Thursday, November 26, 2020

Quran Recitation

இதை டவுன்லோடு செய்யவேண்டியது இல்லை.இந்த லிங்க் தொட்டு 30 ஜூஸ் குராணையும் கேட்டுக்கொள்ளலாம்


Juz 1 ⇨ http://j.mp/2b8SiNO

Juz 2 ⇨ http://j.mp/2b8RJmQ

Juz 3 ⇨ http://j.mp/2bFSrtF

Juz 4 ⇨ http://j.mp/2b8SXi3

Juz 5 ⇨ http://j.mp/2b8RZm3

Juz 6 ⇨ http://j.mp/28MBohs

Juz 7 ⇨ http://j.mp/2bFRIZC

Juz 8 ⇨ http://j.mp/2bufF7o

Juz 9 ⇨ http://j.mp/2byr1bu

Juz 10 ⇨ http://j.mp/2bHfyUH

Juz 11 ⇨ http://j.mp/2bHf80y

Juz 12 ⇨ http://j.mp/2bWnTby

Juz 13 ⇨ http://j.mp/2bFTiKQ

Juz 14 ⇨ http://j.mp/2b8SUTA

Juz 15 ⇨ http://j.mp/2bFRQIM

Juz 16 ⇨ http://j.mp/2b8SegG

Juz 17 ⇨ http://j.mp/2brHsFz

Juz 18 ⇨ http://j.mp/2b8SCfc

Juz 19 ⇨ http://j.mp/2bFSq95

Juz 20 ⇨ http://j.mp/2brI1zc

Juz 21 ⇨ http://j.mp/2b8VcBO

Juz 22 ⇨ http://j.mp/2bFRxNP

Juz 23 ⇨ http://j.mp/2brItxm

Juz 24 ⇨ http://j.mp/2brHKw5

Juz 25 ⇨ http://j.mp/2brImlf

Juz 26 ⇨ http://j.mp/2bFRHF2

Juz 27 ⇨ http://j.mp/2bFRXno

Juz 28 ⇨ http://j.mp/2brI3ai

Juz 29 ⇨ http://j.mp/2bFRyBF

Juz 30 ⇨ http://j.mp/2bFREcc

அனைவரும் இதை பயன் படுத்தி கொள்வோம்...

நன்மையை பெறுவோம்

Saturday, November 23, 2019

அகவை கற்கண்டு

என்னவள்
எனது இனியவள்
சொல்லவள்
சுவையுள்ளவள்
கண்ணவள்
கலைவடிவானவள்
நல்லவள்
நற்பண்புள்ளவள்
இடையவள்
என் உடையவள்

நீ என்றென்றும் என் மனதில் இளையவள்

உன் அகவை இன்றோடு நாற்பத்தி இரண்டு
நீ தான் எனக்கு பிடித்த கற்கண்டு!

- உன் நினைவில் உன் அன்பு மணாளன்

Friday, September 13, 2019

பஜ்ருக்கு எழுவோம் தொழுவோம் பணிகளை தொடங்குவோம்

பஜ்ருக்கு எழுவோம் தொழுவோம் பணிகளை தொடங்குவோம்


அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.


நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா
அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” - (அபூதாவூத்)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத்
தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில்
புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன்
வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான்.
வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!

படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே  கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)

நபிகளாரின் வேதனை:

உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?”
என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள்
வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)

ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும்
அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: 
“ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவே எண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).

அண்ணலாரின் அமுத மொழிகள்:

மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி
நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)

“சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு நாளும் நுழைய மாட்டார்” (முஸ்லிம்)

யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (தபரானி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்:
யார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்
தொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின் பட்டியலிலும்,அல்லாஹ்வின் தூதுக்குழுவினரின் பட்டியலிலும்
எழுதப்படுகின்றார்.”

ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை
தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம்

அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:
“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு
வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில்
இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)

பஜ்ரில் தூங்குவோரின் நிலை:

அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்”
மாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து
அல்லாஹ்கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (46:25)

ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து
இறைவன்குறிப்பிடுகின்றான் : “திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம்
அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)

லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே
அல்லாஹ்கூறுகின்றான்: “எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமாஇருக்கிறது?” (11: 81)

ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் :
“இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம்
வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)

இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவேதான், மக்கத்து சமூகமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின்
செய்தியைஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை இவ்வாறுஇருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா? அதுஅவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)

(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.

