனால் வெடித்துக் கொண்டே இருக்கும் வெடி குண்டாக ஒவ்வொரு வீட்டிலும் மிக தாராளமாக ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது தொலைக் காட்சி.

ஒளிப்பரப்பாகும் சினிமாக்களும் அதில் வரும் வன்முறைகளும் குழந்தைகளின் உள்ளத்தை வெகுவாக கவ்வி பிடித்து அதை நோக்கியே அவர்களை நகர்த்திச் செல்கின்றன.

உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன்
தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன்
சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன்
விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன்
படிப்பது தொலைக் காட்சிக்கு முன் என்று குழந்தைகளின் மொத்த நேரமும் தொலைக் காட்சி வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு இருக்கிறது.

தொலைக் காட்சி இயக்குனர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதில்லை. வீட்டிலிருக்கும் பெரியவர்களை விட அதிகமாக தொலைக் காட்சியை பார்க்கும் குழந்தைகள் பெரியவர்களை விட அதிகமாகவே பெரியவர்களின் சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக் கொண்டு விடுகின்றன என்பது ஆய்வுகளில் வெளி வரும் அதிர்ச்சிகரமான தகவல்களாகும்.

டீ.வி சீரியல்களில் குழந்தைகள் வக்கனையாக பேசுவதை இப்போதெல்லாம் சாதாரணமாக காணலாம். மழலைத் தன்மையின் அடையாளமே இல்லாத வசனங்கள் - நடிப்புகள்.

ஆன்மீகம் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் எண்ணிக்கையற்றத் தொடர்களில் கம்ப்யூட்டரால் நடத்தப்படும் 'டெக்னிக்' ஜாலங்கள் குழந்தைகளின் மனங்களில் வேறுவிதமான அதிர்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதன் விளைவை சக்திமான் சீரியல் மூலம் உலகம் கண்டது.

சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்து இறந்த சிறுவன். சக்தி மானை நம்பி சேற்றில் மூழ்கி இறந்துப் போன சிறுவர்கள் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.

நம்பிக்கை - விளையாட்டு - பேச்சு - பாவனை - நடவடிக்கை என்று குழந்தைகளின் மொத்த வாழ்வையும் தொலைக் காட்சி கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தையில் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் கெட்ட தாயாக, கெட்ட தந்தையாக, கெட்ட நண்பனாக, கெட்ட டீச்சராக, கெட்ட உலகின் வாசலாகவும் வாழ்க்கையாகவும் தொலைக் காட்சிகள் இருக்கின்றன குழந்தைகளுக்கு.

யாழ் இனிது குழல் இனிது என்பார் மழலைச் சொல் கேளாதோர் - என்ற மழலை மொழியை மனக்கச் செய்யும் பழமொழிகள் வரும் காலத்தில் அர்த்தமற்றுப் போய்விடும் அபாயம் தென்படுகிறது.

யார் பொறுப்பு?

திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை அவை சமூக சிந்தனை - குழந்தைகள் நலன் - அவர்களின் எதிர்கால அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படுவதில்லை. எடுக்கப்படுவதில்லை. அவர்களின் குறிக்கோள் எல்லாம் பணம் ஒன்றுதான். இத்தகைய மனிதத்துவம் அற்ற கெடுதியாளர்களிடமிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றும் முழு பொறுப்பும் பெற்றோர்கள் கைகளில் தான் உள்ளன. இதில் அதிக பொறுப்புக்குரியவர் பெற்றத் தாயே.

'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே

அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற தமிழ் பாடல் குழந்தை வளர்ப்பில் அன்னையின் பங்கை அழகாக சொல்லியுள்ளது.

குழந்தைகள் பச்சை மண் போன்றவர்கள். அதாவது தாய் என்ற குயவன் கையில் கிடைத்த பச்சை மண். அதை பயன்படும் விதத்தில் உருவாக்கும் கடமைக்குரியவள் தாய் தான்.

நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில் இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும்.

அல்லது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் குழந்தைகளை விடுவித்து விடுவதையும் பார்க்கிறோம். இந்த சுதந்திரம் பெற்றோர்களையே எதிர்த்து சமயம் கிடைக்கும் போது அவர்களை வீட்டை விட்டே துரத்தும் நிலையைக் கூட ஏற்படுத்தி விடும்.

இரண்டு நிலையும் தவறு.

குழந்தைகளை அதி தீவிரமாக கண் காணித்து, அவர்களோடு பழகி, அதட்டி - அரவணைத்து, கண்டித்து - கொஞ்சி, திருத்தி - பாராட்டி பழக வேண்டும். குழந்தைகளிடமிருந்து நாம் ஒதுங்கும் ஒவ்வொரு நிமிடமும் தொலைக் காட்சி அவர்களிடம் நெறுங்குகிறது என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம்.

உண்ணும் போது - படிக்கும் போது - உடை உடுத்தும் போது - விளையாடும் போது தொலைக் காட்சியை அணைத்து விடுங்கள். அந்த நேரங்களில் என்ன பிடித்தமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும் குழந்தைகள் மீது அக்கறையுள்ள தாய் அந்த தொடர்களை புறக்கணித்துத் தான் ஆக வேண்டும்.

பிள்ளைகளை விட தொடர்களே முக்கியம் என்று கருதும் எந்த தாயும் வன்முறை, பாலியல் வக்கிரங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை நோக்கி தன் குழந்தைகளை தள்ளுகிறாள் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய முதிர் குழந்தைகளின் எதிர்கால வீழ்ச்சிக்கு பெற்ற அன்னையே (தந்தை மட்டும் விதி விலக்கா? ) பொறுப்பேற்க வேண்டும்....

Tuesday, February 02, 2010

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்

உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?

உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.

இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.

தயாரா நீங்கள்?

1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்

முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், "வயதான பின்னர் செய்வேன்" என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, "இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்" என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். "தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்" என்பதும் "தொழாதவன் காஃபிராகி விட்டான்" என்பதும் "முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை" என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

2. கனவை நனவாக்குங்கள்

நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!

நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்" என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5. இஸ்லாத்தைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!

இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரழப்பாக முடியும். ஆகவே இஸ்லாத்தைப் படியுங்கள். இறைமறையைத் திறந்து அதனை அர்த்தத்துடன் படியுங்கள். எம்பெருமானாரின் வாழ்வைப் படியுங்கள். இஸ்லாம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்பதை உறுதிபடுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள்

ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்..... இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவுகூரப்படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை உங்களுக்கான நன்மைகள் உங்கள் ஏட்டில் பதியப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை மறுமைநாள்வரை உங்களுக்குப் பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்

இது நபிவழியாகும். எனவே திருமணம் செய்வதன் மூலம் ஒரு நபிவழிக்கு உங்கள் மூலமாக உயிர் கொடுங்கள். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக் காணும் நல்ல மக்களாகவும் அவர்களை வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப்படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, அல்லாஹ் உங்களை மன்னிப்பதில்லை! வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்

நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறைவேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நினைவில் வையுங்கள்: நீங்கள் ஹஜ் செய்திருந்தால்கூட, நீங்கள் யாருக்காவது கடனாளியாக இருந்தால் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படாமல் போகலாம். எம்பெருமானார், கடனாளியின் ஜனாஸாவுக்குத் தொழ வைக்க முன்வராததை எப்போதும் நினைவில் வையுங்கள்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்

ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதோருக்கு என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவுகூரும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.

இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.

எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை!. இவற்றை இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.