2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.

2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.

ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும்
அநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.

இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

மரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த
ஐயமும் எவருக்கும் இருக்க முடியாதுதான். ஆனால், துர் மரணம் என்பது…?

அல்லாஹ்வின்தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர் மரணம் அல்லவா? அல்லாஹ் பாதுகாப்பானாக!

“யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின்
பாதுகாப்பில்இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?


பஜ்ருக்கு விழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்

நாம் செய்ய வேண்டியது என்ன?

1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்)

என்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக்
கொள்ளலாம் என்றல்ல!)

2) படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.

3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.

4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்

5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்

7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது
என்பதாக உறுதி எடுங்கள்.

வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.

10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத்
தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள்
அதில்தான்அடங்கியுள்ளது.

(முற்றும்)

குறிப்பு: ஒரு குழுமத்தில் எழுதியவர் பெயர் இல்லாமல் இருந்த இந்த பயன்மிக்க கட்டுரையை பகிர்ந்தேன்.

வைகறை சிந்தனைகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் பேரா. எம் எச் ஜவாஹிருல்லா அவர்களின்

வைகறை சிந்தனைகள் - Play List

வைகறை சிந்தனை - 1

வைகறை சிந்தனை - 2

வைகறை சிந்தனை - 3

வைகறை சிந்தனை - 4

வைகறை சிந்தனை - 5

வைகறை சிந்தனை - 6

வைகறை சிந்தனை - 7

வைகறை சிந்தனை - 8

வைகறை சிந்தனை - 9

வைகறை சிந்தனை - 10

வைகறை சிந்தனை - 11

வைகறை சிந்தனை - 12

வைகறை சிந்தனை - 13

வைகறை சிந்தனை - 14

வைகறை சிந்தனை - 15

வைகறை சிந்தனை - 16

வைகறை சிந்தனை - 17

வைகறை சிந்தனை - 18

வைகறை சிந்தனை - 19

வைகறை சிந்தனை - 20

வைகறை சிந்தனை - 21

" இதில் குறிப்பிடும் வசனம் எண் தவறாக உள்ளது. 107 வது அத்தியாயம் வசனங்கள் 4 முதல் 7 வரை என்றிருக்க வேண்டும். திருத்திக் கொள்க"

வைகறை சிந்தனை - 22

வைகறை சிந்தனை - 23

வைகறை சிந்தனை - 24

வைகறை சிந்தனை - 25

வைகறை சிந்தனை - 26

வைகறை சிந்தனை - 27



Click the link

Tuesday, May 01, 2018

கண்ணீர் - கவிதை

கண்ணீர்


இரு கரமேந்தி
இறைவனிடம் இறைஞ்சிடும் போது
இயல்பாய் தோன்றிடும் நீர்.

துயர் கண்டு
துவண்டிடும் போது
துடிப்பில் தோன்றிடும் நீர்.

தவறினை உணர்ந்து
திருந்திடும் போது
தவறாது தோன்றிடும் நீர்.

கல் மனதினையும்
கரையச் செய்திடுமே
கன்னங்களில் வழிந்தோடும் நீர்.

- உம்மு ரய்யான் 

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது

وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ‌ؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا‏ 
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
(அல்குர்ஆன்: 17:81)

Sunday, January 07, 2018

மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! – முஸ்லிம் சட்ட வாரியம்



மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது!
பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது!

“அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு”

திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது.

லக்னௌவில் 24 டிசம்பர் 2017 அன்று நடைபெற்ற வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் மௌலானா ராபே ஹஸன் நத்வி கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். மேலும் வாரியம் சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.



இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு நேர் எதிரான சட்டம் ஆகும்; முஸ்லிம் பெண்களின் குழப்பங்களையும் கவலைகளையும் சிரமங்களையும் அதிகப்படுத்துகின்ற சட்டம் ஆகும். மேலும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் வெளிப்படையான தலையீடாகத்தான் இந்தச் சட்டம் இருக்கின்றது. இந்தத் தலையீடு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு நேர் எதிரானதாகவும் முத்தலாக் தொடர்பாக 2017 அக்டோபர் 17 அன்று நாட்டின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நேர் முரணானதாகவும் இருக்கின்றது.

இந்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுபவையாகவும் இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். முத்தலாக்கினை சட்டவிரோதமானதாக, நடைமுறையாகாதவொன்றாக இந்தச் சட்டத்தில் ஒரிடத்தில் சொல்லப்பட்டிருக்க, இன்னோர் இடத்தில் முத்தலாக் ஒரு குற்றம் எனச் சொல்லப்பட்டு அதற்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. தலாக் சட்டவிரோதமாக்கப்பட்டு நிறைவேறாமல் போகின்ற போது தண்டனை எதன் பெயரால் வழங்கப்படுகிறது?

இந்தச் சட்டத்தின் 4, 5, 6 ஆகிய பிரிவுகள் தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களுடன் (எடுத்துக்காட்டாக Guardians and Wards Act, 1890 என்கிற சட்டத்துடன்) முரண்படுகின்றன. மேலும் இவை நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14, 15 ஆகிய பிரிவுகளுக்கும் நேர் எதிரானவையாய் இருக்கின்றன.

முத்தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கும் பிற முஸ்லிம் பெண்களுக்கும் இடையில் இந்தச் சட்டத்தில் எந்தவொரு அடிப்படையும் இன்றி பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கணவனை குற்றவாளியாக அறிவிப்பதில் அவனை மணம் புரிந்திருந்த அவனுடைய மனைவியின் விருப்பமும் கருத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தம்பதியரின் குழந்தைகளின் பராமரிப்பு, நலம் குறித்து அடியோடு எந்தவிதமான குறிப்பும் சொல்லப்படாமல் விட்டுவிடப்பட்டுள்ளது.

எந்தச் சமூகத்தார் தொடர்பாக இந்தச் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தாரின் பொறுப்பாளர்களுடனோ, தலைவர்களுடனோ கலந்தாலோசிக்கப் படாததும், அவர்களின் ஆலோசனைகள் பெறப்படாததும், எந்தவொரு முஸ்லிம் அமைப்புடனும் தொடர்பு கொள்ளப்படாததும் வியப்புக்குரியதாகும். அதுமட்டுமல்ல நம்பகமான எந்தவொரு பெண்கள் அமைப்புடனும் கூட தொடர்பு கொள்ளப்படவில்லை.

எனவே நடப்புக் கூட்டத் தொடரில் இந்தச் சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தேவைப்படுமாயின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடனோ, முஸ்லிம் பெண்களை சரியான முறையில் பிரதிநிதிப்படுத்துகின்ற அமைப்புகளுடனோ கலந்தாலோசித்த பிறகு பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற அதே வேளையில் இஸ்லாமிய ஷரீஅத்துடனும், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துடனும் இயைந்து போகின்ற சட்டம் ஒன்றை வகுத்து தாக்கல் செய்யுமாறு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றது.

இந்தச் சட்டம் இஸ்லாமிய ஷரீஅத்துக்கும் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் நேர் எதிரானதாகவும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் இருப்பதால் இந்தச் சட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் இறங்கியுள்ளது. இனி வரும் நாள்களில் இது தொடர்பாக எல்லா மட்டங்களிலும் அனைத்து விதமான முயற்சிகளிலும் வாரியம் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை விரைவில் பிரதமரை சந்தித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தின் தலைவர் எடுத்துரைப்பார் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.

– அபுமரியம்

நன்றி: மக்கள் உரிமை

Tuesday, January 15, 2013

கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு.

நாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். கால்களின் மூட்டுகளில் வலி அதிக மாக இருக்கும். கால்களை சற்று நீட்டி உட்கார்ந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நினைப்போம். கால்களை நீட்டவும் இடம் இருக்காது. காலை மாற்றி வைத்துக் கொள்ள கூட இட வசதி இருக்காது. எழுந்து வரவும் மனமும் இருக்காது அப்பொழுது கால்களில் ஏற்படும் மூட்டுவலி உடனடியாக நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதைச் செய்தால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி உடனே நீங்கிவிடும்.

கால்களை நீண்ட நேரம் மடக்கி அமர்ந் திருப்பதால், அந்த இடத்திலுள்ள நரம்புகள் மடங்குவதால் இரத்தம் ஓடுவதில் தேக்கம் ஏற்பட்டு, ரத்தம் ஓடுவதில் தடை ஏற்படுத்துகிறது. உடலில் எந்த இடத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் வலி உண்டாகின்றது. வலி ஏற்படுவதின் முக்கிய காரணமே இரத்த ஒட்ட தடைதான்.

நமது இருதயம் சுருங்கி, விரிந்து இரத்தத்தை நரம்புகளில் செலுத்துகிறது. அப்பொழுது ஒரு துடிப்பு ஏற்படுத்துகிறது. அந்த துடிப்பின் மூலமே ரத்தத்தை நரம்பு களில் செலுத்த முடிகிறது. அந்த துடிப்பே இருதய துடிப்பு எனப்படுகிறது. இந்த துடிப்பை ஸ்டதஸ்கோப் என்ற கருவியின் மூலம் மருத்துவர்கள் அறிகிறார்கள். இதன் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தின் வலிமையையும், உடல் நலத்தையும் அறிய முடிகிறது. உடல் நலம் பாதிக்கும் பொழுது, இந்த துடிப்பும் மாறுபடு கின்றது. இரத்தம் உடலின் பல பாகங்களுக்கு முறையாகச் செல்வதற்கு பல்வேறு இடங்களில் நரம்புகளில் துடிப்பு ஏற்படுத்தி செலுத்தப்படுகிறது. அந்த துடிப்பை உடம்பில் பல இடங்களில் அறிய முடிகிறது. அவை மார்பு, கைகள், உச்சி, புருவம், கண்டம், நாசி, காது, உந்தி, காமியம், குதிகால் சந்து முதலியன ஆகும்.

மனித உடலில் எழுபத்தியிரண்டாயிரம் நாடி நரம்புகள் இருப்பதாக சித்த வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்தனை நரம்புகளிலும் இரத்தம் தொடர்ந்து செல்ல, துடித்து தள்ளப்படுகிறது. அந்த துடிப்புகள் வெளியில் தெரிவதில்லை. இரத்தம் நரம்புகளில் தொடர்ந்து முறையாக செல்ல நம் உடலில் மின்சார ஒட்டம் ஏற்பட இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களும் செம்பு தாதுக்களும், உடலில் ஆகாரம் ஜீரணம் ஆக உருவாகும் அமிலங்களும் கலந்து மின்சார அதிர்வுகள் உருவாகின்றன. அந்த அதிர்வுகள் தான் மின்னோட்டமாக மாறி, இரத்த ஓட்டம் முறையாக செல்ல காரணமாகிறது.

சில நபர்களுக்கு உடலில் நாடித்துடிப்பு குறைபாடு ஏற்படுகிறது. இந்த நாடித் துடிப்பு குறைபாடுகளால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நாடித் துடிப்பு குறைபாடு மின்னோட்ட குறைவினால் உண்டாகின்றன. இந்த குறைபாடு நீங்க உலோக சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் ஊட்டச்சத்து உணவுகள் உண்டு வந்தால், உடலில் உருவாகும் ஜீரண அமிலங்களும் இணைந்து, மின்னூட்டம் ஏற்பட்டு நாடித் துடிப்பு குறைபாடு நீங்கி, ஆரோக்கியம் அடைய முடியும்.

உடலில் மின்னூட்டம் இரண்டு மண்டலங்களாக இயங்குகிறது. உடலின் வலது பக்கம் ஒரு மண்டலமாகவும், இடது பக்கம் ஒரு மண்டலமாகவும் இயங்குகிறது. வலது பக்க மண்டலம், வலது கை, கால் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து, தலைபகுதி வரை மின்னோட்டம் நடைபெறுகிறது. 

இப்பொழுது நீண்டநேரம் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது உண்டாகும் வலியை நீக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வொரு காலிலிருக்கும் ஐந்து விரல்களிலிருந்தும் தனி வழியாக மின்னூட்டம் தலைப்பகுதி வரை செல்லு கிறது. கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதால், அந்த பகுதியில் நரம்புகள் மடங்கி, ரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்று வலி ஏற்படுகிறது. அந்த இரத்த ஓட்டம் தடைபடாமல் விரைவாக செல்வதற் காக நம் கால்களில் மின்னூட்டத்தை விரைவு படுத்த மின்தூண்டுதல் ஏற்படுத்தலாம். கால் களில் உள்ள கட்டை விரல்களிலிருந்து, ஒவ்வொரு விரலாக, இடது கை கட்டை விரலினாலும், சுட்டு விரலினாலும் , இடது கால் கட்டை விரலின் நகத்தின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் பிடித்து வலது புறமாகவும், இடது புறமாகவும் உருட்டினால் விரலின் நுனியில் மின் தூண்டல் ஏற்பட்டு தலைபகுதி வரை மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்தூண்டுதலால் தடைபட்ட இரத்த ஓட்டம் தடையை தாண்டி செல்ல ஆரம்பிக்கிறது. இரத்த ஓட்டம் நடைபெறுவதால் வலி குறைகிறது. இப்பொழுது காலில் உள்ள ஒவ்வொரு விரலையும், இடதுபுறம், வலபுறம் என மாற்றி நாற்பது தடவை உருட்டவும் விரல்களில் தொடர்ந்து மின்ஒட்டத் தூண்டுதல் ஏற்படுவதால், தொடர்ந்து இரத்த ஓட்டம் ஏற்பட்டு தடை விலகி வலியும் நீங்கு கிறது. இதே மாதிரி வலது கால் விரல்களையும். கைவிரல்களில் எல்லா விரல் களையும், கைவிரல்களில் எல்லா விரல் களையும் உருட்டவும். உங்களுக்கு எந்த கால் விரல்களை, எந்த கைவிரல்களினால் உருட்ட முடியுமோ அப்படி செய்து கொள்ளலாம். 

கூட்டத்தில் தரையில் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு தெரியாமல் கூட, இடது கால் விரல்களை வலது கை விரல்களினாலும், வலது கால் விரல்களை, இடது கை விரல்களினாலும் உருட்டி விடலாம். விரல்களை உருட்டி சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும். கால்களில் வலி வரும்பொழுது செய்துதான் பாருங்களேன்.

சிலபேருக்கு கைகளில் வலி, உளைச்சல், கை மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் வலி, மற்றும் சில பெண்களுக்கு கைகளை தூக்கி தலைவாரி பின்னல் போடமுடியாது. ஜாக்கெட் அணிந்து கொள்ள கையை தூக்க முடியாது. முதலிய தொந்திரவுகளுக்கு கை விரல்களை, அடுத்த கைவிரல்களினால் ஒவ்வொரு விரலையும் நாற்பது தடவை வலது இடதாக உருட்டி விடுவீர்களானால் வலி குறைந்துவிடும், தினமும் காலையும், மாலையும் விரல்களை உருட்டி பயிற்சி செய் வீர்களானால் முற்றிலும் வலி போய்விடும்.

எளிய இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம் செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி போய்விடுமா என்று எண்ண வேண்டாம்? செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.

தினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள் நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மலரட்டும்! இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.

நன்றி : நல்லாசிரியர் வி. சுந்தர்ராஜன், 
வெளியீடு : கீற்று 

Tuesday, January 01, 2013

A beautiful poem – I'm Malakul Maut

It was early in the morning at four,
When death knocked upon a bedroom door.

Who is there? The sleeping one cried.
I'm Malkul Maut (Angel Of Death), let me inside.

At once, the man began to shiver,
As one sweating in deadly fever,

He shouted to his sleeping wife,
Don't let him take away my life.

Please go away, O Angel of Death!
Leave me alone; I'm not ready yet.

My parents and family on me depends,
Give me a chance, O please prepense!

The angel knocked again and again,
Friend! I'll take your life without a pain,

Tis your soul Allah requires,
I come not with my own desires..

Bewildered, the man began to cry,
O Angel I'm so afraid to die,

I'll give you gold and be your slave,
Don't send me to the unlit grave.

Let me in, O Friend! The Angel said,
Open the door; get up from your bed,

If you do not allow me in,
I will walk through it, like a Jinn.

The man held a gun in his hand,
Ready to defy the Angel's stand..

I'll point my gun, towards your head,
You dare come in; I'll shoot you dead.

By now the Angel was in the room,
Saying, O Friend! Prepare for you doom.

Foolish man, Angels never die,(except when Allah will give death to everyone on day of kayamat)
Put down your gun and do not sigh.
Why are you afraid! Tell me O man,
To die according to Allah's plan?
Come smile at me, do not be grim,
Be Happy, to return to Him.

O Angel! I bow my head in shame;
I had no time to take Allah's Name.

From morning till dusk, I made my wealth,
Not even caring for my own health.

Allah's command I never obeyed,
Nor five times a day I ever prayed.

Ramadan came and a Ramadan went,
But I had no time to repent.

The Hajj was already FARD on me,
But I would not part with my money.

All charities I did ignore,
Taking usury more and more.

Sometimes I sipped my favorite wine,
With flirting women I sat to dine...

O Angel! I appeal to you,
Spare my life for a year or two.

The Laws of Quran I will obey,
I'll begin my SALAT this very day.

My Fast and Hajj, I will complete,
And keep away from self-conceit.

I will refrain from usury,
And give all my wealth to charity,

Wine and wenches I will detest,
Allah's oneness I will attest.

We Angels do what Allah demands,
We cannot go against His commands..

Death is ordained for everyone,
Father, mother, daughter or son.

I’m afraid this moment is your last,
Now be reminded, of your past,

do understand your dreadful fears,
But it is now too late for your tears.

You lived in this world, two score and more,
Never did to you, your people adore.

Your parents, you did not obey,
Hungry beggars, you turned away.

Your two ill-gotten, female offspring,
In nightclubs, for livelihood they sing.

Instead of making many more Muslims,
You made your children non-Muslims?

You did ignore the Mua'dhin Adhaan,
Nor did you read the Holy Quran.

Breaking promises all your life,
Backbiting friends, and causing strife

From hoarded goods, great profits you made,
And for your poor workers, you underpaid.

Horses and cars were your leisure,
Moneymaking was your pleasure.

You ate vitamins and grew more fat,
With the very sick, you never sat.

A pint of blood you never gave,
Which could a little baby save?

O Human, you have done enough wrong,
You bought good properties for a song.

When the farmers appealed to you,
You did not have mercy, tis true.

Paradise for you? I cannot tell,
Undoubtedly you will dwell in hell.

There is no time for you to repent,
I'll take your soul for which I am sent.

The ending however, is very sad,
Eventually the man became mad

With a cry, he jumped out of bed,
And suddenly, he fell down dead.

O Reader! Take moral from here,
You never know, your end may be near

Change your living and make amends
For heaven, on your deeds depends.

if this poem inspires you,
It can help someone too.

At least take some time, and do not ban
And send it to as many people as you can.
This poem may change many lives,
And Allah may have for you a great surprise.

- Received thru & Thanks to  [TAFAREG]

Monday, December 31, 2012

எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

எங்களுக்கும்
சொந்தமாய் கண்கள் உண்டு..
இருப்பினும் காமிரா மனிதர்களே
எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.!

கண்முன் நடந்தாலும் எதையும்
கண்டு கொள்ள மாட்டோம்.
ஆனால் ஊர் பற்றி எரியும் போது
கூடவே நாங்களும் அழுவோம்.!

நீதிக்கான
எங்கள் கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும்
காலக்கெடு உண்டு.!
அவை புஸ்வாணமாகிப் போகும்
ஊர் அடங்கிய பின்னே!

சினிமாக்கள் எங்களின் சிறைச்சாலைகள்.
தொலைக்காட்சிகள் எங்கள் சவப்பெட்டிகள்.

சுகம் காண்கிறோம் - நாம்
அடிமைகளாக வாழ்வதிலே..
விலை போகிறோம் என்பதை
பெரும்பாலும் அறியாமலே..!

நம் கோபங்களைக் கூட
யாரோதான் தீர்மானிக்கிறார்கள்.!
நம் தாபங்களை எல்லாம்
அவர் தம் செல்வம் கொழிக்க உபயோக்கிறார்கள்..

பொழுதுபோக்குகளில் தான்
எங்கள் பொழுதெல்லாம் போகிறது.
அழுது முடிக்கையில் தான் எம்
அவலங்கள் தெரிகிறது.

அரட்டை அரங்கத்தில் அழுகின்ற
மனிதர் நிலைகண்டு கண் கலங்குவோம்,
நித்தமும் கண்முன் கலங்கும்
மனிதர் நிலை கண்டு சிறு கவலையும் கொள்ளோம்.!

சொந்த மனசாட்சி எங்களுக்கென்று தனியே இல்லை.
புரட்சிகள் பேசும் எங்கள் இதயங்கள்,
தனியாளாய் மாறுகையில்
தறுதலைகளாக மாறும்.

தள்ளுவண்டி காய்கறி கடையாளிடம்
கிராம் குறையாமல் மிச்சம் பிடிப்போம்.
பளபளவென ஜொலிக்கும் வணிக வளாகத்திலே
மொத்தமாய் இழப்போம்..

ஊரெல்லாம் இலஞ்சமின்றி
இருக்க கனாக் காணுவோம்.!
கையூட்டை கச்சிதமாய்
எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் திணிப்போம்.

எல்லோரும் நல்லவராக இருக்கும்படியாய்
கனா காணுவோம்
எல்லோரும் என்பதில் நம் பெயரும் அடங்கியதே
என்பதை வசதியாய் மறப்போம்

தேனீர்க்கடையின் கூட்டு விவாதங்களில்
காந்தியின் அகிம்சைகளில் இம்சைகளை காண்போம்.
பகத்சிங்கின் போராட்டங்களில் பயத்தை படிப்போம்.
திப்புவின் வீரத்தில் ஓட்டைகள் வெடிப்போம்.
நேதாஜியின் முயற்சிகளில் குறைகளைக் காண்போம்.

இறுதியாய் பேசிப்பேசி கலையுகையில்
மொத்தமாய் தொலைவோம்
ஒரு துரும்பும் அசைக்க துப்பில்லா
வெட்டிப் பொம்மைகளாய்..

கண் முன் நடக்கும்
அவலம் கண்டு கலங்காதவரை...
முடிந்தும் தடுக்க முயலா
கொடுமைகள் தொடரும் வரை..
என்னவன் என்பதற்காய் தீயதையும்
ஆதரிக்கும் மனநிலை மாறாதவரை,
கொடுமைகள் கொடுமைகள் கொடுமைகள் என
எல்லாம் இப்படித்தான் வந்து செல்லும் -
இறுதியில் ஒரு நாள் எம்மையும் கொல்லும்.!

-Abbas Al Azadi

Saturday, December 29, 2012

Safety tips for Women

Here are some safety tips for sisters:

1. Always be aware of your surroundings

This applies whether you are traveling alone or in groups. Don’t just focus inwardly on your thoughts if you are alone, or your friends if you are together. Keep one eye out for your environment, looking out for suspicious characters, possible danger, etc.

Also, don’t assume that because your area has been "safe" thus far, that it will continue to be so.

2. Travel in groups

"There is safety in numbers" is not just a cliche. It’s true. Make a point of traveling together with other sisters, whether it’s on public transportation, on campus, in cars, etc.

3. Change the route you normally travel by

If you’ve taken the same bus, train or highway to get to work or school, change your route. Even if it takes you a little longer, your safety is more important. By changing your route, you can avert possible attacks or harassment from those who know your schedule, method and route of travel well. Please note though that you should avoid short cuts that take you through unfamiliar or unsafe areas.

4. Look confident

Walk with a straight posture and your arms swinging by your sides. Avoid slouching or walking like a victim. This makes you an easy target for attackers.

5. When riding by public transportation choose the right seat

If you are riding by bus or train, do not sit on the window seat as you may be "blocked in" by a potential assailant. Always select the seat next to the aisle so that you can quickly leave if necessary.

If you are taking public transportation alone after peak hours, sit as close to the driver as possible and/or choose the section of the bus/train that is most crowded. Try to get a seat near the exit as well.

6. If you are driving alone

Don’t think that if you are in a car, you’re safe. Windows should be up and doors locked even when driving to avoid unwanted passengers at intersections. When you are walking to your car, always have your keys ready, so that you can quickly get into your car.

But don’t just get in right away. Always check your car before entering, especially the back, for any intruders.

7. Never leave your car door unlocked

Even if it means for one minute to drop something off in the mailbox that’s a few feet away. Attackers have been known to lie in wait for such an opportunity.

8. Be careful in parking lots

Always be alert in parking lots, especially when it's dark. Ask someone to escort you to your car. Between cars and inside cars, it's easy for someone to hide and wait until an unalert person comes along.

9. If you are traveling by taxi

Always check the identification of the driver (usually located near the visor) and ensure that it matches the driver. Once inside, don't sit behind the driver as it may be easy for the driver to lock the rear passenger door. Always choose the adjacent seat .

In addition, avoid flagging taxis. Always order taxis so the driver can be traced if something happens.

10. Don’t use the walkman

If you’re used to listening to your walkman while outside, drop this habit, especially in isolated areas. With your walkman on, you cannot hear the approach of a possible attacker.

11. Note "safe houses" along your route

Mentally note houses at intervals on each route you take that can be used as "safe houses" if you are attacked, such as shops or houses that you know to be occupied by a friend or acquaintance.

12. When you make a call from a phone booth

After dialing the number you wish to call always turn around so that you have your back to the phone and may see who or what is coming your way. You will then be able to tell the person to whom you are speaking that you may be in trouble and you may be able to use the weight of the phone as a weapon. The door of a telephone box could be used to wedge in the limbs of the attacker.

13. Do not open the door of your home without checking

DO NOT open the door to your home without first checking from a window, peephole or by asking and verifying who it is. Instruct children to do the same.

14. Report any suspicious activity around your home

If you see people loitering on the streets near your house, call the police on a non emergency number and report it.

15. Invest in a cell phone

This is an invaluable safety device. Keep it with you at all times and keep emergency numbers on it. Also, keep it next to your bed before you go to bed at night. Cell phones were first popularized by women as a security device, business people came later.

16. Parking tips

Avoid parking in areas that are not well lit. Where possible, park close to a school or work entrance or in a parking garage that has an attendant.

If you see a suspicious person approaching or hanging around near your parked car, turn around and go back to an area where there are other people. Try to get an escort to your car through the campus or job security or local police.

17. Tell others about your whereabouts

Parents, spouses and friends should know where you are going and when you will be back, so that your absence will be noticed. Arrange a call in system with a friend if you live alone, whereby you call when you arrive home.

18. Trust your instincts

If you are walking somewhere and feel strange or scared, don’t ignore this feeling. Take extra precautions by walking a little faster to get to a more populated or well-lit area or change the route you’ve been driving on.

19. If you think you are being followed, change your route and activity.

You can cross the street, change directions, or enter a populated building or store. Do whatever is necessary to avoid being alone with the person who is following you. Inform a police officer or security official about the

follower.

20. Attract attention if you are in a dangerous situation.

Get others’ to pay attention to what's happening to you if you are under attack or being harassed. You can alert others by honking a car horn or loudly describing what is happening.

21. NEVER admit that you are alone

If someone calls your home and asks if you are alone, NEVER admit it. Ask who the caller is. If they refuse to identify themselves, calmly hangup. Keep the radio on in the house so that callers will get the impression that others are in the home too. Instruct children to do the same when they pick up the phone.

22. Obscene phone calls

If you receive an obscene call or a crank call, do not talk to the caller. Hang up if the caller doesn’t say anything, or as soon as s/he shouts obscenities. Hang up the phone calmly and do not slam it down. Note down the date and time of the calls. If they are persistent, inform local police.

23. If you are a student

Avoid studying in isolated classrooms in parts of the college campus that are not regularly patrolled by the school’s security officers.

24. In large buildings take the elevator, not the stairwell

Stairwells are usually quiet and dark. Most people take the elevator. But if someone creepy gets on, don’t hesitate to get off at the same time. Or, if someone is already on the elevator who you feel strange about, do not get on and wait for the next elevator.

By Samana Siddiqui

Wednesday, December 26, 2012

இறையச்சத்தை அதிகரிப்பது எப்படி?


இறையச்சத்தை அதிகரிப்பது எப்படி? - 

உரையாற்றுபவர் மௌலவி அப்துல் வதூத் ஜிப்ரி அவர்கள் 


சுவர்க்கத்தில் வீடு- அலாவுதீன் பாகவி

சுவர்க்கத்தில் வீடு – அலாவுதீன் பாக்கவி, நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம், வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம்